தமிழரின் இசை ...030

தமிழ் கதிர் விருது கட்டுரைப் போட்டி

தமிழரின் இசை ...030

தமிழர்களின் இசை

 முன்னுரை

 தமிழுக்கும் அமுதென்று

பேர் என்ற பெருமையும், ழகர எழுத்தின் சிறப்பினை தமிழ் மட்டுமே கொண்டுள்ளது.  நம் தமிழ் மொழியில் இருந்து பிற மொழிகளும் பிறந்து இருக்கிறது . தமிழ் என்று சொல்லும் போது இசை ஒலிக்கின்றது. பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து உயிரினங்களும் இசையை நோக்கி பயணிக்கின்றன.  குழலிலும் யாழிலும் காணாத தமிழிசையை, நம் மழலையின் பேச்சில் கேட்க முடிகின்றது.  மகாகவி பாரதியாரும், ஓடி விளையாடு பாப்பா பாட்டில், கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு என்று, இசையின் முக்கியத்துவத்தை பாப்பாவிற்கு கூறுவது போல் இருந்தாலும், நமக்கும் பொருந்தும்.  தமிழ்ச் சூழலில் வளர்ச்சி பெற்றது தமிழிசை ஆகும் . தமிழர் வாழ்வின் தாலாட்டில் இருந்து ஒப்பாரி வரை, ஒவ்வொரு பருவத்திலும் இசை முக்கியமாகும்.  தமிழை முத்தமிழாக பாகுபடுத்தி இசைக்கு, பழங்காலத்தில் முன்னுரிமை அளிக்கப்பட்டது.  கிபி ஏழாம் நூற்றாண்டில் சைவமும் வைணவமும் செல்வாக்கு பெற்று, தேவாரங்கள், பிரபந்தங்கள் ஊடாகவும், தமிழிசை வளர்ந்தது.  தமிழரின் வாழ்வில் அன்றாட பாட்டு 

தமிழர்கள் வாழ்க்கையில் தாயின் வயிற்றில் கரு கொண்டதும், நலங்கு பாடல்.  குழந்தை தனித்ததும் தாலாட்டு பாடல் . சிறுவருக்கு நிலா பாடல்.  இளம் வயதில் வீரப் பாடல், காதல் பாடல், மரண த்தில் திருமண பாடல்.  உயிர்த்துறந்தப் பின் ஒப்பாரி பாடல் என அனைத்து
 பருவங்களிருக்கும் தமிழ் பாடல்கள் உள்ளன. 

 மருத்துவ குணம்

 தீர்க்க முடியாத பல நோய்களுக்கும் மருந்தாக, நம் தமிழ் இசை உதவுகின்றது.  பல நோயாளிகளும் தமிழ் இசையினால் பயன் பெறுகிறார்கள், என்பதில் மகிழ்வு கொள்வோமாக. 

 முடிவுரை 

"யாமறிந்த இசைகளிலே தமிழிசை போல் வேறு எங்கும் காணோம் "என்று ஒவ்வொரு தமிழனும்  தமிழன் மட்டும் இல்லாமல், அனைவரும் பெருமைப்படும் படி, தமிழும் இசையும்  சிறப்புற்று இருக்கின்றது. 


- இசைப்பேரரசி 
லதா சங்கரன் 
சென்னை.