மகாத்மா காந்தியின் அகிம்சை

காந்தி ஜெயந்தி கவிதை

மகாத்மா காந்தியின் அகிம்சை

மகாத்மா காந்தியின் அகிம்சை

எவ்வுயிர்க்கும்
எவ்வகையிலும் 
தீங்கு செய்யாதது
*சமண* வழி அகிம்சை!
சொல்/செயல்/வார்த்தைகளால் காயப்படுத்தாமை
 *காந்தி* வழி அகிம்சை!

காந்தியின் அறப்போராட்டம்
*ஸ்ரீமத் ரவிச்சந்திராவிடம்*  கற்ற
 சமண சமயம் சார்ந்த அகிம்சை !
கொல்ல வந்த முரடனை மன்னித்து
மன்னிப்பு அண்ணலிடமே கேட்டிட,,,
ம.பொ .சிவஞானம்  மகிழ்ந்தே
மகாத்மா என பெயர் தந்த அகிம்சை!

அகிம்சை
வலிமையற்றவர் ஆயுதமல்ல!
வலிமையானவர் நடக்கும் பாதை
என காந்தி உரைத்திட,
*Lமார்ட்டின் லூதர் கிங்
*நெல்சன் மண்டேலாவை*
அவ்வழி பயணித்து
பெருமிதமான அகிம்சை!

மகாத்மாவின் கைத்தடி யாகி,
கசாப்பு கடைகளை கதவடைத்து,
ஆயுதங்களை விட வலிமையான,
தென்னாப்பிரிக்க தொழிலாளர்
போராட்ட வியூகம் சிறப்பான ,
மனிதர் குல  மாபெரும் சக்தியான
அக இம்சையெனும்
காந்திஜியை தந்தையாக்கிய
அகிம்சை!

முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி
வாலாஜாப்பேட்டை.