சுதந்திர காற்றை சுவாசிப்போம்...19

சுதந்திர தின கவிதை

சுதந்திர காற்றை சுவாசிப்போம்...19

சுதந்திரக்  காற்றை  சுவாசிப்போம்...


தியாகிகள் பெருமை நினைத்து தினமும் போற்றிடுவோமே...

 திரும்பிய திசையெங்கும் எம்மக்கள் என உணர்ந்திடுவோமே...

சுதந்திர வாழ்வு நாங்கள் வாழ்ந்திடவே...

உதிரம் சிந்திய உத்தமர்களை நினைவுகூர்ந்திடவே....

நமக்காய் சிறப்பாய் உதிக்கிறது  குடியரசு  தின விழாவே...

நாட்டுப்பண் பாடியதும்  உடலில் உள்ள நரம்புகள் புடைக்கின்றனவே....

இதுதான் பாரத தேசத்தின்  உன்னத பக்தியே....

வீரத்தால் அடைந்த சுதந்திரமென மார்தட்டியே...

அந்நிய சக்தியினை விரட்டியதாலே...

அடிமை வாழ்வு இனி இல்லையே...

சுதந்திரப் போராட்டம் சொல்லிடும் கதையே..

 தாய் மண்ணால்   செதுக்கிய கலையே...

தோல்விகள் யாவும் தொலை தூரம் ஓடட்டும்....

இந்தியரின்  சாதனைகள் பலவற்றை சரித்திரம் பேசட்டும்...

எல்லோரும் ஓர் தாய் மக்களென்ற எண்ணங்கள் பிறக்கட்டும்....

நமக்காய் மறைந்த உயிர்களின் நினைவலைகள்.....

இழப்பின் வலிகள் வடுவாய் இருந்திட்டாலுமே....

இந்திய தேசம் நம்தேசமென மார்தட்டிச் சொல்லிடுவோமே....

செந்நீர் விட்டு வளர்த்து காத்திட்ட சுதந்திரத்தை....

சிகரமாய்  தேசியக் கொடி பட்டொளி வீசியே...

வரமாய் மகிழ்ந்து 
கொண்டாடிடுவோமே...

சுதந்திரக் காற்றினை   இனிதாய் சுவாசிப்போமே....

 வாழ்க பாரதம் வாழ்க நிரந்தரம்


கவிஞர் முனைவர்.  செ.ஆயிஷா,
பல்லடம்