சுதந்திர காற்றை சுவாசிப்போம்...23

சுதந்திர தின கவிதை

சுதந்திர காற்றை சுவாசிப்போம்...23

சுதந்திரக் காற்றை சுவாசிப்போம் ....

சும்மா ஒன்றும் கிடைக்கவில்லை சுதந்திரம்!
ஒரே நாளிலும் நாம் வெற்றியடையவில்லை!
எத்தனை உழைப்புகள்! எத்தனை போராட்டங்கள்!
பல தலைவர்களின் பலநாள் போராட்டங்கள்!
கண்ணீரை மட்டுமா சிந்தினர்!
இரத்தத்தையும் தரத் தயங்கவில்லையே!
வ ஊ சிதம்பரனார் சிறையில்  செக்கிழுத்தார்!
மகாகவி பாரதி கவிதைகள் மூலம் தேசப்பற்றை வளர்த்தார்!
பாரதிதாசன் எழுத்துக்கள் மூலம் தேசப்பற்றை வளர்த்தார்!
தில்லையாடி வள்ளியம்மை இளம் வயதிலேயே உரிமைப் போராட்டம் நடத்தினார்!
திருப்பூர் குமரன் கொடிபிடித்துப் போராடினார்!
வேலுநாச்சியார் வெள்ளையனுக்கு எதிராக வெகுண்டெழுந்தார்!
தீரன் சின்னமலை படை திரட்டிப் போராடினார்!
கக்கன் தாய் மண்ணைக் காக்கப் போராடினார்!
செண்பகராமன் வெளிநாடுகளின் ஆதரவோடு போராடினர்!
மருது சகோதரர்கள் த ன்மானச் சிங்கங்களாய் வலம் வந்தனர்!
தூக்குக் கயிற்றை முத்தமிட்டு பலர் வீரமரணம் அடைந்தனர்!
பகத்சிங்கின் வீரம் அனைவரின் இரத்தத்திலும் பாய்ந்தது!
குயிலி தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்தினார்!
இவன் யார் நம்மை ஆள என்று வெறி கொண்டனர்!
வெள்ளையன் வேறு வழியில்லாமல் தவித்தான்!
தன் நாட்டிற்கே திரும்பிச் சென்றான்!
சுதந்திர நாட்டை திரும்பப் பெற்றோம்!
அரும்பாடு பட்டுப் பெற்ற சுதந்திரத்தை பேணிக்காப்போம்!
சுதந்திரக் காற்றை நாம் சுவாசிப்போம்!


- முனைவர். கோ. சுதாதேவி, கரூர்.