பாரதியார்... 066

தமிழ்ச் சுடர் விருது கவிதைப் போட்டி

பாரதியார்... 066

பாரதியார்...
பாட்டுக்கோட்டை நாயகனே!...
கட்டபொம்மனின் அடங்காத அக்னிமூச்சே!
எவற்றில் இல்லை உன்பாட்டு..
ஆதிக்க அரக்கனையும் குத்திக்கிழிக்கும் 
உன் பாட்டுச் சூலாயுதம்...
முக்கால் நூற்றாண்டுக்கு மேலாயிற்று நீ தோன்றி மறைந்து 
ஒவ்வொரு ஆண்டும்
உன் முறுக்கு மீசையையும் சூரியக்கண்களையும் புகழாத நாவுண்டோ?..
பெண் -வேண்டும் போது தொட்டு சுவைக்கும் ஊறுகாய் அல்ல - பல அற்புதங்களை பெற்றெடுக்கும் வீரத்தாய் என்று சாடியவன் நீயல்லவா?...
புரட்சிப்பெண்களை வரவேற்று  பூபாளம் பாடிய பிரங்கியே!...
உனை பாடாத நாவுண்டா?....
நீ மட்டும் பிறந்திருக்காவிடில் தமிழ்க்கவியுலகம் கர்ப்பத்திலேயே கரைந்து போயிருக்கும்...
உணர்வுகளை உசிப்பிவிட்டதில் புரட்சியாளனாய்....
மனங்களை கொய்வதில் மன்மதனாய்....
வருங்காலத்தைச் சொல்வதில் தீர்க்க தரிசியாய் ...
எதுவாக இல்லை நீ யாதுமாகி நின்றாய் ....
- பொ.பரமேஸ்வரி,
உதவிப்பேராசிரியர்,
எக்ஸல் வணிகவியல் மற்றும் அறிவியல் கல்லூரி, குமாரபாளையம், நாமக்கல்.