உலக மூங்கில் தினம்

உலக மூங்கில் தினம்

உலக மூங்கில் தினம்

பள்ளிக்கூடம்
முதல்...
 சிறைக்கூடம்
 வரை...
 திருந்துவதற்கு
 குச்சியாகவும்...
கோலாகவும்...


 குச்சி வீடு
முதல்...
 கோபுரம்
வரை...
 தாங்கிப் பிடிக்கும்
 தூணாகவும்...


 இலை
முதல்...
 சருகு
வரை...
மருந்தாகவும்...
உணவாகவும்
உரமாகவும்...


 இன்னிசை
(புல்லாங்குழல்)
 முதல்...
 இறுதி யாத்திரை
( தப்பாட்டம்- கம்பு)
வரை...
 மனிதத் துயரத்தை போக்கும் கருவியாகவும்...


 கூடை
 முதல்...
 பாடை
வரை....
 மனிதனின் அனைத்து தேவைகளுக்கும்...
 அரண் ஆகவும்...
 அரவணைப்பாகவும்
அனைத்துக் கொள்ளும்...
 மூங்கிலுக்கு....

 பச்சைத் தங்கம்...
 ஏழைகளின் நண்பன்
வன பாதுகாவலன்...
 என்ற பெருமையுடன்
 கிராம -  நகர
 பொருளாதார மேம்பாட்டிற்கு...
 துணை புரியும் மூங்கிலை...
 புறந்தள்ளிவிட்டு
கம்பி வேலி...
நெகிழிப் பொருட்கள்...
 காலூன்றி  விட்டது நவீன உலகத்தில்...

 சோம்பேறி
மனித இனம்...
 தானும் கெட்டு...
 இயற்கையும் அழித்து...
பூமித் தாயை
 நாசமாக்காமல்
 நற்செயல் செய்யவும்...
 வரும் தலைமுறையை...
 பாதுகாக்கவும்
உலக மூங்கில் தினத்தில் உறுதி ஏற்போம்...

 கவிஞர்
ப.சூர்ய சந்திரன்