மாயோனின் மகத்துவம்

பெரியார் பிறந்த தினம் கவிதை

மாயோனின் மகத்துவம்

மாயோனின் மகத்துவோம்

பகுத்தறிவு பகலவன்
பெயர் பெற்றவர்//
மனித தன்மையும்
சமுதாயத்தையும்
உருவாக்கியவர்//
அனைத்து மக்களும்
பிறப்பால் சமமானவர்கள்//
மானமும் அறிவும்
மனிதனுக்கு அழகு//
பகுத்தறிவு என்பது
மனிதனுக்கு உயிர்நாடி//
விதியை நம்பி மதியை
இழக்காதே// 
பிறருக்கு தொல்லை
தராத வாழ்வே//
ஒழுக்கமான வாழ்வு
வாழ பழகு// 
பக்தி என்பது தனிச்
சொத்து//
மதம் சாதி எனறெதுவும்
கிடையாது//
உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்பது
அடிமைதனம்//
ஊன்றிய விதைகள் விருட்சமாய் இளையோர்//
தமிழ்நாடு தமிழனுக்கே
வாசகத்தை எழுதுங்கள்//
அறியாமை முடநம்பிக்கைகளின்
கடும் எதிரி//
மக்களை உயர்த்த
பாடுபட்டவர் தந்தை//
உயர்ந்த எண்ணம்
கொண்ட கல்வியாளர்//

த.விஜயராணி
பொன்னேரி
திருவள்ளுர் மாவட்டம்.