அம்மா என்னும் வரம்

அம்மா கவிதை

அம்மா என்னும் வரம்

அம்மா எனும் வரம்

உலகில் உயிர்களின் 
உன்னதக் கொடையே
நிலமாய்த் தாங்கிடும்
நித்திலம் தாயே

உயிர்மெய் போல
உட்கரு சுமந்தாயம்மா
குயிலிசைப் பேச்சால்
குதூகலம்  அளிப்பாயம்மா

துயர்தனைச் சுமந்தாலும்
துளிர்செடிச் நீயம்மா
அயர்ந்து கண்டதில்லை
ஆதவன்போல் ஓயாதவளம்மா

எனக்கொன்று என்றால்
எப்போதும் துடிப்பாயே
உனக்கென்ன வந்தாலும்
உடையாத வேங்கையம்மா

வறுமை வாட்டினாலும்
வாடாத மலரம்மா
சிறுபிள்ளை பசிபோக்க
 சில்லறையாய் நீயம்மா

வலிகள் சிதைத்தாலும்
வசந்தம் கொடுத்தவளம்மா
வழிகள் எத்தனையோ
வரமாய்ச் சுமப்பாயம்மா

தாயெனும் கோவிலாய்
தரணியின் சக்தியம்மா
சேயெனும் பிள்ளையாய்
சேர்த்தணைப்பேன் நானம்மா

கவித்தாரகை
கிருஷ் அபி இலங்கை.