ஆகஸ்ட் 7 தேசிய கைத்தறி தினம் கவிதை

தேசிய கைத்தறி தினம் கவிதை

ஆகஸ்ட் 7 தேசிய கைத்தறி தினம் கவிதை

அழகு கைத்தறி அதனை நீ அணி

என் உடலோடு பிணைந்த உறவே!

என் மானத்தோடு உறவாடும் உயிரே!

என் ஜனனத்தோடு
பயணிக்கும் 
உயிர்நாடியே!

புது அகவையில் புதிதாக அலங்கரிப்பவளே!

உறவுகளை நேசிக்க கொடையாக விளங்குபவளே!

மானத்தை காக்க தானமாக விளங்குபவளே!

என் அழகை மெருகூட்டும் அழகியே!

பல வண்ணங்களில் கண்ணுக்குள் தோன்றுபவளே!

என்றும் இளமையோடு வலம் வருபவளே!

 சமத்துவத்தை நிலை நாட்டும் சீருடையே!

ஏழைகளுக்கும் கிட்டும் விலை மலிவே!

பண்டிகை மகிழ்ச்சியை அள்ளி தருபவளே!

இயற்கையில் உருவாகி வெண்மையாக உருவெடுத்தவளே!

மென்மையின் குளிர்ச்சியோடு
உடலில் படர்ந்தவளே!

கோடைக்கு இதமான
குளிர் சாதனையே!

சிறந்த கைவேலையால் உயர்ந்த பெருந்தகையே!

தாயின் கையியால் உன்னுடன் சேர்ந்தேனே!

இறப்பில் என்னோடு புதைந்தாயே எரிந்தாயே!

நீயில்லை என்றால் நான் இல்லை!

விவசாயும் நெசவாளியும் வாழ வைப்பவளே! 


முனைவர் ந. கல்யாணி
உதவிபேராசிரியர்
எஸ்.ஆர்.எம் திருச்சி
கலை மற்றும் அறிவியல் கல்லூரி.

************************************************


கவிதை தலைப்பு:-
*"அழகுக் கைத்தறி
அதனை நீ அணி"*
&&&&&&&&&&&&&
சுதந்திர நாட்டில்
சுதேசியக்கம் 
மறந்து!//

அந்நிய தேசத்தின் ஆயத்த ஆடைகளை!//

ஆண் பெண்
அனைவரும்
உடுத்திடவே!//

செயற்கை
இழைகொண்ட
மேலாடை
அணிந்து//

உடல் உபாதைகள்
பலவற்றைக்
கண்டாலும்!//

நாளும் அதையே
நாடிச்
செல்கின்றார்!//

கதராடை தோளில் 
சுமந்த
பெரியாருமில்லை!//

கதரியக்கம்
துவங்கிவைத்
காந்தியடிகளும்
இல்லை!//

கைத்தொழிலே
வாழ்வுவென்று
நம்பி
வாழ்ந்த!//

நெசவாளர்
குடும்பங்கள்
நலிவுற்று
நடுத்தெருவில்!//

குழந்தை முதல்
குமரிவரை
அனைவருமே!//


நூலடை
மறந்து
அந்நியர்
ஆடையிலே!//

கைத்
தொழிலைப்
பேணிக்
காத்திடுவோம்!//
நாம்
அந்நிய
மோகத்தை
வேரறுப்போம்//

தமிழ்ப் பண்பாடு
மறவாது வாழ்ந்திடுவோம்!//


அழகுக் கைத்தறி
அதனைநீ
அணிந்திடு!//

ஜே குணசுந்தரி ஒத்தக்கால் மண்டபம்.