தமிழரின் பெருமைகள் 02

தமிழ் கதிர் விருது கட்டுரைப் போட்டி

தமிழரின் பெருமைகள் 02

தமிழரின் பெருமை 

முன்னுரை:
எந்த இனத்திற்கும் மொழிக்கும் இல்லாத பெருமை நம் தமிழ் மொழிக்கும் தமிழருக்கும் உண்டு காரணம் மனித இனம் எப்படி வாழக்கூடாது என்ற வாழ்வியலை கற்றுக்கொடுத்த தமிழரின் பண்பாட்டு பெருமைகளை இன்றும் உலகம் முழுவதிலும் தடம் பதித்து இருக்கிறது. இப்படிப்பட்ட தமிழரின் பெருமைகளைத் தான் இக்கட்டுரையில் நாம் பார்க்க போகிறோம்.

பொருள் : 

        தமிழரின் பெருமைக்குக் காரணம் வீரம், ஈகை, விருந்தோம்பல், கலாச்சாரம், பண்பாடு, விடுதலைப் போராட்டம், பண்டிகைகள், கட்டிடக்கலை,கலைகள் இவற்றின் மூலம் தமிழரின் பெருமைகளை மேலும் நாம் அறிந்து கொள்ளலாம்.

விருந்தோம்பல்:

       தமிழரின் தலைசிறந்த பண்பாடுகளில் ஒன்று விருந்தோம்பல். வீட்டிற்கு வரும் உறவினர்களை மட்டுமல்ல முகம் தெரியாத யாராக இருந்தாலும் அவர்களை அன்போடு உபசரித்து முகம் மலர உணவளித்து உள்ளன்போடு வலி அனுப்பும் வாழ்வியலை தருகிறது தமிழரின் பண்பாடு.

ஈகை பண்பு: 

     வாரி வழங்கும் வள்ளல்கள் வாழ்ந்த வரலாற்றைப் பதிவு செய்து பாதுகாத்து வருகிறோம். மனிதனுக்கு மனிதன் மட்டும் உதவுவது ஈகை அல்ல. செடி, கொடிகளுக்குக் கூட உற்றுழி உதவி செய்வது தமிழ் பண்பாட்டை உலக அரங்கில் உயர்ந்த இடத்திற்கு எடுத்துச் செல்வது தமிழினம். ஆம் மயிலுக்குப் போர்வை அளித்த பேகன், செடி கொடிகளுக்குத் தன் தேரினை தந்த பாரி, நீண்ட நாள் உயிர் வாழும் நெல்லிக்கனியை அதிகமானுக்குக் கொடுத்து சென்றால் அவ்வை பெருந்தகை, இப்படி நாடு, நகரம், என அனைத்தையும் அள்ளி அள்ளி கொடுத்த ஈகை எனும் ஈர மனதினை இலக்கியங்கள் இன்றளவும் போதித்து வருகிறது இந்த ஈகைக்கும் இலக்கணம் சொன்னவன் வள்ளுவன்.

வீரம் :
     
கொடுப்பதிலும், பெறுவதிலும் மட்டும் பண்பாட்டைக் காட்டவில்லை. வீரத்திலும் பண்பாட்டை விதைத்து சென்றவன் தமிழன் இதற்குப் பல சான்றுகள் சாட்சியாகும்.

     எதிர் நாட்டுப் படையினைத் தாக்கும் போது கூட ஈரமும் இறக்கமும் கொண்டவர் தமிழர். புறமுதுகிட்டு ஓடுவதும், புறமுதுகில் அம்புபட்டு வீழ்ந்து போவதும் அவமானம் எனக் கருதிய பரம்பரை நம் பரம்பரை.
       போரில் இறந்த மகனின் செய்தி கேட்டும் அவன் இறந்ததை நினைத்துக் கவலைப்படாமல். போரில் நெஞ்சிலே அம்புப்பட்டு வீரமரணம் அடைய வேண்டும் இல்லையெனில் அவன் வாய் வைத்து பால் குடித்த மார்பகங்கள் அறிந்தெரிவேன் எனச் சபதம் செய்து சொல்கிறாள் பிறகு போரில் நெஞ்சிலே அம்புட்டும் மாண்டுக் கிடந்த மகனை பார்த்து ஆறத் தழுவி அழுதால் இப்படிப் பல வீரமங்கை வாழ்ந்த பூமி இது. இப்படி பிள்ளை பிறக்கும்போதே பாலூட்டும் அன்னை வீரத்தையும் சேர்த்து ஊட்டுகிறாள் இப்பெருமை தமிழினத்துக்கு மட்டுமே உண்டு.

கலாச்சாரம் :
            தமிழர் கலாச்சாரத்தில் இயற்கை மற்றும் முன்னோர்களை கடவுளாக வழிபடும் முறை காணப்படுகிறது.

     ஒருவனுக்கு ஒருத்தி என்ற கோட்பாட்டுடன் இல்லற வாழ்க்கை முறை கடைபிடிக்கப்படுகிறது. இது நமது கலாச்சாரத்தின் சிறப்பு கூறியதாகும்.

பண்பாடு :
          பண்பாடு எனப்படுவது அதாவது பயிர் விளைகின்ற நிலத்தை உழுது பயன்படுத்துவது போல மக்களின் தம் வாழ்க்கையினை நெறிப்படுத்துவதே பண்பாடாகும். அதாவது "அறம், பொருள், இன்பம், வீடு, என்கிற விடயங்களை பின்பற்றி வாழ்வதே வாழ்க்கை பண்பாடாகும்.
அறத்தின் வழி வாழுதல் தமிழர் பண்பாடாகும் இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு வள்ளுவர் தன் குரலில்
"அழுக்காறு அவா வெகுளி இன்னாச்சொல் நான்கும் இழுக்கா இயன்றது அறம்"
என்று அழகாக தமிழ் பண்பாடு அறம் சார்ந்து என்று உலகுக்கே எடுத்துக்காட்டி இருக்கிறார்.

விடுதலைப் போராட்டம்:
       வணிக நோக்கத்துடன் வந்த ஆங்கிலேயர் நம் நாட்டை முழுவதுமாக கைப்பற்றி நம் நாட்டு வளங்களை கொள்ளை அடித்தன இதனால் விடுதலைப் போராட்டம் நாடெங்கும் நிகழ்ந்தது.
இதன் காரணமாக 1947 ஆகஸ்ட் 14ஆம் நாள் நாம் முதல் சுதந்திர காற்றை சுவாசிக்க தொடங்கினோம். சுதந்திர காற்றை சுவாசிக்க நம்முடைய தமிழர்களின் பங்களிப்பானது அளப்பரியதாகும்.
     வீரபாண்டிய கட்டபொம்மனின் தொடங்கி.
வ.உ.சிதம்பரனார், பாரதியார், காந்தியடிகள், பூலித்தேவன், மருதநாயகம், ஒண்டிவீரன், சிவா, திருப்பூர் குமரன் எனப் பல போராட்ட வீரர்கள் நாம் தற்போது வாங்கும் சுதந்திர சுவாச காற்றுக்கு சொந்தக்காரர்கள்.

        இவர்கள் மட்டுமல்லாமல் ஆண்களுக்கு நிகராக பல பெண் போராட்ட வீரர்களும் பங்கு பெற்றது முக்கியமானது. ஆம் பெண்கள் எதற்கும் சளைத்தவர்கள் இல்லை. அவர்களில் வேலு நாச்சியார், ராணி லக்ஷ்மி பாய், அன்னி பெசண்ட், சரோஜினி நாயுடு, ருக்மணி லட்சுமிபதி, கஸ்தூரிபாய் காந்தி ,ஜான்சி ராணி, அஞ்சலை அம்மாள் என பல வீர மங்கைகள் பிறந்து வாழ்ந்த நாடு நம் தமிழ்நாடு இது மேலும் தமிழரின் பெருமைகளை பலப்படுத்துகிறது.

பண்டிகைகள் :
    பண்டிகைகள் நம் பண்பாடு கலாச்சாரத்தை இதையெல்லாம் நமக்கு நினைவுப் படுத்துகிறது.
நமது சமுதாயத்தில் பல பண்டிகைகள் காணப்பட்டாலும் தமிழருக்கு என உள்ள முக்கிய பண்டிகை தைத்திருநாள் ஆகும். அவற்றைப் பற்றி பார்ப்போம்.

தமிழர் திருநாள் :
        தமிழர் வரலாற்றில் சங்க காலத்தில் இருந்தே மருத நிலம் உழவர்களையும், உழவுத் தொழில் பெருமைகளும் அதிகம் பேசப்படுகின்றன.
    மாரி மலை முடிந்து வயல்களில் விளைந்த புது நெல் கொண்டு புது வாழ்வை ஆரம்பிப்பதாக நம்புகிறார்கள்.
    உயிர்களது வாழ்வியல் விவசாயம் முக்கியத்துவம் வாய்ந்தது எனவே உயிர் தொழிலை போற்றுவது இத்திருநாளின் முக்கியமாகும். இவ்வுலகம் நிலைபெற சூரியன் சக்தி முதலானதாகும். சூரியனின்றி பயிர்கள் வளராது, உயிர்கள் செழிக்காது, மலையும் பொழியாது, ஒளியும் கிடைக்காது. எனவே நம் தமிழர்கள் சூரியனை வணங்கி புது பானையில், பச்சரிசி, பால், சக்கரை, நெய் சேர்த்து பொங்கலிட்டு சூரியனுக்கு படைப்பர்.
     அதற்கு அடுத்த நாள் ஏறிருக்கும் மாடுகளுக்கும் பால் தரும் மாடுகளுக்கும் பட்டி பொங்கல் இடுவது வழக்கமாகும். இது தமிழரின் வாழ்வியல் அழகிகளை எடுத்துக்காட்டுகின்றன இப்படி சகா உயிர்களையும் உணவளித்து மதிப்பது நம் தமிழரின் பெருமை ஆகும்.

கட்டிடக்கலை :

     கட்டிடக்கலை நுட்பத்தில் சிறப்பான இடத்தை பெறுவது தமிழர் கட்டிடக்கலை ஆகும். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இந்தியாவின் தென் பகுதியில் முக்கியமான இடத்தை பெற்றிருக்கிறது கட்டிடக்கலை.
     மக்கள் வாழ்வதற்கான இல்லங்கள் அரசுக்கான மாளிகைகள் வணிகத்தளங்கள் இவையெல்லாம் கட்டப்பட்டு வாழ்ந்து வந்தன இது சில குறிப்பிட்ட காலங்களுக்குப் பிறகு அழிந்து விடவே, ஆறாம் நூற்றாண்டுக்கு பின்னர் தமிழ்நாட்டின் கற்களால் கட்டடங்கள் கட்டப்பட்டன. இக்கட்டடங்கள் மிகப் பெரும்பாலானவை கற்களாலே கட்டப்பட்டிருந்தது இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு கோயில்கள் இவை தமிழரின் கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாகும்.
மேலும் நம்முடைய கட்டிடக்கலையை உறுதிப்படுத்த உதாரணமாக குடைவரைக் கோயில், மாமல்லபுரம், தஞ்சாவூர், திருச்சி மலைக்கோட்டை, இவை அனைத்தும் மேலும் நம் தமிழரின் பெருமைகளை உறுதிப்படுத்துகிறது.
கலைகள் :
     நம் தமிழர்கள் பல கலைகள் கற்று தெரிந்தவர்கள்.
கலை என்பது பொதுவாக காட்சி கலைகளின் வரலாற்றை குறிக்கின்றது. எண்ணங்களையும் உணர்வுகளையும் பிறருக்கு விளக்கும் நோக்குடனே அழகியல் நோக்குடனோ காட்சிக்குரிய வடிவத்தில் மனிதர்களால் உருவாக்கப்படும் ஒரு செய்பொருளே காட்சிகளை எனலாம். கலைகள் 64 வகைப்படும் ஆம் நம் தமிழர்கள் கட்டிடக்கலை நடனம் சிற்பம் இசை ஓவியம் கவிதை என பல கலைகளில் சிறந்து விளங்கியுள்ளார்.

முடிவுரை:

      இப்படி தமிழர்கள் விருந்தோம்பலில் ஆரம்பித்து ஈகை ,வீரம், தாயுள்ளம், பண்டிகை, பாரம்பரியம் ,கலாச்சாரம், கலைகள் என அனைத்து தளங்களிலும் நமது தமிழரின் பெருமைகளை பார்க்க முடிகிறது.

 தமிழரின் கலைகளைப் பாதுகாப்போம்!
தமிழரின் பெருமைகளைப் போற்றுவோம்!

இர.உஷாநந்தினி சதீஸ்குமார்.