கட்டாயக் கல்யாணம்

சிறுகதை

கட்டாயக் கல்யாணம்

          தனமும் ராமுவும் அத்தைமகன் மாமன் மகள் . இருவரும் ஒரே வயதுடையவர்கள் . இருவரும் ஒருவரை விட்டு ஒருவர் இணை பிரியாமல் கல்வி நாட்டு நடப்பு ,சமூகம், ஆன்மீகம், குடும்பம் நட்பு அன்று அனைத்து விதமான பிரச்சனைகளை பற்றி பேசுவார்கள் இருவரது வீடும் அருகருகே இருந்ததால் பெற்றோரும் இவர்களுக்கு
முழு சுதந்திரம் கொடுத்து வளர்த்தனர் . இவர்களும் பெரியவர்கள் சொல் பேச்சை தட்டியதில்லை எல்லோரிடமும் நல்லபெயர் எடுத்து வந்தார்கள் .
          சைக்கிளில் டவுனுக்கு சென்று படித்துவிட்டு வரும் போது ஒன்றாக வருவார்கள் பெரியவர்கள் சொல்லிவிட்டதை வாங்கிவர அதை உரியவரிடம் கொடுத்து உதவுதல் என்று ஒருமித்த உணர்வோடு
இருந்தனர் . இந்த சூழலில் தனத்தின் அம்மா மாரடைப்பால் திடீரென இறந்துவிட இரண்டு குடும்பமும் திணறிப் போனது தனம் மனம் தடுமாறிப் போனாள் .  அவளுக்கு என்ன ஆறுதல் கூறியும் அவளால் தேற முடியவில்லை . இந்நிலையில் இந்த சூழலை மாற்ற
ஒரே வழி இவர்களுக்கு திருமணம் செய்து வைத்துவிட வேண்டும்
என்று பெற்றோரான தனத்தின் தந்தையும் ராமுவின் தந்தையும் முடிவு பண்ணி இருவரிடமும் கேட்காமல் இருவரிடமும் சொல்லாமல் இருவருக்கும் தெரியாமல் மறைமுகமாக திருமண ஏறபாட்டை செய்தனர் இவர்கள் நம் பிள்ளைகள் முறைப் பிள்ளைகள் நாம் சொன்னால் மறுக்க மாட்டாரகள் என்ற நினைவு அவர்களுக்கு
இந்த நிலையில் திருமணத்திறகு முதல் நாள் தனம் , ராமு இருவரையும் அழைத்து விவரம் கூறினர் பெற்றோர். இருவரும் அதிர்ச்சியடைந்ததோடு இப்படி ஒரு எண்ணமே எங்கள் மனதில் இல்லை வேண்டவே வேண்டாம் என்று போராடினர் மறுத்தனர் .
       இருவரின் அப்பாக்களும் எங்கள் கௌரவமே பாழாகிவிடும்
மதிப்பு மானம் மரியாதை எல்லாம் போய்விடும் நீங்கள் இருவரும் திருமணத்திறகு சம்மதிக்கவில்லை  என்றால்  நாங்கள் இருவரும் இறந்து விடுவோம் என்று கூறி உங்கள் கால்களில் விழுகிறோம் எங்களுக்காக சரி என்று சொல்லுங்கள் என்று கெஞ்சினர் பெரியவர் சொல்லுக்கு கட்டுபட்ட தனம்,ராமு இருவரும் திருமணத்திறகு
சம்மதித்தனர் . இவர்கள் இருவருக்கும் கட்டாயக் கல்யாணம் செய்து வைத்தனர் இரு உள்ளங்களும் பொறியில் அகப்பட்ட
எலி போல சூழ்நிலைக் கைதியாகினர்

முனைவர் கவிநாயகி
சு.நாகவள்ளி
மதுரை