என் நிலை..!

புதுக் கவிதை

என் நிலை..!

என் நிலை
-----------

உந்துருளி உருண்டோடித்தான் இருக்கு
ஊரு விட்டு ஊரு தாண்டி ஓடிக்கிட்டுதான் இருக்கு
உடல் தேய்ந்து உருவம் மாறி
வயசு மட்டும் போன பாதையில் ஏறிப்போச்சு

கடிகாரம் அதன் பாதையில் போனது
நாட்காட்டியும் அதன் பின்னால் ஓடியது
சேமிக்க பணம் கையில் இல்லை
வார்த்தையில் தான் சம்பளத்தின் எண்ணிக்கை

ஆழ்ந்த தூக்கம் எப்போது கொண்டேன் தெரியவில்லை
மண்டையில் அது பற்றிய நினைவிடமும் இல்லை
கடல் இரைச்சலில் காது மூழ்கியது பல நாள்
வாகன இரைச்சலில் காது நீந்துவது ஒவ்வொருநாள்

வயிற்றுப் பசிக்கு
வாழ்க்கையை சாப்பிடுகிறேன்
வாழ்க்கையை சமைக்க
என் வயதினை வேக வைக்கிறேன்

ஹஸன் எம் பஜீத்
இலங்கை.