காத்திருக்கும் விழிகள்..

காதல் கவிதை

காத்திருக்கும் விழிகள்..

என்னடி சோகம் பெண்ணே!
ஏனடி என்
 விழிக்குளத்திற்குள் விழுந்தாய்!!

நிற்காமல் நீரலைகள் வட்டமடித்துக் கொண்டே இருக்கிறது!!
 உன் நினைவுகளை போல!

உன் நிலையில் நான் இருந்து பார்க்க!
 என் மனதை கடிந்து கொண்டேன்!

உனக்கு இருக்கும் ஆயிரம் வேலைகளை காணாது!

உன்னை நினைக்காது  இருக்க மறுக்கிறது என் இதயம்!

எத்தனை சொல்லியும் உன் குறுஞ்செய்தி காய் காத்துக் கிடக்கிறது!

விழி இமைக்கு விலங்கிட்டு
வில்லங்கம் பண்ணுதே..!!

என்ன செய்வது? தெரியாது தவிக்கிறது!

-கவிதை மாணிக்கம்.