பாரதியும் .. நானும்...023

தமிழ்ச் சுடர் விருது கவிதைப் போட்டி

பாரதியும் .. நானும்...023

பாரதியும் நானும்.... 
அது என்ன? 
அடக்கமாய், அமைதியாய் , பாவலர்கள் இருக்கையிலே, 
நீ மட்டும் முண்டாசு கட்டி, முறுக்கு மீசை கொண்டு 
கண்களில் தீ சுடரோடு தனித்து நின்றாய்! 

பள்ளி நாட்களிலே பாரதி பாட்டு படித்து, 
பாரதியை படித்து, அழகு அன்பு 
அதிலே திளைத்த நாட்களுண்டு! 

அச்சமில்லை அச்சமில்லை என்றுறைத்த போதிலே, 
கவியே உன் மீது அன்பு கொண்டு இரசித்திருக்கிறேன் !
உன்னை !

உனக்கென இல்லாத போதும், 
பிறர்காய் நீ கேட்டாய்,
கொடுத்தலின் மேன்மை கற்றேன் உன்னிடம்!
 
சாதியும்,அடக்குமுறையும் மலிந்திருந்த நாளிலே , 
பெண்ணியமும், விடுதலையும் பேசிக்கிடந்த 
எங்கள் மகாகவியே! 

சக்தியை வேண்டி பாட்டேழுதிய உன்னிடம் , 
எனக்கொரு குறை இருந்தது பாட்டா... 
செல்லம்மாவை வறுமையில் விட்டிருக்கவேண்டா !
 
பாப்பா பாட்டு பாடிய நீயே, அக்கினி குஞ்சோன்றும் கண்டாய்! 
கண்ணனை இரசித்த உடன், சிவசக்தி அன்னையையும் தொழுதாய்! 
சிறு தெய்வ வழிபாடும் அறிந்தாய், கற்பனை நகரில் திரிந்தாய்! 

நீ பாடி கிடந்ததை எல்லாம், ஐயனே படிக்கவும் மகிழ்ச்சி துள்ளுதே!  
இன்றும் இரவில் என் பிள்ளைக்கு சின்னஞ்சிறு கிளியே பாடி, 
உறங்கவே செல்கிறேன் நானே!

- வித்யா லட்சுமி, சென்னை.