விழிகள்

காதல் கவிதை

விழிகள்

என் காட்டுக் கொடிகள் விண்மீன்களை பூக்களாக
 கொய்து கொள்ள
வான் மீது ஏறிப் படர்கின்றன

பிணைந்திருக்கும்  நம்  கரங்களில் 
சொத்தென்று சுவர் பல்லியாக
விழுகிறது காலம்

உருட்டி விழிக்கும் 
அதன் கண்களுக்குள்
உருண்டு கொண்டிருக்கிறோம்
நாம்
பால் வீதியின் விளிம்பு வரை

தங்கேஸ்.