அபியின் கவிதைகள்....

உங்கள் சிநேகிதி அபியின் கவிதைகள்

அபியின் கவிதைகள்....

தொழிலாளர் திருநாள்...!

   -   உங்கள் சிநேகிதி அபி ....

உலகெங்கும் கொண்டாடும் ஓங்குயர்ந்த திருநாளாம்...!

உலக மக்களை ஒன்றிணைக்கும் ஒற்றுமையின் பெருநாளாம்...!

உழைப்பாளி உழைப்பிற்கு நன்றி கூறும் நன்னாளாம்...!

உழைப்பினது சிறப்பினையே உணர்த்துகின்ற
மேநாளாம்...!

பொதுவுடைமைக்  கொள்கைதனைப்   போற்றுகின்ற உழைப்பாளி...!

பொதுமக்கள் வாழ்வுயரப்  போராடும் பொறுப்பாளி...!

புதுமைகளும் சம உரிமை கிடைக்க வழி செய்திடவே...!

புதியபாதை காட்டிடவே உதித்ததிந்த மேநாளாம்...!

உண்மைசெயல் உழைப்பிற்கு நன்றி கூறும் திருநாளாம்...!

பெண்ணினத்தை மதித்திடவே போற்றுகின்ற திருநாளாம்...!

கண்ணான தொழிலாளர் கண்ணியத்தின் திருநாளாம்...!

விண்மீனாய் மின்னுகின்ற விடிவெள்ளி மேநாளாம்...!

***************************************************************************************

உலகை இயக்கும் தொழிலாளி...!

 காலைத் தென்றல் வருகிறது...!
பூக்களின் வாசம் மணக்கிறது...!

சூரியன் உதயம் ஒளிர்கிறது...!
எங்களின் மனமும் நெகிழ்கிறது...!

உழைக்கும் தொழிலாளிகளே உங்களால் தானே...!

சகிப்புத்தன்மையை  காக்க மருத்துவனாய்ப் பிறந்தாயோ...!

பொதுவாய் உலகைக் காக்க துப்புரவு தொழிலாளியானாயோ...!

கருணையின் வடிவாக, அமைதியின் உருவாக செவிலியரானாயோ...!

உலகில் அமைதியை நிலை நாட்ட இராணுவத்தில் சேர்ந்தாயோ...!

பசிப்பிணி நோயை போக்க, உளந்தனில் மகிழ்ச்சியை  விளைவிக்க சமையல் கலைஞனானாயோ...!

தோழமை  உணர்வைத் தந்திட மக்கள் தொண்டனா னாயோ...!

அதிசயம் தரும் விண்மீனாய்... பரிவாய்த் தேசம் காத்திட மக்கள் தலைவனானாயோ...!

உழவா நீயும் வந்துவிடு...!
உலகில் வாழும் மாந்தர்களை,
உறவாய் விளங்கும் பறவைகளை காத்திடவே...!

மூட்டைத் தூக்கி வியர்வை சிந்தி வணிகம் பெருக உழைத்தாயோ...!

உதிரம் தந்து உழைப்பை நல்கி உள்ளந்தனில்  மலர்ந்தாயோ...!

உணவை விளைவித்த உழவனே
கனிவாய் உங்களை வணங்குகிறோம்...!

உழைப்பினது சிறப்பினையே உணர்த்துகின்ற உழைப்பாளி...!

அகிலம் காக்கும் மன்னவர்களாய், உலகை இயக்கும் தொழிலாளர்களை...!

இதயம் நிறைந்து போற்றிடுவோம்...!
இதயம் கனிந்து வாழ்த்திடுவோம்...!

************************************************************************************************

உலகை உயர்த்தும் உழைப்பு...!

உழைப்பாளி உழைப்பிற்கு நன்றி கூறும் நன்னாளில்...!

நாளைப் பொழுதினில் நன்மையைக்  கண்டிட...!

மனிதப் பிறவியின் மாண்பினை   எண்ணிப்...!

புனிதச் செயலைப்  பொறுப்புடன் செய்தே...!

இனிக்கும் உலகத்தை இங்கு பெறவும்...!

மனிதத்தை மண்ணினில் மண்டிட முனைந்தே...!

உழைப்பை உரமாய் உளத்தினில் ஊன்றித்...!

நன்மையைச் செய்தே நனிபுகழ் எய்திட...!

மனிதா...!
காலத்தோடு உழைக்க வேண்டும்...!

ஏனென்றால் கடிகாரத்தை நாம் வாங்கிடலாம்
 
ஆனால் காலத்தை  வாங்க முடியாது...!

கரைகள்
ஓய்வெடுத்தாலும் கடல்அலைகள் விடுவதில்லை...!

மரங்கள்
ஓய்வெடுத்தாலும் காற்று சும்மா விடுவதில்லை...!

மலர்கள்
ஓய்வெடுத்தாலும் தேனீக்கள் சும்மா விடுவதில்லை...!

நேரத்தை வீணாக்காதே அது திரும்ப வராது...!

 உழைப்பே வெற்றியின் முதல் படி...!

கைகளே இல்லாத பறவை இனம்

தனக்கான கூடு கட்டி வாழ்கிறது...!

மனிதா...! நாம் மட்டும் ஏன் சோம்பி வாழ வேண்டும்...!

உழைக்க முற்படுங்கள் பூ உலகம்...!

உன் கழுத்தில் மாலையாக மணம் வீசும்...!

******************************************************************************************************

உழைப்பாளர் தினம்...!

உலகெங்கும் கொண்டாடும் ஓங்குயர்ந்த திருநாளாம்...!

உலக மக்களை ஒன்றிணைக்கும் ஒற்றுமையின் பெருநாளாம்...!

உழைப்பாளி உழைப்பிற்கு நன்றி கூறும் நன்னாளாம்...!

உழைப்பினது சிறப்பினையே உணர்த்துகின்ற 

மேநாளாம்...!

பொதுவுடைமைக்  கொள்கைதனைப்   போற்றுகின்ற உழைப்பாளி...!

பொதுமக்கள் வாழ்வுயரப்  போராடும் பொறுப்பாளி...!

புதுமைகளும் சம உரிமை கிடைக்க வழி செய்திடவே...!

புதியபாதை காட்டிடவே உதித்ததிந்த மேநாளாம்...!

உண்மைசெயல் உழைப்பிற்கு நன்றி கூறும் திருநாளாம்...!

பெண்ணினத்தை மதித்திடவே போற்றுகின்ற திருநாளாம்...!

கண்ணான தொழிலாளர் கண்ணியத்தின் திருநாளாம்...!

விண்மீனாய் மின்னுகின்ற விடிவெள்ளி உழைப்பாளர் தினமாம்...!

முனைவர் ம.ப.சாந்தி சங்கரி, புதுச்சேரி.

*************************************************************************************************

எழுத்துக்கள்...!

 

வட்டெழுதும்,  கோல்லெழுத்தும், பிராக்கிருதமும் தொன்மையானது...! 

தமிழ் மொழியின் எழுத்துக்களின் சிறப்புகலே...! 

உயிர், மெய்,  உயிர்மெய், ஆய்தமாம்...! 

வல்லின, மெல்லின,  இடையின ஒலிப்புகலாம்...! 

ஓரெழுத்து ஒரு மொழியும் உண்டாம்...! 

ழ,ள தமிழின்  சிறப்பு எழுத்துக்கலாம்...! 

கவிதை, கட்டுரை,  கதை, புதினமாம்...! 

எழுத்துக்களை எழுதவும், ஒலிக்கவும்

இலக்கணமுண்டு...!

 கருத்துக்களை பகிரும் கருவியாய் எழுத்துக்கள்...! 

கல்லில் செதுக்கிய எழுத்தோ  காலத்திற்கும்...! 

முனைவர்  ம.ப.சாந்தி சங்கரி, புதுச்சேரி.

**************************************************************************************

மொழிகள்...! 

உலகில் மாந்தர் பேசிய மொழியே...!

ஒப்பிலா முதன் மொழி தமிழே...!

கலைகளைத் தந்து காலம் எல்லாம்...!

மண்ணில் கன்னலாய் இனித்தது தமிழே...!

நிலை இல்லா வாழ்வில் நிலைத்திடும்...!

தமிழை நெஞ்சினில் நிறுத்தினர் அன்றே...!

பலம் என மாந்தர் பைந்தமிழ்...!

பற்றிப் பழந்தமிழ் மொழிந்தனர் நன்றே...!

செம்மொழித் தன்மை கொண்டுள்ள தமிழை...!

செறிவுடன் பேணிடல் வேண்டும் என்றும்...!

நம்மொழிச்  சிறப்பை நம்மவர் அறிந்து...!

என்றும் அறத்தமிழ் நாட்டினில் வளர்ப்போம்...!

முனைவர்  ம.ப.சாந்தி சங்கரி, புதுச்சேரி.

**********************************************************************************************

  குன்றிலிட்ட  தீபம்...!

சிட்டுக்குருவி போல் பறக்க வேண்டுமா...? 

பருந்து போல்  பறக்க வேண்டுமா...? 

விதையை பாருங்கள் மேலோங்கி வளர்கிறது...!

நெருப்பை பாருங்கள் மேலோங்கி எரிகிறது...! 

கோபுரங்களும்,  ஆலயங்களும்,  மசூதிகளும் கூட...! 

எல்லோரும் அன்னார்ந்து பார்க்க வேண்டுமென...!

உயரமாக கட்டப்பட்டுள்ளது

நீயும் ஓர்நாள்...!

உன்னை அனைவரும் அன்னார்ந்து பார்க்கும்...! 

அளவுக்கு வாழ்க்கையில்  உயர வேண்டும்...!

உனக்குள் இருக்கும் அசைக்க முடியாத...!

நம்பிக்கைதான் உன்னை  உருவாக்கப் போகிறது...! 

குன்றிலிட்ட தீபமாய்  வாழ்க்கை பிரகாசிக்கட்டும்...!

முனைவர் ம.ப.சாந்தி சங்கரி, புதுச்சேரி.

******************************************************************************************     

 விடாமுயற்சி...!

காலம் 

கனிவதற்குள் நீ காவியமாக 

மாறுவதற்கு முயற்சி செய், மனமே...!

பொழுது விடிவதற்குள் 

நீ யார்? 

என்று புரிந்து கொள் மனமே..! 

ஏனென்றால் கடிகாரத்தை நாம் வாங்கிடலாம்

ஆனால் காலத்தை வாங்க முடியாது...!

கரைகள் 

ஓய்வெடுத்தாலும் கடலலைகள் விடுவதில்லை...!

மரங்கள் ஓய்வு

எடுத்தாலும் காற்று சும்மா விடுவதில்லை...!

மலர்கள் 

ஓய்வெடுத்தாலும் 

தேனீக்கள் சும்மா விடுவது இல்லை...!

மாணவா  உன் மனம் 

ஓய்வெடுத்தாலும்  

உன் கண்கள் புத்தகத்தைத்  தேட வேண்டும்...!

தொடர்ந்து முயன்றால் உன் எதிர்காலம் 

விரைவில் விடியலை நோக்கி செல்லும்..!

நேரத்தை வீணாக்காதே அது திரும்ப வராது...!

விடாமுயற்சியே  விஸ்வரூப வெற்றி மறவாதே...!

முனைவர் ம.ப.சாந்தி சங்கரி, புதுச்சேரி.

*************************************************************************

தமிழர் திருநாள்...!

தமிழர் திருநாள் தரணியெங்கும்  பொன்னாள்...!

புதுப் பானை புத்தரிசிப்  பொங்கலிட்டே...!

ஒன்றாய்ப் புதியசிந்தை எண்ணத்தில் பொலிவாய்...!

குதூகலித்துப் புத்தாடைப்  பூண்டும்  புதுமை...!

கண்டிடவும் முத்தான பொங்கலைப்  போற்று...!

உருவினில் என்றும் மாந்தராய் இல்லாது...!

உள்ளத்தினில் ஊனம் இல்லாது இருப்பாய்...!

நாட்டினில் ஏற்றத் 

தாழ்வுகள் மறைய...!

நல்ல அறம் பொங்கிடச்  செய்வோம்...!

ஏட்டினில் சொன்ன ஈடில்லா அன்பை...!

ஒருவரை ஒருவர் மதித்திட என்றும்...!

உலகினில் வேற்றுமை மாயும் தானே...!

அருவியைப் போல வெண் மனம்...!

கொண்டு அகந்தையைப்  போக்கிட வேண்டும்...!

நாட்டினில் நிலவும் நரித்தனக் கேட்டை...!

நசுக்கிட பொங்கியே வருக...தைப்பாவாய்...!

- முனைவர் ம.ப.சாந்தி சங்கரி,  புதுச்சேரி.

*****************************************************************************************