ஆணின் அட்தாச்சி பெண்

புதுமைப்பெண் கட்டுரைப் போட்டி

ஆணின் அட்தாச்சி பெண்

ஆணின் அட்தாச்சி பெண் 061

முன்னுரை
ஆண் என்ற அடைமொழியை அடையாளம் காணச்செய்பவள் பெண் தான். பெண்ணை பேணி காப்பாது ஆணின் கடமை என்றாலும்,அதை கொச்சைப் படுத்தும் சில ஆணாதிக்கம் பிடித்த அநியாயகாரர்களிடமிருந்து தன்னை மட்டுமல்லாது ஆணாதிக்கம் பிடித்த அவர்களையும் இந் சமுதாயத்தில் ஒரு அங்கமாக மட்டுமல்லாது ஒரு கவசமாக உருவெடுக்கச்செய்பவள் பெண் என்ற புனிதமே!.அப்பெண்ணைப்பற்றி சில செய்திகள்.

ஆணிண் அடிப்படையானவள்

ஒரு பெண் குழந்தை பெற்றால் என்றால் முதலில் அனைவராலும் கேட்கப்படும் முதல் வார்த்தை ஆணா! பெண்ணா! பெண் என்றால் மதிப்பு குறைவாகவும் ஆண் என்றால் வாழப்பிறந்தவன் என்றும் விமர்சிக்கப்படுகிறாள் பெண்.மேலும் அந்த ஆண்மகனை வளர்க்கும் போது சமுதாய சிந்தணைகளோடும்,சிறப்பு பெற்றவனாகவும் ஆளாக்குகிறாள் பெண் என்ற பேராறற்றள்.

பெண்மையை போற்றுவோம்

தனக்கென்று எந்த சுகபோக வாழ்க்கையை வாழாமல் தன்னை சார்ந்தவர்களுக்கும் தான்பெற்றெடுத்த பிள்ளைகளுக்ககாகவும் வாழ்க்கையை முழுவதுமாக வாழ்கின்றாள் பெண் என்ற தியாகி!

பொறுமையின் சிகரம்
எப்படிப்பட்ட இக்கட்டான சூழ்நிலை என்றாலும் தன்னையும் காத்துக்கொண்டு அனைத்து செயல்களையும் சிறத்தையோடு துல்லியமாக முற்போக்கு சிந்தணையோடு செயல்படும் பெண்மை என்றும் போற்றுதற்குரிதே! 

சமுதாய சீர்திருத்தவாதி 
தன்னை எப்படி ஆளுகின்ற ஆண் மகனாக இருந்தாலூம் அவனை சிற்பியாக இருந்து வாழ்க்கைகு அர்த்த்தம் கொடுக்கும் பெண்மை எப்போதும் மதிப்பிற்குரியதே! ஆணில் பாதி பெண் என்ற தெய்வவாக்கு போய் ஆணிண் பேராற்றல் பெண் என்பதே நிதர்சமான அட்தாட்சி!.

முடிவுரை

பெண் என்றால் பெருமை மட்டுமல்லாது பேணிக்காப்பது பெண்சமுதாயத்தை காக்கும் பல ஆண்களும் உள்ளனர்.ஆண்தான் பெண்ணை ஆளுகின்றால் என்பதல்ல வாழ்க்கை பெண்ணே ஆணிண் அட்தாட்சி என்பதே நிதர்சனமான உண்மை,
பெண்ணை போற்றுவோம் பெண்மையைபோற்றுவோம் இப்பூவுலகம் உள்ளவரை மட்டுமல்லாது மறுவுலகம் வாழும்வரை! பெண்ணே நீவாழ்க!

- முனைவர் ர. ஜீனத் 
வாழ்நாள் சாதனையாளார 
யங் புரப்பஷனல் அகாடமி
பழனி.