சாதனையாளர் அம்பேத்கர் 045

அறிவர் அம்பேத்கர் விருது கவிதைப் போட்டி

சாதனையாளர் அம்பேத்கர் 045

சாதனையாளர் அம்பேத்கர் ...

என்னை கடவுள் ஆகாதே நீ!
தோற்றுவிடுவாய்.
என்னை ஆயுதம் ஆக்கி போராடு!

மனிதனுக்கு மனிதன் சரியான
உறவுகள் கொள்வதை தடுக்கின்ற 
எந்த ஒரு மதமும் மதமே அல்ல 
அது அடக்கு முறையின் அவமானமே

இப்படி எல்லாம் கூறியவர் யார் தெரியுமா? அவர்தான் டாக்டர் அம்பேத்கர் .

நம் நாட்டில் தற்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கும் மதத்தினுடைய முக்கியமான சாராம்சம் பட்டியல் இன மக்கள்.

இப்ப பட்டியலின மக்களுக்காக போராடியவர் தான் டாக்டர் அம்பேத்கர் அவர்கள்.

நீ படிக்கவே லாய்க்கு அற்றவன் என்று கூறிய இட்டத்தில் ...

படித்தார் படித்தார் படித்துக் கொண்டே பல பல பட்டங்களை பெற்றார்.

இவர் பெற்ற பட்டங்கள் இந்த உலகத்தில் யாரும் பெற்றிருக்கவில்லை.

அமெரிக்கா சென்று பட்டப்படிப்புகளை படித்த அம்பேத்கர் அவர்கள், என்னென்ன படிப்புகள் அங்கே இருக்கிறதோ அத்தனை படிப்புகளையும் படித்தார். 

தீண்டாமையை வேரோடு அழிக்க நினைத்தவர் டாக்டர் அம்பேத்கர்.

தீண்டாமைக்கு என பல சட்ட திட்டங்களை வகுத்தவர் இவர்.

பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் அவர்கள் இந்திய விடுதலைக்குப் பின்னர் சட்ட அமைச்சராகவும் பதவி ஏற்றிருக்கிறார். 

14வது குழந்தையாக பிறந்த இவர் மிகவும் பண்புடையவராகவும் ஆளுமை உடையராகவும் வளர்க்கப்பட்டிருக்கின்றார். மகாபாரதம் மற்றும் ராமாயணம் ஆகிய இதிகாசங்களை படைத்ததோடு மட்டுமல்லாமல் மகாராஷ்ட்ர மகான்களின் பக்தி பாடல்களையும் தனது குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுப்பவர் ஆக இருந்திருக்கிறார்.

ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் மேலவை உறுப்பினராக பதவி வகித்து இருந்தார். அப்பொழுது ஆங்கிலேயர்களை எதிர்த்து பேசிய பொழுது நாங்கள் கொடுத்த பதவி பிச்சையை வைத்துக் கொண்டு எங்களையே குறை கூறுகிறாயா என்று கேட்ட பொழுது நான் பிச்சை எடுக்கவில்லை நாடு நாடாக நீங்கள் தான் பிச்சை எடுப்பவர்களாக இருக்கிறீர்கள் என்று ஆங்கிலேயரை கடுமையாக சாடியவர் அம்பேத்கர் அவர்கள்.

தொழிலாளர்களின் நலனுக்காக பல சட்ட திட்டங்களை வகுத்து அவர்களின் நியாயங்களை சரிப்படுத்தியவர் டாக்டர் அம்பேத்கர் அவர்கள்.

டாக்டர் அம்பேத்கர் அவர்கள் நூல் வாசிப்பதிலே மிகவும் சிறந்தவராக விளங்கினார். விடிய விடிய புத்தகங்களை கொடுத்தாலும் படித்துக் கொண்டே இருப்பாராம். காலையில் நூலகத்திற்கு நுழைந்தால் நூலகம் பூட்டும் வரை அங்கேயே அமர்ந்து அசதி இல்லாமல் படித்துக் கொண்டே இருப்பாராம்.

இக்காலத்தில் ஒரு துறையை எடுத்து படிப்பதற்கே மாணவர்கள் மிகவும் அச்சப்படுகிறார்கள் ஆனால் அன்றைய காலத்தில் அம்பேத்கர் அவர்கள் அரசியல் வரலாறு தத்துவம் சட்டம் என பல துறைகளில் இருக்கக்கூடிய அனைத்தும் படித்து பட்டம் பெற்றவர் அது மட்டுமல்ல எழுத்தாளராகவும் புரட்சியாளராகவும் இருந்திருக்கின்றார்.

இன்றைக்கு சட்டம் படிப்பவர்கள் அம்பேத்கரின் சட்ட புத்தகங்களை அலசி ஆராய்ந்து பின்னரே நீதி வழங்கும் முறையை அறிந்திருக்கின்றனர்.

அடிமை வாழ்வு தான் கிடைத்த கதி என்ற எண்ணத்தை குழி தோண்டி புதையுங்கள் என்று கூறியவர் அம்பேத்கர் .

அவர் வழி செல்வோம் நல் பாதையை வகுப்போம்.

-பொ.ச.மகாலட்சுமி
கோவை.