கலாம் கவிதை

அப்துல் கலாம் பிறந்த நாள் கவிதை

கலாம் கவிதை

"ஏபிஜே அப்துல் கலாம்! 
பிறப்பு சம்பவம் வளர்ப்பு சாதனை!

உலகத்தில் உதயம் ராமேஸ்வரம் தென்கோடி!!
உள்ளத்தில் உதயம் உலகில் பல கோடி!!

இளமையோ! வறுமை நிலையோடி! இளமையிலே வறுமை போக்க செய்தித்தாள் பரிமாற்றம் தினம் நாடி!!

பள்ளி கல்வி முடித்து! கல்லூரி பயணம் தொடுத்து!
படிப்பிலே நடுத்தரமானாலும், நல்லதோர் புரிதல்!!

இயற்பியலிலே பட்டம்!
 இதை அடுத்து எம்ஐடி படிப்பிலேநாட்டம்!
இவரைப் பாராட்டி கொடுத்த புத்தக பரிசை கூட !
இவரின், வண்டி ஊர் பயணத்திற்கு! பணம் இல்லாத போக! இரவல் கேட்க நாணி! இருக்கும் புத்தகத்தை அடகு வைத்து!

அப்துல் கலாம் ஊர் திரும்பி !தன் பொக்கிஷ புத்தகத்தை !
அதீத ஆசையோடு திருப்பி! கடைக்காரரிடம் வாழ்த்துக்கள் பெற!

கஷ்டத்தில் கண்களை மூடாதே! அது உன்னை கொன்றுவிடு(ம்)
கஷ்டத்தில் கண்களை திறந்து! அதை நீ! கொன்றுவிடு!

என்ற சொல்லின் நாயகர் !
என்றும் இளைஞர்களின் முன்னோடி!
என்றென்றும் நீங்காத கனவு காணுங்கள் என்ற வரிகளின் முன்னோடி!!

தொடக்கம் முதல் முடிவு வரை! நதி போல ஓடி !
தொடர்ந்து இந்தியநாடு முன்னேற வல்லரசு கீதம் பாடி!

அக்னி சிறகு விரித்து! பிருத்திவிநாயகன்! நாசா விண்வெளியில் நாயகன் !
இந்திய பிரதமர் இந்திரா காந்தி முதல், நரசிம்மராவ், வாஜ்பாய் , நரேந்திர மோடி! என
இந்நாட்டு பிரதமர்களும்! வெளிநாட்டு பிரதமர்களும் பாராட்டும்!! அணு ஆயுத சாதனையாளர்!

பாரையே! திரும்பிப் பார்க்க வைத்த பண்பாளர்! போலியோ விற்கு எளிய ஊன்றுகோல் கண்ட இறைவன்!
போர்க்கால கருவிகளில் பாரையே! திரும்பிப் பார்க்க வைத்தது உம் சேவை!

மதம் கொண்ட மனிதர்களிடையே ! மத நல்லிணக்க வாதியார்!

இவர் இஸ்லாமியர்! என்றாலும் இவருக்கு இறைவனாய் உதவிய ஆசிரியர் ஐயங்கார்!

ஒரு  மேடையிலே! அப்துல் கலாம்!!
ஏற்றுவது குத்து விளக்கு! இந்துக்களுக்கு உடையது!
 ஏற்ற எரிவதும் மெழுகுவர்த்தி! கிறிஸ்தவர்களுக்கு உடையது !
இதை ஏத்துபவரோ இஸ்லாமியர்!

ஒரு படகோட்டியின் கனவு விமான ஓட்டியாக!
விமானத்திற்கு தந்தையாகி
விஞ்ஞான அணு ஆயுதத்தில் விண்ணில் பறந்து !

விடியல் காணவே மாணவர்களுக்காய் மேடைகளில் முழங்கியவாரு!
மேடையிலே ஆழ்ந்த நித்திரையில் சுருங்கி!

ராமேஸ்வரத்தில் ராணுவ மரியாதையோடு பல நாட்டவரும் கண்களில் ஒளி உருகி!
ராமேஸ்வர மண்ணிற்குள் ஆழந்து தேகம்!நிறந்தரமாய் உறங்கி ஒருங்கி(யது)

கவிதை மாணிக்கம்