பாரதி..! 042

தமிழ்ச் சுடர் விருது கவிதைப் போட்டி

பாரதி..! 042

பாரதி நீ பார் தீயே

எட்டையபுரத்தில்
பிறந்தவரே
எட்டுவயதில்
கவிபடைத்தவரே

வறுமையைத்
துணைக்
கொண்டே
எளிமையாய்
வாழ்ந்தவரே

எட்டயபுரம் அரண்மனையில் கவிதை பாடி ஆசுகவியே ஆனவரே பாரதி என்ற பட்டம் பெற்றவரே பாரதியே


சுதந்திர போராட்டம் முழக்கம் பெற்றவரே நாட்டிற்காக தேச பக்தி பாடல்கள் பாடியவர் ஆடுவோமே பள்ளு பாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோமே என்று அன்றே முழங்கியவரே

தீர்க்கதரிசி ஆனவரே எங்களின் வரகவியான பாரதியே வரமாய் வந்தவரே செல்லமாவை மணந்து காக்கை திருந்திய எங்கள் ஜாதி என்று அவற்றுக்கும் பசி உண்டு என்று உணர்த்தி அவர்களின் பசியை போக்கிய அமுதசுரபியே பாராண்ட
பாரதியே


உலகம் வாழ உலகமே விழிப்புடன் இருக்க என்றென்றும் தேச பக்தி பாடல்களை பாடியவர் விடுதலை வெட்டிய ஊட்டியவரே வீட்டுக்குள்ளே பெண்ணை கூட்டி வைப்போம் என்ற விந்தை மனிதர் தலை சாய்ந்தார் என்று புரட்சி வரிகளை பெண்களுக்காக எழுதியவர்

முறுக்கு மீசையும் முண்டாசு முண்டாசுப்பும் சொந்தக்காரர்களாக பாரதி எங்களின் முப்பாட்டன் பாரதி வரிகளை வைர வரிகளாக எழுதி வைத்து எல்லோரையும் 


பின்பற்ற வைத்த பாராளுமன்ற எங்கள் மனங்களை ஆண்டவரே 

எண்ணற்ற வரிகளை வைத்து எல்லையில்லா சுதந்திரம் பெற்று தந்தவரே எங்கள் பாரதியே நீ வாழ்வாங்கு வாழ வேண்டும் ஐயா வாழ்வாங்கு வாழ வேண்டும் ஐயா


-முனைவர் கவிநாயகி 
சு.நாகவள்ளி
மதுரை.