நவக்கரை நாயகர்கள் விருது பிப்ரவரி 11ல் AJK கல்லூரி வளாகத்தில்
நவக்கரை நாயகர்கள் விருது
கோயம்புத்தூர்:
AJK கல்வி குழுமம், AJK Innovation Incubator Foundation (AIIF) மற்றும் StartupTN இணைந்து நடத்தும் “Convergence 1.0” நிகழ்வின் முக்கிய அம்சமாக, “நவக்கரை நாயகர்கள்” விருது வழங்கும் விழா 2026 பிப்ரவரி 11ஆம் தேதி காலை 9.30 மணிக்கு, நவக்கரை, கோயம்புத்தூரில் அமைந்துள்ள AJK கல்லூரி வளாகத்தில் நடைபெற உள்ளது.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து புதுமையான தொழில் முனைவோர்கள், ஸ்டார்ட்அப் நிறுவுநர்கள் மற்றும் சமூக மாற்றத்தை உருவாக்கும் இளம் தொழில்முனைவோர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களின் சிறப்பான சாதனைகளை பாராட்டும் விதமாக இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன. “தமிழகத்தில் முதல் முறையாக” நவக்கரையில் நடைபெறும் இந்த விருது விழா, தொழில்முனைவு சூழலை ஊக்குவிக்கும் ஒரு முக்கிய முயற்சியாக அமைந்துள்ளது.
இந்த நிகழ்வில் கல்வி, தொழில், ஸ்டார்ட்அப் துறை சார்ந்த முக்கிய பிரமுகர்கள், முதலீட்டாளர்கள், தொழில்முனைவோர் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டு, தொழில்முனைவோருக்கான வழிகாட்டுதல், ஊக்கம் மற்றும் இணைப்பு வாய்ப்புகளை உருவாக்க உள்ளனர். மேலும், தொழில்முனைவோருக்கான புதிய வாய்ப்புகள், இன்குபேஷன் ஆதரவு மற்றும் அரசு திட்டங்கள் குறித்து விழிப்புணர்வும் வழங்கப்படும்.
இந்த விருது விழாவின் மூலம், தமிழகத்தில் உருவாகி வரும் புதிய தலைமுறை தொழில்முனைவோர்களை ஊக்குவித்து, அவர்களின் வெற்றிப் பயணத்தை சமூகத்திற்குக் கொண்டு சேர்ப்பதே நோக்கமாகும்.
நிகழ்வு விவரங்கள்:
- தேதி: 11 பிப்ரவரி 2026
- நேரம்: காலை 9.30 மணி
- இடம்: AJK கல்லூரி வளாகம், நவக்கரை, கோயம்புத்தூர்
#AJKGroupofInstitutions #AIIF #StartupTN #MagizhchiFm

Comments (0)