அறிவு வெளிச்சம் அம்பேத்கர் 070

அறிவர் அம்பேத்கர் விருது கவிதைப் போட்டி

அறிவு வெளிச்சம் அம்பேத்கர் 070

அறிவு வெளிச்சம் அம்பேத்கர்

இந்திய அரசியல் சாசனத்தின் தந்தையே //

இன்னல்களைத் தகர்த்தெறிந்து சாதித்திட்ட விந்தையே //

மக்களின் அறியாமையை நீக்கிய அறிஞரே //

மட்டமான மூடநம்பிக்கையை மனதிலிருந்து நீக்கியவரே //

கற்பி புரட்சிசெய் ஒன்றுசேர் என்றவரே //

கல்வியால் சாதித்து சாதனைகளைப் புரிந்தவரே //

கடின முயற்சியால் பாரிஸ்டர்பட்டம் வென்றவரே //

கல்வியினை அமெரிக்காவில் பெற்றிட்ட முதல்இந்தியரே //

ஒடுக்கப்பட்ட மக்களின் உயிர் மூச்சே //

ஒல்காப் புகழினைத் தொட்டதுந்தன் பேச்சே //

ஆடுகளாய் இருக்கக்கூடாதென்ற அற்புத மனிதரே //

சிங்கங்களாய் வீறுகொண்டெழுவென முழங்கிய புனிதரே //

சுயமரியாதை இழப்பது அவமானம் என்றவரே //

சுயசிந்தனையோடு செயல்பட நல்வழி வகுத்தவரே //

சுப்பனுக்கும் சுப்பிரமணிக்கும் வாக்குரிமைத் தந்தவரே //

சுயநலம் சிறிதும் இல்லாத புரட்சி யாளரே //

ஆற்றலின் அடைமொழியே அறிவின் ஊற்றே //

அறிவுச் சுடரொளியே அடக்கத்தின் அடையாளமே //

எழுச்சியின் அறிமுகமே புரட்சியின் பூர்விகமே //

எல்லா மக்களுக்கும் உன்னத உடன்பிறப்பே //

மண்ணுரிமை வாங்கித் தந்த பண்பாளரே //

பெண்ணுரிமைக்கு குரல் கொடுத்திட்ட வித்தகரே //

இந்தியாவின் கலங்கரை விளக்கமாக திகழ்ந்தவரே //

இறுதிவரை நெஞ்சில் நிலையாய் நின்றவரே... //

-கவிஞர்.வங்கனூர்.த.சீனிவாசன் திருவள்ளூர் மாவட்டம்