அண்ணா என்னும் ஆகாயம் 037

அறிஞர் அண்ணா அறிவுச் சுடர் விருது கவிதை போட்டி

அண்ணா என்னும் ஆகாயம் 037

அறிஞர் அண்ணா என்னும் ஆகாயம்..

மடமைகள் மடிந்திட மதிநிறை திறத்தால்

மக்களைத் திருத்திய மாசிலாத்

தமிழன்

கடமை கண்ணியம் கட்டுப்

பாட்டினைக்

கவசமா யணிந்தவோர் காவியத்

தலைவன்

சுடரொளிப் படர சுருளு

மிருள்போல்

சூழ்ந்தஇன் னல்களை சுட்டெரித்த

கதிரோன்

நடமா டியஓர் பல்கலைக்

கழகமாய்

நாட்டிலே உலாவிய நடரா

சரின்மகன்...!

எழுத்திலும் பேச்சிலும் ஏற்றமாய்

மிளிர்ந்து

இயக்கமோ திராவிடம் உயிரென

வாழ்ந்தார்

எழுகதிர் சின்னமதை ஏந்திமக்

கள்தம்

எழுச்சிநா யகனாய் இயங்கியே

கவர்ந்தார்

பழுதிலா அன்பும் பகட்டிலா பண்பும்

பழகுதற் கினியநற் பாங்குமே கொண்டார்

விழுமிய அறிவுச் சுடரென விளங்கி

விடியலைத் தோற்றியே வெற்றியும்

கண்டார்...!

ஒன்றே குலமாம் ஒருவனே தேவனாம்

உற்றநற் கருத்தினைப் பற்றியே நின்றார்

புன்னகைப் பூத்தே புரையிலா உரைகளால்

புகுந்துஅ ரசியலில் பலர்மனம் கவர்ந்தார்

நண்ணா நிலவிய சமூகசீர்

கேட்டின்

சழக்கினைப் பேச்சால் சாடியே கொன்றார்

கன்னித் தமிழைக் காதலித்து நாளுமே

காஞ்சிமா அறிஞரும் வாழ்ந்துமே சென்றார்...!

 கவிஞர் து.ரா.சங்கர்,

 கடலூர்.