பெரியார் கவிதைகள்

பெரியார் கவிதைகள்

பெரியார் கவிதைகள்

001 மறுப்பு தெரிவித்தவன்

கடவுளை மறுத்தானோ அது கடமையென நினைத்தானோ
கடமை மறந்த மானிடரை கடமையாற்ற செய்தானோ
உடமைகளை இழந்து செய்யும் பரிகாரத்தை வெறுத்தானோ
உண்மை இல்லாததில் ஊறிப்போவதை உறுதியாய் தடுத்தானோ

கடவுள் தம் பெயராலே கெடுதல் நடப்பதையே தடுத்தானே
கண்டபடி செய்யுகின்ற துர் வழிபாட்டை பழித்தானே
மனிதரை புனிதமாக நடத்துவதை கெடுத்தானே
எல்லோரையும் சமமாக நடத்தாததை கண்டித்தானே

இவன் மீது சீற்றம் கொண்டோர் எட்டுத்திக்கும் எழுச்சியுற
இடியென வசைபாடி இம்சை பல செய்துவைக்க
இவன் பார்வை திரும்பியது உருவாக்கிய இறையை நோக்கி
இதுவே இவனை இன்றளவும் இட்டுச் சென்றது சிகரம் நோக்கி

ஈரோட்டில் ஈன்றெடுத்த இந்நாட்டின் முத்து அவனே
ஈரேழு பிறப்பு எடுத்தும் எம் துயரை களைய வருவான்
ஈட்டிபோன்ற சொல்லாலே எவரிடமும் தர்க்கம் செய்வான்
ஈன மொழியென்று இகழ்வோரை என்றும் அழித்தொழிப்பான்.
-  கவிஞர்.வாசுகி முத்தையன்
ஈரோடு.

 

002.பெரியார் கவிதைகள்..!

மானிடராயினும் கூன் குருடு செவிடு நீங்கி பிறந்தாலும்

ஆரிய மாயையின் அவதாரத்தால்

மூட பழக்கங்களில் மூழ்கியும் மதக் கோட்பாடுகளில் சிக்கி

வாழ முடியாமல் தவித்த தமிழனை

திறமை இருந்தும் பயன்படுத்தாமல்

நான்கு சுவற்றுக்குள் முடங்கிக் கிடந்த பெண்மையை

தன் பகுத்தறிவு சிந்தனையால் தமிழகத்தில்

பட்டி தொட்டி முழுதும் சுயமரியாதையை

கொண்டு சென்ற பிதாமகன்   

உடல் நலிவுற்றபோது தன் மூத்திரப்பையும் கையில் சுமந்து கொண்டு

தமிழின முன்னேற்றத்திற்காக

தன் வாழ்வை அர்ப்பணித்த பகுத்தறிவு பகலவன்

ஈரோட்டு வெண்தாடி வேந்தன்

பிறந்த பிறந்த நாளில் அவர் புகழ் பாடி மகிழ்வோம்

அவர் கனவுகளை நிறைவேற்றிய

பிற்காலத்தில் என்ன நடக்குமோ என்பதை

முன்கூட்டியே அறிந்து
தமிழர்கள் அதிகம் வாழும்

நம் மாநிலத்திற்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்டிய

பேரறிஞர் பெருந்தகையை

பெரியாரின் கனவுகளை நடைமுறைப்படுத்திய

தமிழினத் தலைவர் கலைஞர் பெருமகனை  

அவர் விட்ட பணிகளை தொடர்ந்து நிறைவேற்றும்

மக்கள் தலைவர் மாண்புமிகு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்

அவர்தம் செயல்களை தொடர்ந்து நிறைவேற்றி வரும்

மாண்புமிகு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்

அவர்களின் செயல்பாட்டை
நினைந் து கொண்டே...

கவிஞர் லோ வரகுண பாண்டியன் உத்தரமேரூர்.

003

மனிதன் வணங்குகின்ற தெய்வங்கள் சொல்லவில்லை ஜாதி இருக்கு என்று!

 ஜாதி வழியாகபிரித்து  தெய்வங்களைப் பிரித்து வழிபடச் சொன்ன அயோக்கியன் வகுத்துக் கொடுத்தது ஜாதி !!

   உலகபிறப்பில்!
ஒரு தாய் வயிற்றில் பிறந்த குழந்தைகள்! ஆணாக இருக்கலாம் அல்லது பெண்ணாக!
இருக்கலாம்!!

  ஒரு உலகத்தாய் மண்ணில் பிறந்த குழந்தைகள் வெவ்வேறு ஜாதிக்காய் பிறக்கவில்லை! பிரிக்கப்பட்டது! மனிதனால், சுயநலத்திற்காக செய்யும் தொழிலை வைத்து !!

  நன்றாக படுத்துக்கொண்டு சிந்தித்துப் பாருங்கள்! தெய்வங்களை வணங்க வேண்டாம் என்று சொல்லவில்லை!!

   தெய்வங்கள் இல்லை என்றும் நாங்கள் சொல்லவில்லை!!

  அது உங்கள் விருப்பம்! அன்பின் கூடாரத்திற்குள் அமருங்கள் !அதுவே அதிகாரத்தில் கூடாரமாய் இருக்கக் கூடாது !!என்று தான் சொல்கிறோம்!!

   அதற்குள் உள்ள கட்டுகளை கட்டவிழ்த்து விடுங்கள் !  
 சமதர்மமும் பெருகட்டும்!

  டாக்டர் அம்பேத்கர் பெருமைக்குரிய தந்தை பெரியார்,
 பேரறிஞர் அண்ணா! இவர்கள் வழியில் நாங்களும் சிலர்!

   ஆவோம் நாமும் பலர்! ஆகட்டும் உலகமே எனும் பலர் !!
அறிவியல் ஆய்வுக்குள் அடங்காத கதைகளே!எல்லா
மதகோட்பாடுகளும்!

  அன்புடன்
கவிதை மாணிக்கம்

004.

சிந்தனையை
 சீர்படுத்தி...

எண்ணத்தை
 ஏர் ஒட்டி...

உள்ளத்தை
 உரமாக்கி...

எழுத்தை
 ஒன்று கூட்டி...

சொல்லை
 ஊட்டம் ஏற்றி...

 அறிவை
 விரிவுபடுத்தி...

 செயலை
 பண்படுத்தி...

 விளக்கத்தை
விரிவாகவும்...
விரைவாகவும்...
 வீரியம் ஏற்றியும்... விமர்சனமாகவும்..
விளக்கமாகவும்...
விரிவுரையாகவும்
 விடியல் தந்த...
சமூகப் போராளி
 தந்தை
ஈரோட்டுப் பெரியார்...


 அகத்தின் அழகு முகத்திலும்...

 முகத்தின் அழகு
 வெண் தாடி சிரிப்பிலும்...

 சிரிப்பின் அழகு
சொல் செயலிலும்...

 செயலின் அழகு
பார்வையிலும்...

 பார்வையின் அழகு
 புரிதலிலும்...

 புரிதலின் அழகு
 தொலைநோக்கு சிந்தனையிலும்...

 சிந்தனையின் அழகு
 மனித குல
 முகவரியாகவும்...
 முன்னுரையாகவும்
 முடிவுரையாகவும்
 திகழ்ந்தவரே
 தந்தைபெரியார்...
அவர்கள்...


கவிஞர்
 ப.சூரியச்சந்திரன்.

005

தீப்பிழம்பே....
-------------------------------
ஈரோட்டின் சூரியனே!
இளைஞர்களின் நாயகனே!
பகுத்தறிவு சுனாமியே!
பைந்தமிழ் நங்கூரமே!

இனமான புரட்சியாளரே!
இதயத்தின் துடிப்பானவரே!
சாதித்து காட்டியவரே!
சாதிமதத்தை தகர்த்தவரே!

சுயமரியாதையின் சுவாசமே!
சூழும் இன்னலை வேர்யறுத்தவரே!
அடிமைத்தனத்தை முடமாக்கியவரே!
அதிகாரத்தை அடக்கியவரே!

பெண்ணினத்தை காத்தவரே!
போராளியாக உருவாக்கியவரே!
அண்ணாவை கண்டெடுத்தவரே!
கலைஞரை அரவணைத்தவரே!

விடுதலையின் வீரரே!
வீணர்களை விரட்டியவரே!
சதிகாரர்களை சாடியவரே!
சாத்திரங்களை ஒதுக்கியவரே!

திராவிடத்தின் வெண்புரட்சியே!
தன்மான தலைமகனே!
தமிழ்நாட்டின் தீப்பிழம்பே!
தமிழர்களின் உயிர்மூச்சே!உம்மை வணங்குகிறேன்!

    கவிஞர் இனியன் பாலா.சென்னை-56