அன்புள்ள மகனுக்கும்... மகளுக்கும்...

அம்மா கவிதை

அன்புள்ள மகனுக்கும்... மகளுக்கும்...

அன்புள்ள மகனுக்கு! மகளுக்கு !!

அழகு நம்மை விட்டுப் பிரியும் !
அன்பு நம்மை விட்டு பிரிவதில்லை!! ஆற்றல் அறியாது அலை பாய்கிறாய்!! ஆசை அப்பா ,அம்மா ஆசை அறியாது உல்லாசம் தேடுகிறாய் !!

இளமை துடிப்பு இருக்கும் வரையே முயற்சி கைகொடுக்கும் !!

இந்த இளமை முடியும் போது முயற்சி தோல்வியையே தழுவி நிற்கும்!!
 இன்றைய இளமைஅறியாத நண்பர்களோடு!

திரிய இன்பமாய் தெரியும்!!,, வருங்காலம் என்னாது !!
நாளைய முதுமை, கடந்த இளமை காலம் நினைத்து !நித்தம், தவிக்க வைக்கும்!!

 உன் உடல்பலமும்  உள்ள பலமும்உன்னை வளர்த்த !
உன் தகப்பன் தாய்க்கும் தெரியும்!

 நாட்டைக்காத்து வீட்டை காப்பது தந்தையின் ஆசை!
 நான்குபேர் போற்ற நாற்காலியில் அமர்ந்து பணி செய்ய தாயின் ஆசை! நண்பர்களுக்கு, நம்மோடு கூடிபாடி கும்மாளம் போட ஆசை !!
நாளைய வருங்காலம் சிறக்க சிந்தித்துப் பார் !
இளமை முடியும் முன்னே !சிறக்க செய் பூஜை !!

தேவையற்ற கலைகளை கலைந்தால் தான்! தேவை உள்ள பயிர் வளரும் !!

தேவையற்ற பயிர்(களை)என்னும் நண்பர்களை பிரிந்தால் தான், தேவையான வருங்காலம் சிறக்கும்!

கவிதைமாணிக்கம்