அன்பு கடல்

புதுக்கவிதை

அன்பு கடல்

அலையைச் சுமந்து 
வரும் வார்த்தைகள்
உன் மீது கவிந்ததும் 
ஒரு கவிதையாகின்றன

துள்ளும் அலையிலிருந்து
 குதித்த வெள்ளி மீனொன்று
மணற்கரையில் செதில்களால்
உன் பெயரை எழுதிவிட்டு
கடலைப் பார்த்து சொல்கிறது

"இன்று அன்பென்னும் கடல் 
பிறந்த நாள்"

தங்கேஸ்