முண்டாசுக் கவி பாரதி

பாரதியார் பிறந்த தினம் கவிதை

முண்டாசுக் கவி பாரதி

முண்டாசுக் கவிஞன்

எட்டயபுரத்தின் எழிலரசன்
எத்திக்கும் முழங்கி 
சங்காய் ஒலிக்கும்
சாதனை நாயகன்

பாட்டுக்கொரு தலைவன்
பாரதத்தின் பாரதி
பெண்ணடிமை விலங்கினை
உடைத்த வித்தகன்

அண்டத்தின் ஆதவனாய்
தமிழினத்தின் தலைமகனாய்
தமிழையே நேசித்து
யாசித்து உயிர்கொண்டவன்

ஆங்கிலேயர் கொட்டத்தை
ஆயுதமின்றி தகர்த்தெரிந்தவன்
எழுதுகோல் முனையால்
எழுச்சி கண்டவன்

காவியங்கள் போற்றிடும்
கட்டுக்கடங்கா முண்டாசுக் கவிஞன்
மலைபோல் உயர்ந்து
அலைபோல் எழுந்தவன்

எண்ணற்ற கவித்துளிகளை
மழையாகப் பொழிந்து
மக்களை நனைந்திடச் செய்து
செழிமை கொடுத்தவன்

என்றும் மங்காது வாழும்
தமிழோடு ஒன்றிய 
அவன் புகழ் வாழ்க 
வாழ்க தமிழ் வாழிய வாழியவே

கிருஷ் அபி, இலங்கை.