தந்தை மகனுக்கு எழுதிய கடிதம்

உணர்வு கடிதம்

தந்தை மகனுக்கு எழுதிய கடிதம்

"யாரோ எழுதிய பழையகடிதம்
என் கையில் சிக்கியது"

   தந்தை ! மகனுக்கு, எழுதிக்கொள்வது!!
தடுக்கி விழுந்த குழந்தையை
  தலைதெறிக்க ஓடிவந்து தூங்குவாள் அன்னை!

தன்பிள்ளை எழுகிறானா?
எழமுடியாமல் தவிக்கிறானா?
என ,தனக்குள்ள ,வீரம் தன் பிள்ளைக்கு இருக்கிறதா! என பார்ப்பதுதந்தை!!

நீ! வீரனின் மகன் கோழை அல்ல!
வீழ்ந்தாலும் தன்னம்பிக்கையில் எழுந்து ஓடி சாதனை படைக்க கூடிய
பலம் உன்னிடம் கண்டேன்!!

அதனால் உன்கரங்கள்! நம் குடும்பத்தை உயர்த்தும் எனநம்பி!
உன் கல்லூரி வாழ்க்கை முடிய!

ஆகாத வழியில் கடன் தொல்லை வந்துநிறைய!

ஆடம்பர செலவு எனக்கே செய்யயதால்
ஆகாத நண்பர்களோடு சேர்ந்து !அவர்களையும் கெட வைத்து !
நானும் போதை, புகை பகைக்கு அடிமை ஆனதால்!!

சொந்த ஊர் சொந்தங்கள்! நகைக்க! பகைக்க! வாழ்ந்த
இந்த ஊரையே வெறுக்க!

சொந்தமூளையில் சிந்தித்தேன்!
வலுவிழந்ததேகம்கொண்டு!

சொத்துகளை விற்றும்
அரசியலில் நிற்கமதுபாட்டில்கள்வாரி இரைக்க!

நம் குடும்பத்திற்காய் ஒன்றும் செய்யாது!
கெட்டவனானேன்!

வீட்டார்சொல் கேட்க்காது !விரும்பியவளை திருமணம் முடிக்க!
தீராத பகை யெல்லாம் தேடிக்கொண்டேன்!

படித்தும் பண்பிழந்து!
குடித்தும் போதைக்கு
அடிமையாகி ! உடல் இளைத்தேன்!!

பணம் இருக்க,,! உடன் வந்த நண்பர்கள் பணமிழக்க! என்னை வெறுத்துப்பார்க்க!

எனக்குள் உறங்கிய மூளைக்கு வேலை கொடுத்தேன்!

இனிய கனிகள் இருக்க! காய் கவர்ந்து!!
அடைந்த இன்னல் போதுமென!!
அன்பு மனைவி! ஆசைபிள்ளைகளை !
உன்னிடம் ,வயது வந்த மூத்த மகனே! உன்னிடம் குடும்பபொறுப்பை ஒப்படைத்து!!

நான் விழுந்த குழியில் நீ வீழாதே!
என எச்சரித்து!!

தொடர்பில்லாத! எல்லைக்கு அப்பால்
செல்கிறேன்!!

என் தந்தை! நான்கற்கும் போது கற்றுத்தந்த கைத்தொழில் கைகொடுக்கும்!!

என நம்பிக்கையில் பயணிக்கிறேன்!
நலமோடு இருந்தால்
பத்து வருடம் கழித்து வருகிறேன்!!

என் மனைவி மேல் நம்பிக்கை வைத்து!
என்மகனே! உன்மேல் உயிரை வைத்து! 
என் தவறுகளை திரித்திக்கொண்டு! மனமாற்றத்தோடு!!
பயணிக்கிறேன்!

இந்த கடிதம் நீங்கள் படிக்கும் நேரம்! என் புது பயணம்!
தொடரும்,,,என்று
இந்த கடிதம் எழுதுகிறேன்!!

நீ என்னை போல் ஆகிவிடாதே
நான் செய்த தவறுகளைநீ !செய்து விடாதே!

இப்படிக்கு
அன்புள்ள அப்பா!அப்பா!

கவிதை மாணிக்கம்.