யாத்திரை...

புதுக்கவிதை

யாத்திரை...

யாத்திரை...

எனது முதல் வீட்டில் 
ஆயிரத்தில் ஒருவன் ஆக புகுந்து 
இதயம் என்னும் சாவி கொண்டேன்....

இருட்டில் பயணித்தாலும்
சிறிதும் பயமில்லை....
நீரில் மிதந்தாலும் மூழ்கவில்லை....
பசி என்று கேட்டதில்லை
ஆனாலும் உண்கிறேன்....
நீர் என்னும் ஒரு பூதம் என்னை கட்டி காத்தாலும் ஐம்பூதங்களால் வளர்கிறேன்....

மாதங்கள் நகர....நாட்கள் செல்ல....செல்ல....அந்த நாளும் வந்தது....

யாரோ திறந்தார்கள்
தெரிந்தது புது அறை....
தவித்தேன் 
தவம் கலைந்த ஞானியை போல.....
அழுதேன்
மாய உலகை கண்டு ...
இருட்டில் இல்லாத பயம்
வெளிச்சம் தந்தது.....

உலகம்
இவனை போல படி
அவனை போல நடி
உறக்கத்தை தவிர மற்றதை பிறர் போல செய் என்றது....

இவனா அவனா என்ற போட்டியில் நான் யார் என்பதே மறந்து போனது....

பம்பரம் போல சுழன்றும்
ஒரே இடத்தில் நிற்கிறேன்...

எனக்கு முன்னால் எல்லோரும் ஏதோ ஒன்றின் பின்னால் ஓடி கொண்டிருக்க...
அதன் பெயர் கேட்டேன்
அது தான் பணம் என்றது உலகம்...

அது மாய மந்திரங்கள் செய்யும், நீதியையும் தோற்கடிக்கும்,
மாமதயய் கூட்டும்
தெய்வத்தையும் விலை பேசும் என்று சொன்னது ...

எனது மூளையும் நீயும் ஓடி பிடித்து கொள் என்றது...

நிற்காமல் ஓடினேன்
மூச்சிரைக்க ஓடினேன்
காலம் கடந்து ஓடினேன்

இப்போது எனது கைகளிலும் பண மூட்டைகள்...
கூடவே கால்அடியில் பாவ மூட்டைகள்....

உலகம் சிரித்தது....காலம் சிரித்தது....உன் கை மூட்டைகள் உன்னுடையது அன்று ....உன் கால் மூட்டைகள் மட்டும் உன் சொத்து என்றது....

உணர்ந்தேன் ...தெளிந்தென்..நான் என்ற மமதையை கொன்றேன்....

இதோ மீண்டும் ஒரு 
யாத்திரை .. இறைவனை தேடி ....!

- மஞ்சுளா நரேன்.