மனதில் உறுதி வேண்டும்!

மனதில் உறுதி வேண்டும்!

தண்ணீரின் மேல் படகுகள் விடலாம்!
கண்ணீரின் மேல் சிந்தையை விடவோ!
இலையில்லாக் கிளைகளிலே எழில் பூக்கள்  
பூத்தாடும் அதிசயமும் எங்குண்டு காணீர்!
நெஞ்சில் உரங்கொண்டு உழைத்திட நாளும் 

வஞ்சம் அறியாது வாழ்ந்திடுவார் பாரில்!
 உளி கொண்டு செதுக்கிடும் சிலையும்
கலை வண்ணம் கொண்டு மிளிரும்!
மக்களின் மனமலரில் மாசற்ற கருத்தை 
விதைத்திடும் கவிஞன் மனம்நிறை  வெய்துவான்! 
உரமே உள்ளத்தில் ஊறித் திளைத்தால்
தரம் நிறைந்த செயலால் சிறப்பெய்துவான்!
இன்னல் பற்பல வந்து போகும் துள்ளல் கண்டு 
துவண்டு போகும் வருவதை எண்ணி விரி 
கசிந்தால் நல்லதை எண்ணி வழி தேடு 
கருமமே கண்ணென்று எண்ணிவிட்டால் 
சிறப்பெல்லாம் நிறைவாய்ப் பெற்றிடலாம்! 
நம்மை நாமே ஆண்டு விட்டால் நலம்பெற 
நாளும் வாழ்ந்திடலாம்!

-ஜெ.வாசுகி தென்றல்,திசையான விளை,