அண்ணா ...! 020

அறிஞர் அண்ணா அறிவிச்சுடர் விருது கவிதை போட்டி

அண்ணா ...! 020

அண்ணா!...

மூன்றெழுத்து மந்திரமே! 
முனை மழுங்காச் சித்திரமே!
சந்தனப்பேழை துயிலும் 
சங்கத்தமிழ் காவலனே! 

பொழிவுகளால் போலிவேற்றி 
புத்தம்புது தமிழை அரங்கேற்றி 
அன்னைத் தமிழுக்கு 
நீ சூட்டிய மணிமகுடத்தின் 
மின்னும் ஒளி காட்டும் 
வண்ணப் பாதையில் 
உன் குரலோடு குவலயத்தில் 
வழி நடக்கின்றோம் நாளும்!

சாமானியர்களும் 
சரித்திர மனிதர்களாக 
சங்கடங்கள் பல பெற்று 
நீ தாங்கி நின்ற 
கொள்கைகளின் வழியில் 
தோன்றி வந்த சுடர் தலைவன் 
கலைஞரின் வழித்தோன்றலால் 
மீண்டெழுந்து 
நடந்து கொண்டிருக்கிறது 
திராவிடத்தின் ஆட்சி!

உன் 
எழுத்துக்களின் அடித்தளத்தில் 
எழுச்சியான உரை வீச்சுகளில் 
எழுப்பப்பட்ட 
எளியோரின் கோட்டை 
எதிரிகளால் என்றும்  
தகர்க்க முடியாத 
எழில் கோட்டை!...
அது தரும் பாதுகாப்பில் 
தமிழர்களும் 
தங்க தமிழகமும்...

என்றும் 
உனை நினைக்கின்றோம்...
இன்றும்!

-பாப்பாக்குடி இரா செல்வமணி.