நீ பெண்ணல்ல போராளி 029

புதுமைப்பெண் விருது கட்டுரைப் போட்டி

நீ பெண்ணல்ல போராளி 029

நீ பெண் அல்ல போராளி 

சுடரே,மலரே என்ற ஆராதனை உனக்கானதில்லை என் தோழியே.
நீ பூ அல்ல தீ என்பதை நினைவில் கொள்.
 உன் திறம் உன் துணிவே உன் நேர்மை இவை மட்டுமே உனக்கான அணிகலன்கள் காட்சி பொருளாக சித்தரிக்கப்பட நீ காகிதப்பூ அல்ல. நேற்கொண்ட பார்வையும் நிமிர்ந்த நன்னடையும் பாரதி உனக்கு சொன்ன வார்த்தைகள் மட்டுமில்லை அதுவே உன் கவசமும் .உனக்கான எல்லைகளை நீயே வகுத்துக் கொள்ளும் வல்லமை பெற்றவள் நீ என்பதையறிந்து வாழ்வில் நீ கடக்கும் கரடு முரடான பாதைகளில் உன் பாதங்களை மட்டுமே நம்பி பயணம் செய்.
எங்கே உன் கனவுகளுக்கு கதவுகள் தாழிட்டுக் கொள்ளும் நிலை வருகிறதோ அங்கே கதறி கதவுகளை திறக்காமல் கல்வி எனும் ஆயுதம் ஏந்தி தாழிடும் கதவுகளை முட்டி உடை.
ஒரு பெண்ணாய் உனக்கான பொறுப்புகளை நேர்த்தியாய் செய்ய மட்டும் பிறக்கவில்லை நீ  .
உன் குறிக்கோளுக்கு தடையாய் யார் வரினும் வந்தவர் சுவடில்லாமல் செல்லும்வரை யுத்தகள போராளியாய் போரிட்டு ஓட வைக்கும் வல்லமை பெற்றவள் நீ
வாழ்க்கை உன்னை கண்ணீர் பக்கம் அழைக்கும் போதெல்லாம் கல் கொண்டு எரி.
 உனக்கான பாதைகளில் இருக்கும் முட்களை அகற்றுவதிலும் வெற்றி பெறுவதிலும் உன் பங்கே அதிகம் என்பதை நினைவில் கொள் .
உன் திறமைகளை பொதிகளாக்கி பரண்மேல்  பதிக்கி விட்டு ஒன்றும் அறியாதவளாய் உன்னை நீ நிரூபிக்க பிறக்கவில்லை நீ. உன்னை எதிர்க்க  எத்தடை வந்தாலும் அத்தனையும் தவிர்த்து சாதிக்க பிறந்தவளாய் துணிவெணும் ஆயுதம் ஏந்தி போரிட்டு புகழ் பெற அவதரித்தவள் நீ.
வாழ்க்கை எத்தனை சிக்கல்களை உனதாக்கினாலும் உன் மீதான முழு  
நம்பிக்கையுடன் தீயென எழுந்து சுடராய் பிரகாசித்து
உன்னை நீ மெருகேற்றி வாழ்வில் நீ‌ பெரும் வெற்றியை தடுக்க ஒருவரும் இல்லை என்பதை கணம் கனம் நினைவில் கொள்

நாச்சியாராய்
கண்ணகியாய் திரௌபதியாய் 
ஜான்சி ராணியாய்
பாரதி கண்ட புதுமை பெண்ணாய் 
.
நீ இருக்கையில் வெற்றி என்றும் உன் வசம் 

அச்சம் துரத்தி வெற்றி பெற வாழ்க்கை உன் வசம்

விடியற்காலை ஆதவனாய் உன் சார்ந்தவர்களின் இருள் நீக்கி நீயே கதிராகி உன் வெற்றியை தீர்மானிக்க உன்னை தகுதிப்படுத்தும் அனைத்தையும் கற்று தேர்ந்தவளாகிட முயன்றிடு.


உறவுகளுக்கு மதிப்பளித்து உனக்கான சுதந்திரத்தை முறைப்படி பண்படுத்தி ,வகைபடுத்தி, பயன்படுத்தி நீ 
பெரும் வெற்றியை கொண்டாட காத்திருக்கின்றன உன் வான நட்சத்திரங்கள். அவற்றுடன் சேர்ந்து நீயும் ஒளிரவே  என் அன்பிற்கினிய  அகம் நிறை வாழ்த்துக்களுடன்

                               அன்புடன் 
                 செ.நந்தினி(எ)ரேவதி
                       நீலகிரி மாவட்டம்