கல்விக்கண் திறந்த காமராசர்..!

கல்விக்கண் திறந்த காமராசர்..!

கல்வி கரையில கற்பவர் நாள்சில 

இதை வாழ்வினில் உணர்ந்தவர்  ஒரு சிலர் 

செவிக்குணவு இல்லாத போழ்து வயிற்றுணவை 
ஈயச்  சொன்னார்  வள்ளுவப் பெருந்தகை

சிறார்களின் வயிற்றுக்கு  உணவிட்டு பின்
 செவிக்குணவை வழங்கச் செய்தார் காமராஜர்
கல்லாதார் இல்லையெனும் சமுதாயம் உருவாக
 அவதரித்த கடவுளவர்     பெருந்தலைவர் காமராஜர்

கல்விக்கு கண் கொடுத்தார்- அவர்  தன்

கண்ணில் உறக்கம்  தொலைத்தார்
 கற்றதன் பயனை அவர் அறியார் -எனினும் 
கற்றவர்கள் உருவாக வழி செய்தார் 

அவர் கற்றது கையளவு என்றாலும் 

அவர் பயின்றது பார் அளவு
புத்தகங்களை அதிகம் பயின்றவர்  அல்லர் 
எனினும் மக்களை அதிகம்  படித்தவர் ஆங்கோர்

ஏழைக்கு எழுத்தறிவித்தல் புண்ணியம்   

என்றார் பார் போற்றும் பாரதி பாரத தேசத்தில் ஒரு ஏழைக்கு   அல்ல 

ஓராயிரம் ஏழைகளுக்கு எழுத்தறிவித்தார்  காமராஜர்

அவர் கடமையைச் செய்தாரென்று எண்ணுவதே
 நம்மில் பலர் செய்யும் மடைமை

கடவுள் கொடுத்த வரமானவர்  காமராஜர்
காலத்தின் கடைசி கருணையாம் காமராஜர்...!

இத்தனை நாள் உலகமெல்லாம்  இருந்தறிந்த 
பெரியவர்கள் இசைத்த ஞானம் அத்தனையும்

ஓருருவாய்த் திரண்டதெனக் கலியுகத்தே அவதரித்தோன்!

உடலோடு வந்து போகும் உருவினில் தெரிவ தன்றிக் கடவுளை

உலகில் யாரும் நேருறக் காண்ப தில்லை
அடைய விரும்பும் அந்தக் கடவுளின்

அன்பு  தன்னை நடைமுறை வாழ்விற் செய்த

காமராஜரே நமது தெய்வம்!

பளிங்கினைப்  போன்ற தூயப்  பண்பிலர் பதற்ற மில்லார்

குளித்திடும் குற்றாலத்தின் குளிர்
நீராம்  இவர்தம் எண்ணம் !

குலக்கல்வித் திட்டத்தை நீக்கியவர்  
இலவசக் கல்விக் கொள்கை       தொடங்கியவர் 
மழலைக்கு மதிய உணவை வழங்கியவர்  
கல்விக் கண்ணைத் திறந்திட்டவர்!

மாசற்ற மாணிக்கமாய்த்  திகழ்ந்திட்டவர்! 
 தன்னலமற்ற வாழ்வினை வாழ்ந்திட்டவர்! 
சத்தியமூர்த்தியின் அரசியல் சீடனவர்! 
தன்னிகரில்லாத் தலைவர் அவர்!

 கடவுள் தந்த மனிதக் கொடையை!
 மனிதருள் மாணிக்கத்தை  மாமனிதரை !
 கல்விக் கண் திறந்த கடவுளை!

நாடு போற்றும் நல் தலைவரை!

வானத்து வளர்பிறைச் சந்திரனை!

கல்லாமல் துயில் கொண்டு  இருந்தோரை 

கல்வியின் சிறப் புணர்த்தி   ஊக்கமளித்து
பாமரனையும் பயிலச் செய்த பரமனை!

அள்ளி வழங்கும் அருட்கொடையை அருளர்

கொடையின் ஆணி வேரை பள்ளிச் சிறார் பசி தீர்த்த  வள்ளலை 
பற்றிலாத் துறவி போல் வாழ்ந்தவரை

பிள்ளைகளின் தளிர் நடை காணும் பெற்ற

தாயவள் நெஞ்சம் போல பள்ளிக்குப் பிள்ளைகள் செல்லும் பாங்கினை 
ரசித்து அதில் புதையலைப் பெற்றவரை!

நாளும் உள்ளத்தில் வைத்துப் போற்றிடுவோம்! 
அவர் புகழ் என்றும் நிலைத்திருக்க வேண்டிடுவோம்!

கனிந்தஅன்பினால் நம் மனம் நிறைந்த 
நல் தலைவர் அவரை வாழ்த்திடுவோம்!
 நின் புகழ் ஓங்குக!

இந்தியத் திருநாட்டின் புதல்வர் அவர் எல்லோர்  
இதயங்களிலும் நின்று விளங்கும் தலைவர்  அவர் 
காந்தியின் வழியில் நின்றிட்டார் !
ஆயுதம் இன்றி போரிட்டார்!
அன்னியனை வென்றிடவே அல்லும் பகலும் உழைத்திட்டார்!

கல்வியின் தரத்தினை உயர்த்திட்டார்! அவர்  
எளியோரும் கற்க வழி செய்தார்

மதிய உணவுத் திட்டம் கொண்டு வந்தார்
 சிறுவர்களின் பசியினைப் போக்கிட்டார்

தாய் மனங் கொண்டு செய் போல பாவித்துத்தாய் நாட்டு மக்களை                       நேசித்திட்டார் !

இந்திய நாட்டின் இருளை அகற்றி  எங்கும் ஏற்றம் கண்டிட்டார்!

தொல்லுலகில் நாமறிந்த தலைவர்  தம்முள்  
சொன்னதுபோல் செயல் முயன்றார் இவரைப் போல

இல்லையெனும் கல்விக்கண் திறந்த காமராஜர்
 இந்தியத்தாய் உலகினுக்கே ஈந்த தெய்வம்...! 

- ஜெ.வாசகி தென்றல் , திசையன்விளை