ஆண் எனும் அச்சாணி...!

சர்வதேச ஆண்கள் தினம்

ஆண் எனும் அச்சாணி...!

ஆண் எனும் அச்சாணி 

சகித்துக் கொள்வது,
சகலமும் செய்வது,
அசராமல் உழைப்பது,
அடுத்தவரை குறை சொல்லாதது,
விட்டுக் கொடுப்பது,
வீராப்பு காட்டுவது,
கவலையில் உழல்வது,
கண்டிப்பில் மிளிர்வது,
கனவில் மூழ்குவது,
கற்பனையில் மிதப்பது,  

 ஓடி ஓடி உழைப்பது,
 ஓயாமல் சிந்திப்பது,
 தாடி வைத்து தவிப்பது,
 தன்னொழுக்கம் காப்பது,
 சத்தம் போட்டு திட்டுவது,
 சலிப்பு காட்டி முறைப்பது,
 நிலைகுலைந்து சுருள்வது,
 நிம்மதி இழந்து உழல்வது,
 குடும்ப பாரம் சுமப்பது,

வலிகளோடு வாழ்வது,
கரம் பிடித்து தோழமை காப்பது,
கண்ணியத்தோடு நட்பு கொள்வது,
இதயம் நெகிழ காதலனாவது,
தோள் கொடுக்க சகோதரனாவது,
மடி தரும் தகப்பனாவது,
வாழ்நாளின் துணைவனாவது,

இப்படி
எல்லாமுமாய் இடம் பெற்று,
குடும்பத்தை தாங்கும் தூணாய்,
அகிலத்து நாயகனாக,
ஆண் எனும் அச்சாணி!
அவனே உலகின் எழுத்தாணி!

அகிலத்தின் அத்தனை 
சகோதரன்/மகன்களாக
பரிமளிக்கும் ஆண் 
தியாகச் செம்மல்களுக்கு
வாழ்த்துகள் கூறி,

ஆணினத்தை அண்ணாந்து
பார்க்கும் அதிசயமென நினைக்கும்...

முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி
குணசேகரன்,
M.Sc.,M.A.,M.Sc.,M.Ed.,M.Phil.,Ph.D.,
முதுகலை ஆசிரியை,
அரசினர் மகளிர் மேனிலைப்பள்ளி,
வாலாஜாப்பேட்டை...632513