பாரதி..! 065

தமிழ்ச் சுடர் விருது கவிதைப் போட்டி

பாரதி..! 065

மகாகவி சுப்பிரமணிய பாரதியார்.

திருநெல்வேலி சீமையில் எட்டயபுரத்தில் பிறந்த கவி நாயகனே //

சின்னச்சாமி ஐயர் லட்சுமி அம்மையார் என் புதல்வரே//

சுப்பையா என்று அன்பாக அனைவராலும் அழைக்கப்பட்டவரே //

பதினோராம் வயதிலேயே கவிதை புணைந்தவரே //

எட்டயபுரம் மன்னரால் பாரதி பட்டத்தை பெற்றவரே //

செல்லம்மாளை கரம் பிடித்து இல்வாழ்க்கையில் பிணைந்தவரே //

தங்கம்மாள் சகுந்தலா இருவருக்கும் தந்தையானவரே //

பாஞ்சாலி சபதத்தில் பெண்ணின் பெருமையை நிலைநாட்டியவரே //

குயில் பாட்டு, பாப்பா பாட்டு ,கண்ணன் பாட்டு என பல வகையான பாடல்களை கொடுத்தவரே //

பல மொழிகள் கற்று அறிந்தாலும் தமிழ் மொழி போல் எங்கும் காணோம் என்றவரே //

சுதேசமித்திரன் பத்திரிக்கைக்கு ஆசிரியராக பணியாற்றியவரே //

ஆங்கிலேயருக்கு எதிராக இந்தியா என்கின்ற பத்திரிக்கையை தொடங்கியவரே//

மகாகவி தேசிய கவிஞர் காளிதாசன் புதுக்கவிதையின் முன்னோடி என்ற சிறப்புப் பெயர்களை பெற்றவரே //

தேசியம், தெய்வீகம், தமிழ் சமூகம் ,பெண் விடுதலை, சாதி எதிர்ப்பு, காதல், இயற்கை என அனைத்து கவிதைகளையும் படைத்தவரே //

தேடிச் சோறு தின்று பல சின்னஞ் சிறு கதைகள் பேசி மனம் வாடி துன்பம் மிக உழன்று பிறர் வாட பல செயல்கள் செய்து நரைக்கூடிக் கிழப்பருவம் எய்தி கொடுங்கூற்று கிரையென பின் மாயும் பல வேடிக்கை மனிதரைப் போல நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ என பொங்கி எழுந்தவரே //

இனி ஒரு விதி செய்வோம் அதை எந்த நாளும் காப்போம் தனி ஒருவனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம் என்று உணர்த்தியவரே//

பட்டினி கிடந்து பசியால் மெலிந்து பாழ்பட நேர்ந்திடும் கட்டி இழுத்து கால் கை முறிந்து அங்கம் பிளந்து இழந்து துடித்திடும் பொங்கு தமிழை பேச மறப்பேனோ என தமிழுக்கு சிறப்பு செய்தவரே //

நீ பேசிய கவிதையில் எல்லாம் உன் முகத்தை நான் பார்க்கிறேன் //

பொ.ச.மகாலட்சுமி
கோவை