மகாத்மா காந்தியின் தியாகங்கள்

காந்தி ஜெயந்தி கவிதை

மகாத்மா காந்தியின் தியாகங்கள்

மகாத்மா காந்தியின்  தியாகங்கள் 

முத்து  கடல் சூழ்ந்திருக்கும்  எங்களது நாடு 
மோகனதாஸ்  காந்தி மகான் அவதரித்த நாடு 

பல்லாண்டு  பாடுபட்டு பட்டினி கிடந்த காந்தி 
பண்புடனே நம் நாட்டை மீட்டு தந்தார் காந்தி 

குஜராத் மாநிலம்  போர் பந்தரில் பிறந்து  வழக்கறிஞராக இருந்தாலும்  எளிமையான வாழ்க்கை வாழ்ந்தவரே! 
13ம் வயதில் கஸ்தூரிபாயை  மணம்  புரிந்தவரே! 
19ஆம்வயதில் பாரிஸ்டர்  பட்டம் பெற்றவரே! 

அகிம்சையை ஆயுதமாக  கொண்டவரே! 

நவஜுவன் என்ற  இதழில்  தன் சுயசரிதைஎழுதியவரே! 

அரிச்சந்திரன் என்ற  நாடகத்தை  பார்த்து   பொய் பேச மாட்டேன் என  சூலுரைத்தவரே !

 கோபல கிருஷ்ண கோகலேவை  தன்  அரசியல்  குருவாக ஏற்றுக் கொண்டவரே! 

உப்புச்சத்தியாக்கிரக போராட்டத்தை  தலைமை ஏற்று  நடத்தியவரே! 

இந்திய  விடுதலைக்கும், தீண்டாமைக்கு எதிராகவும், சமய நல்லிணக்கத்திற்கும்  போராடியவரே!

ஒத்துழையாமை இயக்கத்தை   அமைதி வழியில்  நடத்தியவரே! 

17முறை, 139 நாட்கள்  உண்ணாநிலைப்போராட்டங்கள்  மேற்கொண்டவரே! 

ஆரோக்கியத்துக்கான  வழிகாட்டி  என்ற  தலைப்பில்  புத்தகம்   எழுதியவரே! 

1914ஆம் ஆண்டு  கெய்சர் - இ-ஹிந்த்  எனும்  தங்கப்பதக்கம்  பெற்றவரே! 

தில்லையாடி வள்ளியம்மையிடம்  தமிழ்  மொழியைக்கற்றவரே! 
 
அகமதாபாத்தில்  சபர்மதி  ஆற்றங்கரையோரத்தில்,  சத்தியாகிரக ஆசிரமம்  தொடங்கியவரே! 

அண்ணிய ஆடைகளை  மறுத்து இராட்டையில்  நெய்த வேட்டியை தன்  உடலில்  அணிந்தவரே! 

இந்திய  விடுதலைக்காக  சிறைத்தண்டனை  அனுபவித்தவரே! 

1947ஆம் ஆண்டு  சுதந்திரம்  வாங்கித்தந்தவரே! 

 ரூபாய் நோட்டின் நிறம்  மாறலாம்  உங்கள்  முகம்  என்றும்  மறையாது  !

தியாகத்தின்  பிறப்பிடமே
தியாகிகளின்  நினைவிடமே  
 எங்கள்  உத்தம மனிதர்   மகாத்மா காந்தி 
  
ஜெய் ஹிந்த் 

 இப்படிக்கு , 
இளம் சாதனையாளர். கவிஞர். ஜெ. கோகுல் பி. எஸ். சி. எம். சி., எம். எஸ். சி.,
மேலபுலம் புதூர்.