அடிமைப்பட்ட இனங்களை ஆளுமையாக்க வந்தவரே..! 062

அறிவர் அம்பேத்கர் விருது கவிதைப் போட்டி

அடிமைப்பட்ட இனங்களை ஆளுமையாக்க வந்தவரே..! 062

அடிமைப்பட்ட இனங்களை ஆளுமையாக்க வந்தவரே //
=============
உயிர்களெல்லாம் சமமென்ற உணர்வுகள் கொண்டவரே //
உலகேற்கே வழிகாட்டியா ஒருபதையில் நின்றவரே //2

அரசியலமைப்பு சட்டத்தினை திட்டமாக தந்தவரே //
அடிமைப்பட்ட இணங்களையே ஆளுமையாக்க வந்தவரே //4

சாதி கொடுமைகளை சகித்து கொண்டே வாழ்ந்தவரே //
ஏழைகளை ஏற்றிடவே அந்நாளில் தாழ்ந்தவரே //6

சமுதாயம் மேலோங்க நூல்கள் பல கற்றவரே //
சாஸ்திரங்கள் சொல்லுகின்ற வேறுபாடுகள் அற்றவரே //8

கோணியிலே அமர்ந்து கற்று ஏணியாக உயர்ந்தவரே //

ஏணியாக இருந்து சமுதாயம் ஏற்றம் பெற செய்தவரே //10

எல்லோரும் சமமென்று சொல்லுகிறது சட்டம் //
- அரசியலைப்பு சட்டம் //
இருந்தாலும் பிரித்தாள  செய்வது யார் செய்த குற்றம்// 12

தனக்காக வாழ்வோர் மத்தியில் எனக்காக வாழ்ந்தாய் //
தரணியெங்கும் உம் புகழை தழைத்தோங்க செய்தாய் //14

அனைவருக்கும் நலம் தந்த அரசியலமைப்பு தந்தையே //
வியந்து  வியந்து பார்க்கின்றேன் நீர் படித்ததே ஓர் விந்தையே//16

ஆம்பவாடி தந்த அதிசிய கோமகனே //
அல்லல் பட்டே அனுதினமும் கல்வி கற்ற கடை மகனே //18

வட்ட மேசை மாநாட்டின் வாதத்திலே  - ஜாதி //
கொடுமைகளை தோளுரித்தாய் பேதத்திலே //20

இந்துவாக இருந்த வரை ஜாதி கொடுமை //
போக்கிட பெளத்த மதம் கண்டது உங்கள் மனதின் திடமை //22

வாழ்த்துகிறேன் வணங்குகிறேன் உன்னால் வளமோடு வாழ்கின்றேன் //

போற்றுகின்றேன், புகழ்கின்றேன் உம்மை பணிக்கின்றேன் பறைச் சாற்றுகின்றேன்..//24


-கவிஞர்.ஜெ. சிவக்குமார், ஆசிரியர், விழுப்புரம் மாவட்டம்...