தமிழ்நாடு நாள் சிறப்பு கவிதை

தமிழ்நாடு நாள் கவிதை

தமிழ்நாடு நாள் சிறப்பு கவிதை

தமிழ்நாடு சிறப்பு!

 ஆங்கிலேய ஆட்சி காலத்தில் மதராஸ் மாகாணமாக, சென்னையாக விளங்கியது!

   அறிஞர் அண்ணா போன்ற தமிழ் பற்றாளர்களால் தமிழ்நாடாக மாறியது!

   இந்திய நாட்டுக்குள்ளே !ஒரு நாடு அதுதான் தமிழ்நாடு!
    உலக கலாச்சாரத்தின் பிறப்பிடம் தமிழர் பண்பாட்டு கலைக்கூடம்!

   அன்று தொட்டு இன்று வரை தமிழுக்கு ஆற்றிய தொண்டும்!
   இந்திய விடுதலைக்கு முதல் முழக்கப் போரிட்ட மாவீரர்கள் பிறந்ததும்!

   தமிழ்நாடு தமிழே உலக மொழிகளுக்கெல்லாம் முதன்மையானது!
என்றும்!
   உலகப் பொதுமறை தந்த திருவள்ளுவர் தமிழ்நாடு !
  உலகமே போற்றும் ஆத்திசூடி தந்த ஓளவ்வை பிறந்ததும் தமிழ்நாடு !

  இந்திய அறிவியல் விஞ்ஞானி அப்துல் கலாம் பிறந்ததும் தமிழ்நாடு!

 எளிமையான!(செட்டிபின்) ஊக்கு கண்டுபிடித்த ஜிடி நாயுடு அவர்கள் பிறந்ததும் தமிழ்நாடு!
  !!
 இங்கே இயற்கை வளங்கள் கொட்டிக் கிடக்கின்றன!
   குற்றால மழையில் கோங்கும் வேங்கையும் ஓங்கி வளர்ந்து நிற்கின்றன !

  குற்றால மலைச் சாரலில் ஆயுர்வேத மூலிகைகள்! கலந்த நீராடல் அனைவரையும் கவர்ந்தது !
  
  தமிழ்நாட்டில் ஒவ்வொரு மாவட்டங்களும் ஒவ்வொரு சிறப்பை பெற்றுவிடுகிறது 
 விளங்குகிறது!

 தெற்கு கன்னியாகுமரி, இந்திய தெற்கெல்லையாய்,,! வள்ளுவர் சிலை தாங்கிய கடலாய் விளங்குகிறது!!

தெற்காசியாவில் முதலிடம்காமராஜர் கட்டியமாத்தூர்தொட்டிப்பாலம்!

 காஞ்சிபுரம் உலகப் பட்டுகளில் முதன்மையிடம்! திண்டுக்கல் பூட்டுக்குச் சிறந்த இடம்!
ராணிபேட்டை தோல்பதனிடல்!
சேலம்மாம்பழம்!

உயர்ந்ததேசிய கொடிமரம் புனிதஜார்ச்கோட்டை!
 
 திருப்பூர் பின்னலாடையில் முதலிடம்!

   திருநெல்வேலி தென்னிந்தியாவின் ஆக்ஸ்போர்ட் !
  சென்னை தென்னிந்தியாவின் நுழைவாயில்!

   தூத்துக்குடி முத்து குளித்தல் !
 நீலகிரி மலைகளின் ராணி !
  தேனீ இயற்கை வாசிகளை உள் இழுக்கும் பூமி!

   பாய்க்கும் பத்தமடை,பட்டு நெசவுக்கும்காஞ்சி
 ,பட்டா சுக்கு,குட்டி ஜப்பானையும்!

வனவிலங்கு சரணாலயங்களையும், புலிகளின் சரணாலயங்களையும்!

 பறவைகளின் சரணாலயங்களையும் தன்னகத்தே கொண்ட தனிச்சிறப்பு மிக்க தமிழ்நாடு !

  உயர்ந்த கொடி மரமும் புனித ஜார்ஜ் கோட்டையிலே!
   மிகப்பெரிய தேரோ திருவாரூரிலே!
   மிகப்பெரிய அணைக்கட்டு கல்லணையிலே!

தஞ்சையை நெற்களஞ்சியமாக்கி
தஞ்சைகோபுரத்தை வரலாற்றுசிறப்பாக்கி!

  இப்படி எண்ணற்ற சிறப்புகளோடு இந்தியாவுக்குள்ளே வருமானத்தில் இரண்டாம் இடத்தை பிடித்திருக்கும் இந்த நாடு !

  சிலம்பம் ,கபடி, இன்னும் பல வீர விளையாட்டுகளை நாட்டியங்களையும் சிற்பக் கலைகளையும், அறிமுகப்படுத்தியது!!
   தமிழ்நாடு!

 தமிழ்நாட்டின் தேசிய மரம் பனைமரம்  தேசிய விலங்கு வரையாடு!
  இப்படி உலகத்திற்கு உயரிய நாகரீகத்தையும் குடும்பப் பண்பாடுகளையும்! "யாதும் ஊரே யாவரும் கேளிர்"
   என்ற உலகே, வியக்கும் சகோதர தத்துவத்தையும் தந்தது தமிழ்நாடு !

  பார் போற்றும் புரட்சிக்கவிகளை பாரதிதாசனையும் பாரதியாரையும் கம்பரையும் போன்ற கவிஞர்களை தந்ததும் தமிழ்நாடு !
இசைத்துறையில்மேஸ்ரோமன்னனைதந்ததும்!

  சென்னை மாகாணத்தை தமிழ்நாடாக மாற்றிய பெருமை அறிஞர் அண்ணா அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது 1969ல் தை 14 ல் அரங்கேறியது அதை இன்று தமிழ்நாடு தினமாக கொண்டாடுகிறோம்!

   அதற்கு முன்பாக நவம்பர் 1யை தமிழ்நாடு தேசிய தியாகிகள் தினமாக கொண்டாடுகிறோம்!

   தமிழன் என்று சொல்லடா! தலை நிமிர்ந்து நில்லடா!

   இந்த வீர முழக்கத்தோடு தமிழராய் வாழ்வது தமிழுக்கும் பெருமை!
   தமிழ் மொழி போல் இனிமையாய் உலகெங்கில் ஒரு மொழி காணோம் இதை பேசும் நமக்கும் பெருமை !

 தமிழ் எழுத்துக்களுக்கு அணிகலன்களை இலக்கண அணிகள் தந்து சிறப்புக்கு உரியது!
  தமிழ் மொழி போல் தமிழர் வாழ்க்கைக்கும் சீர் பட ஒருத்தனுக்கு ஒருத்தி என்ற உயர்வு பட வாழும் கொள்கை தமிழருக்கே உரியது!

 தமிழன் என்றும் தன்மானத்தோடு வாழ்வோம் !
தரணியில் நம் தமிழகம் வெற்றி நடை போட! வாழ்த்துக்கூறி மகிழ்வோம் !!

அன்புடன் கவிதை மாணிக்கம்