அறிஞர் அண்ணா...! 036

அறிஞர் அண்ணா அறிவுச் சுடர் விருது கவிதை போட்டி

அறிஞர் அண்ணா...! 036

அறிஞர் அண்ணா 

பட்டு நெசவுக்குப் புகழ் பெற்ற 

காஞ்சிபுரத்தைச் சேர்ந்த 

நடராசன், பங்காரு அம்மாள் தம்பதியினருக்கு

 குட்டி கண்ணன் .

பாரதத்தாயின் தலைமகன்

பெரியாரின்  படைத்தளபதி

காஞ்சிபுரம் தந்த   தங்கத்தலைவன்

மக்களின் நம்பிக்கை நட்சத்திரம் 

கடமை கண்ணியம் கட்டுபாடு இம் மூன்று வார்த்தைகளை முன்மொழிந்தவர்

   • முதலமைச்சராக மட்டுமன்றி, 

• ஒரு அறிஞராகவும்,

• சமூக சீர்திருத்த வாதியாகவும், 

• ஒரு சிறந்த அரசியல்வாதியாகவும், 

• மிகச் சிறந்த பேச்சாளராகவும், 

• இன்றும் தமிழக மக்களால் அவர் நினைவு கூறப்படுகிறார்.                                                                                                                            என்றெல்லாம் புகழுக்கு உரியவர்                   எல்லோரும் செல்லும் வழியில்

   நீ போகாதே

   உனக்கான வழியை நீ தேடு*. 

   என்ற வரிக்கு சொந்தக்காரர்                                                                                                                  "வெற்றி பெற நினைப்பவனுக்கு

வானம் கூட வாசல் படி தான்"

அதன் படி வாழ்ந்து காட்டியவர் 

மூன்று எழுத்துக்கு  உரிமையாளர் .

வெற்றியோ,தோல்வியோ

கடமையை செய்வோம்

யார் பாராட்டினாலும் ,

பாராட்டாவிட்டாலும்

கவலை வேண்டாம் என்று 

நம் நாட்டுக்கும் நமக்கும்

 பல நல்ல

வாழ்க்கை நலத்திட்டங்களை

செயல்பாட்டுக்கு கொண்டு வர

 பெரும் பங்கு வகித்தவர். 

 நம் “அறிஞர் அண்ணா "

- திருமதி .ராஜலட்சுமி,

இராஜபாளையம்.