பாரதி எங்கள் சாரதி

பாரதியார் நினைவு தினம் கவிதை

பாரதி எங்கள் சாரதி

பாரதி எங்கள் சாரதி 

பாரதி 
நீ ஒரு தீ.
முண்டாசு கவி
உனைப் போற்றும் இப்புவி.

முறுக்கு மீசைக்கு சொந்தக்காரன்.
வெகுந்டெழுவதில் ரோஷக்காரன்.
உன் கண்களோ தீ குழம்புகள். 
உன் சொற்களோ எதிரிகளை சுட்டெரிக்கும் தீ பிழம்புகள்.

உன் எழுத்துக்களோ
குழந்தைகளுக்கு ஆக்கம்.
பெண்களுக்கு ஊக்கம். 
பகைவர்களுக்கு தாக்கம்.
படிப்பவர்களுக்கு சொர்க்கம்.

நீ நாளும் வாழ்ந்தாய் வறுமையில்.  
சிங்க நடை போட்டாய் பெருமையில்.
உலகத்தில் போக்கினாய் மருமையை. 
உனை மறவாமல் அழிப்போம் சாதி சிறுமையை..

பாரதி,
நீயே எங்களை வழி நடத்தும் சாரதி.

அ. உமா சங்கரி 
முதுநிலை ஆசிரியை,
எம். ஏ., எம்.பி.ஏ., எம்.பில்.,
கேம்பிரிட்ஜ் மெட்ரிக் மேல் நிலைப் பள்ளி 
சைதாப்பேட்டை,
சென்னை-15.