சதுரங்க விளையாட்டும்.. வாழ்க்கையும்...

வெற்றி தத்துவம்

சதுரங்க விளையாட்டும்.. வாழ்க்கையும்...

வாழ்க்கையில் வெற்றி பெற சதுரங்க விளையாட்டு போட்டியில் இருக்கும் காய்களை வைத்து வாழ்க்கையின் தத்துவத்தை அற்புதமாக விளக்கும் தத்துவ வரிகள் இதோ...

ஒற்றை கட்டம் மட்டுமே நகர்வதால் ராஜாவும் சிப்பாயும் ஒன்றாகிவிட முடியாது.ராஜாவை வீழ்த்தினால் தான் ஆட்டம் முடியும்.

ராணி தான்(மனைவி) நம்மை நிறைய பிரச்சனைல இருந்து காப்பாற்றும்.எப்பவும் நமக்கு பாதுகாப்பா இருக்கும்.

அனைத்தையும் வெட்டி வீழ்த்தி தான் வெற்றி பெற வேண்டும் என்பதல்ல. மந்திரியின் ஆலோசனை படி லாவகமாக சென்று ராஜாவை சிறை பிடிக்க முடியும்.

ஒற்றை குதிரை மூன்று காய்களை குறிவைப்பது போல், நம் வாழ்வில் ஒரு திட்டம் பலனளிக்கவில்லை என்றாலும் இலக்கை வெல்ல இன்னொரு திட்டம் தயாராக வைத்திருக்க வேண்டும்.

யானை மாதிரி பலசாலியாக இருந்தாலும் நேர்வழியில் சென்று ஜெயிப்பது சிறந்தது.
 
சிப்பாய்கள் மாதிரி முன்னேறி போக வேண்டும்.வெட்டு வாங்கினாலும் ஒருபோதும் பின்னோக்கி வரக்கூடாது.

எல்லா காய்களை இழந்தாலும் ராஜாவை வைத்து 16 மூவ் பண்ணி தப்பிக்க தெரிந்திருக்க வேண்டும்.

கட்டம் இருக்கிறது என்பதற்காக காய் நகர்த்தினால் வெல்ல முடியாது. திட்டம் இருந்தால் தான் வெல்ல முடியும்.

வாழ்க்கையோ விளையாட்டோ எப்போ எது மாறும்னு யாருக்கும் தெரியாது. அதனால கடைசி வரைக்கும் விட்டுக்குடுக்காம விளையாடணும்.

இதுதான் வாழ்க்கையின் வெற்றி சூத்திரம்.