சிந்தனை சிற்பி அம்பேத்கர் 023

அறிவர் அம்பேத்கர் விருது கவிதைப் போட்டி

சிந்தனை சிற்பி அம்பேத்கர் 023

சிந்தனை சிற்பி அம்பேத்கர்.

மனுநீதியெனும் அநீதிக்கு கொள்ளி வைத்தார்

   மனிதகுலம் ஒன்றெனவே சொல்லிவைத்தார்

அணுவளவும் ஆதிக்கத்திற்கு அடிபணியாது

அன்றாடம் எளிய மக்களுக்காக உழைத்தார்


விலங்குகள் குளித்தாலும் சில சமூகத்தாரை

விலக்கியே வைத்தார் குளத்தருகே

கலங்கிய அச்சிந்தை கொண்டாரை

கலங்கடித்து போராட்டம் கண்டார்

 

பலியிடப்படும் ஆடுகளாக அல்லாது

. பரந்த மனம் படைத்த சிங்கங்களாக
எளிய மனிதர்களும் வாழ்வில்

  ஏற்றம் காண வைத்தார்


யுத்த நெறி விடுத்துமாந்தரெல்லாம்

இசைந்து வாழ வேண்டியே

புத்த நெறியை தழுவித மைச் சேர்ந்தோர்

  புதிய உலகம் காணச் செய்தார்


ஆண்டான் அடிமை பேதம் தவிர்த்து
அனைவரும் சமமெனக் கூறி

தீண்டாமை தவிர்த்து சமதர்ம

தீதிலா சட்டவரைவை வகுத்தளித்தார்.

-கவிஞர் மு. கிருஷ்ணன்

நெல்லை மாவட்டம்