சாதி இரண்டொழிய வேறில்லை

புதுக்கவிதை

சாதி இரண்டொழிய வேறில்லை

சாதியைப் பற்றிய
கவிதை என்றால்
ஐயா சத்தமில்லாமல்
கடந்து விடுவார்

மொழியைப் பற்றி என்றால்
மூச்சு விடாமல் படிப்பார்
எங்கள் சுவாசமே
தனி  மாடல்  தானே

பொது எதிரியை முதலில் புறமுதுகிட்டு
ஓடச்செய்வோம்
சொந்த எதிரியை
பிறகு பேசி 
தீர்த்துக்கொள்வோம்

 ஒளவை அன்றே
சொல்லி விட்டார்
சாதி இரண்டொழிய
வேறில்லை
அதவாது தினமும்
இரண்டு இரண்டு ஒழிய
வேறில்லை

தங்கேஸ்