ஆண் சகோதரிகள்...

சிறுகதை

ஆண் சகோதரிகள்...

ஒரு நாள்......
பால்பண்ணை கிளைத் தெருவின் கொப்பு வீட்டில் பால்வண்ணனுக்கு பேச்சுப் பயிற்சி கொடுத்துவிட்டு உச்சி வெயிலில் கிளம்பினேன். வீட்டுக்கார அக்கா இங்கே சாப்பிட்டு கிளம்புங்களேன் என கேட்டுக் கொண்டார்! எனது சக உதவியாளர் தலையாட்டி நின்றார்.. நானோ எனக்கு ஒரு கல்யாணவீடுää மிர்சியம்மா தெருவில் உள்ள கல்யாண மண்டபத்திற்கு போகணும் எனக்கு ரொம்ப வேண்டிய பையன்ää வீட்டுல இருந்து அனைவரும் அங்க இருக்காக நானும் தலையை காண்பிச்சிட்டேன் என்றால் மனதுக்கு திருப்தியாக இருக்கும் என படி இறங்கினேன். மதிய சாப்பாட்டுக்கான நேரம் என்பதால் குழம்பு தாளிக்கும் வாசனை காற்றோடு கலந்து கிரக்கத்தை ஏற்படுத்தியது.
    தள்ளுவண்டியில் காய்கறி வாங்கிக் கொண்டிருந்த பெண்கள் வழிவிட்டு ஒதுங்கி நகரää சாக்கடை சுத்தம் செய்ய காத்திருந்த இருவர் விட்ட பீடி புகை முன்னோக்கி வந்தது. அவசர அவசரமாக முகக் கவசத்தை போட்டுக் கொண்டுää சுட்டெரிக்கும் வெயிலில் நடக்கலானேன்.
    வேகமாக எட்டு வைத்து நடக்க ஏதுவாக தோள் பையை விரல்களால் மடக்கி தோளில் மாட்டிக்கொண்டுää ஒரே மூச்சாக பெயர்த்துக் போட்ட சாலையின் தூசுகளையும் இளகிய தாரின் வெக்கையும் உடம்பை தாக்கும் மனித இடைவெளி நெரிசலில்; பேருந்து நிலையம் மார்க்கெட்டைக் கடந்து ராஜபாளையம் பிரதான சாலையில் முன்னும் பின்னும் வரும் இறைச்சலில் ஒவ்வொரு தெருவின் ஆரம்ப இடத்திலும் கொட்டிக் கிடக்கும் குப்பைகளில் மேயும் கால்நடைகள்ää தெருவோர பழமுதிர்ச்சோலைகள்ää கூழ்க்கடை கூட்டம்ää ஜவுளி மால்களின் அதிரடி ஆப்பர் விளம்பர தட்டிகள்ää மைக்ரோ பைனான்ஸ் வங்கிகள்ää பிராய்லர் கடை ரத்த நெடி புரோட்டா கடைகளின் கொத்து போடும்; கரண்டிகளின் சத்தம் அதுக்கு எதிரே மாரியம்மன் கோவில் தீபாரதனை மணியோசைää ரோட்டை ஆக்கிரமித்துக்கொண்டு நிற்கும் கார் ஓட்டுநர்கள்ää கல்யாண மண்டபம் வரை ஆபரண நகைகளை அள்ளிப் போட்டுக் கொண்டும் பட்டுச் சேலையில் பெருமித நடை நடந்தும் குழந்தைகளை கையைப் பிடித்து நடந்து செல்லும் பெண்கள்... திருடர்கள் ஜாக்கிரதை என ட்ராபிக் போலிஸ் எச்சரிக்கையை காதில் வாங்காமல் ரோட்டை தட்டுத் தடுமாறி கிராஸ் பண்ணி போவதை கவனித்துக் கொண்டேää பழக்கப்பட்ட நபர்களுக்கு வணக்கத்தை கூறியவாறு மண்டபத்தை நெருங்கினேன்.
    யாருமே கண்டு கொள்ளாத ஆளாய் முதல் தளத்திற்கு படியேறி போய் மணமக்களைத் தேடினால் உணவு அருந்த சென்ற தம்பதிகள் புன்னகை ததும்ப இரண்டாம் தளத்தில் இருந்து படி இறங்கி வருவதை கவனித்தேன். பின் வெயிலின் அருமை நிழலில் தெரிந்தது. தலையில் இருந்து மார்பு வரை வழிந்தோடும் வியர்வையை உலர்த்த மின் விசிறியின் கீழ் சற்று ஓய்வெடுக்க மனம் விரும்பி அமர்ந்தேன். ஜன்னல் ஓரத்தில் அமர்ந்திருந்த என் தங்கைகள் அண்ணன் குழந்தைகள் கைகாட்டி கூப்பிட நானும் அவர்களோடு இணைந்து சிறிது நேரம் கல்யாணத்துக்கு வந்தோர் போவோரை பார்த்து சிரித்துப் பேசி மகிழ்ந்தேன். என் தம்பியின் மனைவி நேரம் இரண்டை தொடுகிறது. போகலாம் என சட்டென முடிவெடுத்து என்னிடம் இருந்து விடைபெற்று நகர்ந்தனர்.
    தனியாளாய் பிளாஸ்டிக் சேரில் அமர்ந்து வெறுமை கவ்வ மனமேடையின் கவனம் என் மனவோட்டத்தை திசை திருப்பியது. நூன்கு ஆண் சகோதிரிகள் ஒரு மணமக்களை அவர்களின் வழக்கப்படி பல ஆராதனை அசைவுகளோடு பேசி கைகொடுத்து தலையில் கை வைத்து வாழ்த்தியதை என் இரு கண்கள் வழியாக மாப்பிள்ளையின் பழக்க வழக்கத்தை ஆராய்ந்தேன்.
    என் அலைபேசியின் அழைப்பு எண்ணை திசை திருப்பிவிட அலுவலக ஊழியரின் கேள்விகளுக்கு பதில் கொடுத்துவிட்டு விடுபட்டுப்போன அலுவலகப் பணியை பார்த்துக்கொண்டு இருந்தேன். அந்த நேரத்தில் கண்கள் கூச்சம் மேலோங்க சட்டை பாக்கெட்டில் இருந்த கண் கண்ணாடியை மூக்கில் மாட்டிக்கொண்டு கவனத்தை குவித்தேன்.
    சிக்கன் பிரியாணியின் கமகமவாசம் வயித்தை நிரப்ப மணமகனின் தாய் மருமகனே நீங்க சாப்பிடலயா! என கேட்கää அத்தையோ நான் கிளம்பும்போது சாப்பிட்டுக் கொள்கிறேன் என எழுந்தேன். மணமகனின் சித்தப்’பா தம்பி அனைவரும் வந்தார்கள் சந்தோசம் என கையெடுத்து கும்பிட்டார் நீங்கள் சாப்பிடாமல் இருப்பது வருத்தமாக இருக்கிறது எனறார். அண்ணா மன்னிக்கவும் நான் அசைவம் சாப்பிடுவது இல்லை என்றேன். அடடா! கடையில் வாங்கி வரவா... எனச் சொல்லவும்ää நான் எழுந்துவிட்டேன். மற்றவர்களுக்கு இது தெரிய வேண்டாம் என கையை பிடித்தேன். என்னைப் புரிந்து கொண்டு சரிங்க தம்பி இருந்துவிட்டு போங்கள் என நகர்ந்தனர்.
    போட்டோ கிராபர் கேபிள் இணைப்புகளை கொடுத்த சில நிமிடங்களில் தம்பதிகளின் வற்புறுத்தலில் ஆண் சகோதரிகள் மகிழ்வுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டு வேடிக்கை மனுசிகளாக என்னைக் கடக்கையில் என் பின்னால் அமர்ந்திருந்த வெள்ளையாடை தரித்த மீசை முறுக்கிய இளைஞனை கைசுட்டி  கூப்பிட்டு அவன் காலடியில் கிடந்த நூறு ரூபாயை போகிற போக்கில் சைகை மொழியில் காட்டியதோடு இல்லாமல் சிறு புன்னகையை மிக கௌரவமாக கையாண்டு கடந்தனர்.
    இதை சற்று திருப்பியவாறு கவனித்த எனக்கு எந்த மாற்றத்தையும் தரவில்லை என்றாலும் அதை குனிந்து எடுத்த இளைஞன் மிக அவசரமாக கண்களை மூடிக்கொண்டு தன் பாக்கெட்டில் வைத்துக்கொண்டு மிக சாதாரணமாக தன் எதிரில் அமர்ந்திருந்த பெண்ணிடம் பேசிக்கொண்டு இருந்தான்.
    உண்மையிலேயே பணத்தின் சொந்தக்காரணாக இருக்கலாம் என நினைத்துக்கொண்டு என் வேலையை பார்த்துக் கொண்டிருந்தேன். நேரம் இரண்டைத்தாண்டியதும் வருத்த நகர்வுக்கு ஆயத்தமாகி நடையை கட்டினேன். போகும் வழியில் இழக்கிய நண்பரை அழைத்துக் கொண்டு டீ குடிக்கப் போனேன். ஆனால் அவர் எனக்கு முன்பாக வெளியே சென்று விட்டதால் பசியோடு காத்திருந்தேன். அவரைத்தேடி மூன்று நான்கு வாடிக்கையாளர்கள் தேடிவர நானும் போன் செய்து வரவழைத்தேன்.
    பின் இலக்கிய திருப்தியோடு மாற்றுக் குழந்தைகள் வீடுதேடி அழைந்து கடைசியாக பல்வலியோடு அழுதுகொண்டிருந்த சங்கரி வீட்டிற்குள் செட்டில் ஆனோம். அவளை சமாதானப் படுத்த சிரிப்புக்காட்டி நடித்தாலும் அவள் கரைந்து கொண்டுதான் இருந்தாள். அவசர மருந்தாக காய்ச்சல் மாத்திரையை பொடியாக முனுக்கி பல்லின் இடுக்கில் வைத்து ஒதுக்கிய சிறிது நேரத்தில் வலிகுறைந்து சகஜ நிலைக்கு வந்தான்.
    பசியின் சொரணை முகத்தில் தெரிய பக்கத்தில் உள்ள மருத்துவமனைக்கு எதிரேயுள்ள டிபன் கடையில இரண்டு சப்பாத்தி ஆர்டர் செய்துவிட்டு அமர்ந்து விட்டேன். கூட்ட நெரிசலாகவே காணப்படும் இடத்தில் வேடிக்கைக்கு பஞ்சமில்லாமல் கண்கள் ரசித்துக் கொண்டது. மாஸ்டர் சுடச்சுட இலையின் மேல் வைத்துவிட்டு சைவக் குருமாவை இலையில் நிரப்பினான். அஜின மோட்டோ கலந்த பளபளப்பு மிதக்க இளஞ்சூட்டில் பற்களுக்கு அதிக வேலையே இல்லாமல் மென்று தொண்டைக்குள் இறங்கியது.
    பசியின் அருமை ருசிக்கு தெரியாததால் வயிறு ஏங்கியது. அந்த நேரத்தில் இன்னும் ஒரு சப்பாத்தி சாப்பிடணும் போல இருந்தது. மூளையின் பதில் கையின் வழியாக உணர்ந்தேன் கை தானாகவே பாக்கெட்டைத் தடவியது.. அந்த கணம் மனம் படபடத்தது. பேண்ட் பாக்கெட் டிக்கி பாக்கெட் என கை துளாவியது. இதயம் துடிப்பதை இனிச்சையாக உணர முடிந்தது. முகம் காட்டிக்கொடுத்து விடுமோ என நிதனமாக முயற்;சித்தேன். கை கழுவிய உடன் மிகச் சாதரணமாக நண்பருக்கு போன்போட்டு சார் மிக அவசரமாக பணம் வேண்டும் என எனது லேண்ட் மார்க்கை சொல்லி முடித்ததும் போன் சார்ஜர் இல்லாமல் சுவி;ட்ச் ஆப் ஆகிவிட்டது. இது என்னடா சோதனை? இன்று அசிங்கப்பட வேண்டியது வந்திருமோ? நம்மளை என்ன நினைப்பான் கடைக்காரன் என மனசு தவித்து ஹேண்ட் பேக்கை சாப்பிட்ட இடத்தில் வைத்துவிட்டு வெளியே வந்து நின்றேன். எப்படியும் வந்துவிடுவார் என மனம் சொல்லியது. ஏனென்றால் அதற்கு முதல் நாள்தான் அவர் பைக் ரிப்பேர் என பேசிக்கொண்டிருந்தோம்ää பேசாமல் புது வண்டி வாங்கிருங்கள் இதுக்கு எரை போட முடியாது அந்த ரூபாய்க்கு டிய10வ்கெட்டி விடலாம் என பேசியது யாபகத்துக்கு வந்தது. சரி சரி வேறு யாராவது தெரிந்த நபர்கள் வந்தால் வாங்கி விடலாம் என பைக்கில் வருபவரையும் போவோரையும் கண்கொட்ட பார்த்துக் கொண்டு இருந்தேன். ஒவ்வொரு நொடியும் மனம் பதபதைத்ததை உடம்பும் காட்டிக்கொடுத்தது. மேலும் பத்து நிமிடங்கள் காத்திருக்க முடியவில்லை குற்ற உணர்வில் புலன்கள் ஒடுங்கி நின்றேன். பரோட்டா மாவை பிசைந்து கொண்டிருந்த மாஸ்டரிடம் போன் சார்ஜர் பிளக் இருந்தால் போட்டுக் கொள்ளட்டுமா? ஏன கேட்டேன். அடுப்புக்கு உட்பக்கமாக பாருங்கள்! சேர்ந்தால் போட்டுக் கொள்ளுங்கள் என பதில் வந்தது. அடுத்த நொடியை ஏற்றுக்கொண்டு தாமதிக்காமல் பாதுகாப்பாக போனை ஆன் செய்துவிட்டு வெளியே வந்தேன். என்னை கவனித்துக் கொண்டிருந்த புரோட்டா மாஸ்டரும் கடைக்காரரும் என் நிலைமையை புரிந்தவர்களாகவே நடந்து கொண்டனர். மேலும் என்னிடம் சார் டீ போடட்டுமா? ஊட்காருங்கள்  என கேட்டு என் கண்களை சந்தித்துக் கொண்டனர். நான் வேண்டாம் ஒரு ஐந்து நிமிடம் என் நண்பர் வந்து கொண்டு இருக்கிறார் பின்னால் டீ சாப்பிடலாம் என சமாளித்தேன்.
    டயல்ஸ் கற்கள் ஒட்டும் துரை அண்ணனுடன் வந்து சேர்ந்தார் ராக்சார். என் கையில்  நூறு ரூபாயைத் திணித்துவிட்டு பி.ஆர்.ஜி.பெயிண்ட் கடைக்கு  வாங்கள் ஏழு மணிக்கு சந்திப்போம். இப்பொழுது அண்ணனுடன் சைட்டுக்கு போக வேண்டும் என கிளம்பிவிட்டார்கள்.
    நான் குற்றவாளியைப் போல் விரக்தியுடன் பணத்தை டீ மாஸ்டரிடம் கொடுக்கும் பொழுது கண்கள் சந்திப்பதை தவிர்த்தேன். அவர் இயல்பாகவே பேசி உங்கள் போன் சார்ஜரில் உள்ளது என ஞாபகப்படுததியவுடன் அவர் அனுமதியுடன் போனை எடுத்துக் கொண்டு எனது இலக்கிய நண்பரின் கடையைப் பார்த்து என் கால்கள் அனிச்சையாக நகர்ந்தன.
    கவனக் குறைவால் எனது பணத்தை என் கண்ணுக்கு முன்னால் இளைஞர் ஒருவன் நிச்சயமாக அவன் பணம் இல்லை என அவனுக்கு தெரியும் என் பணம் என எனக்குத் தெரியாது. ஆனால் எந்த விதி குற்ற உணர்வும் இல்லாமல் அவன் இருந்துவிட்டான். அதை அவனே பார்த்து எடுத்து வைத்துக் கொண்டால் கூட பரவாஇல்லைää யாருக்கும் தெரியாமல் கடந்தும் போய் இருக்கும். அதை காட்டிக் கொடுத்ததே ஒரு ஆண் சகோதரி.
    யோசித்துப் பார்க்கையில் என் தலை சுற்றியது. அவர்களிடம் உள்ள நேர்மை ஏன் இளைஞனிடம் இல்லாமல் போனது. ச்சே! யாரைப் பார்த்து என் கண்கள் வேடிக்கை பார்த்ததோ !  என் உதடுகள் சிரித்ததோ அவர்கள் இயல்பாகவே உயர்வான இடத்தில் வைக்கப்பட வேண்டியவர்களே! நிச்சயமாக அந்த இளைஞன் இல்லைதான்.
    சிறு வயது முதல் சிறுவயதுமுதல் தலைகுனிந்து வெட்கப்பட்டுää ஆண்களிடம் ஒண்டாமல் பொம்பளப் பிள்ளைகளிடம் உறவாடி வளர்ந்ததும்ää தன் பதின்பருவ வயதில் உடலில் உற்பத்தியாகும் ரசாயன சுரப்பிகளின் மாறுபாட்டால் புதர்கள் நிறைந்த இடத்தில் மீன்பிடிக்க அழியைக் கலக்கிவிட்டால் எப்படியானதோ அதைப் போன்ற மனம் தன் உடலில் ஏற்படுவதை ஏற்றுக்கொண்டு பெண்களைப் பார்த்து பொறாமைப்பட்டு தன் ஏக்கங்களை நகப்பாலிஸ் போடுவது மருதாணி வைப்பதுää உதட்டுக்கு சாயம் ப10சுவது என தன்னை ஊர் உலகத்துக்கு அறிமுகப்படுத்த சந்தர்ப்பம் கிடைக்காதா என்ற ஏக்கத்தில் தன்னைப் போன்ற நபரைத் தேடி நண்பனாக ஏற்றுக் கொண்டு காடுகரைகளில் ஊர் உலகமெல்லாம் சுற்றித் திரிய ஆசைப்பட்டு ஒரு கட்டிடத்தில் ஆண் சகோதரிகளின் கடைக்கண் பார்வை பட்டவுடன் மூளைச் சலவை செய்து ஊரை விட்டே ஓடிப்போய்... என்னைத் தேட வேண்டாம்ää நான் என் சொந்த பந்தங்களுடன் என் சகோதரிகளுட்ன் எனக்கான ஆயாவிடம் நான் அடைக்கலமாகிவிட்டேன். இப்பதான் நான் சந்தோஷமாக இருக்கேன் என காணாமல் போய் ஆடை அணிகலன்களால் உருமாறி தன் இச்சைகளை கழித்து தன் உருவக புருஷனாக ஒருவனிடம் ஒப்புக்கொண்டு கரக ஆட்டக்காரியாகவும்ää பஸ்டாண்டை வாழ்வாதரமாகவும் விடலைகளின் முதல் சாய்சாகவும் இருந்தாலும் எந்த இடத்திலும் முறையற்ற பணத்தை விரும்பாத மனுசியாகவும் வாழ்பவர்கள்.
    ஓவ்வொரு நாளும் எத்தனையோ மனிதர்களைக் கடந்து செல்கிறேன் அதில் அவர்களும் ஓர் அங்கமே! பஸ்களில் நகர வீதிகளில் அங்காடிகளில் என எதுவும் இளசுகளையும் மற்றவர்களை குறி வைத்து சங்கடப்படாமல் அவர்கள் அருகில் செல்லும் முன் பளார் என சத்தம் கேட்கும் படி கைதட்டி முன் எச்சரிக்கையுடன் அய்யாää அப்பாää தம்பிää என உறவுமுறை வைத்து கைநீட்டி ஒவ்வொரு நாளும்’ கிடைக்கும் வருமானத்தில் தன் ப10வுக்கும் பொட்டுக்கும் காதலர்களுக்கும் தேவையான ரூபாயை எடுத்துக் கொண்டு மீதிப் பணத்தை தாயிடம் கொடுத்து தன் தங்கைக்கும் பிள்ளைகளுக்கும் தம்பிகளுக்கும் இருக்கும் சுமையை தாயாக ஏற்றுக்கொண்டு தெருவில் இறங்கி வாழ்ந்து கழிக்கின்றனர். யார் யாரோ கொடுக்கும் சில்லரையைப் பெற்றுக்கொண்டு பல்லிலிக்கும் விடலைகளையும் குமரிகளையும் ஏளனப் பார்வை பார்க்கும் தாய்மார்களையும் இவங்களுக்கு எப்படி பொம்பள மாதிரி அச்சு அசலா உடம்பு இருக்கு என சந்தேகப்படும் நபர்களையும் தன் உதடுகளின் சுளிப்பில் கடந்து வேறு வண்டிகளுக்குள் போய் தன் பிழைப்பைப் பார்த்துச் சென்றுவிடுபவர்கள்ää இவர்களின் வாழ்க்கையே பிளாட்டு பார்ம்தான் வீட்டிலும் தங்க இடமில்லாமல் நல்ல சாப்பாடு இல்லாமல் நல்ல உறவுகள் இல்லாமல் ஒரு கேலிப் பொருளாக நடமாடும் இவர்களை சமூகம் தப்பாத்தான் பார்க்கிறது. ஆனால் ஐம்பது பேரிடம் கையேந்தினால் நூறு ரூபாய் சம்பாரிக்கலாம்ää ஆனால் கண்ணுக்கு முன்னால் கிடந்த ரூபாயை காட்டி எடுத்துக்கொள்ள சொல்லியவர்கள் எப்படி பிச்சைக்காரர்கள் ஆவார்கள். அப்படி என்றால் உண்மையில் அவர்கள் கையேந்துவது அவர்களின் அடையாளத் தொழிலா? யாசகம்-பிச்சைகேட்பது குறித்து பெரிதும் சிந்திக்க லானேன்.
        
                                   -கபிலன் சசிகுமார்,
                                      சங்கரன்கோவில்
                                           9952533779