ஆணிக்கால் தாத்தா

சிறுகதை

ஆணிக்கால் தாத்தா

தரையை துளைக்கும் “தை”யைக் கடந்து மச்சியைத் துளைக்கும் மாசியில்’ காலைப்பனியின் குளிரில் போர்வையை இழுத்துப் போர்த்திக்கொண்டு தூங்கிய வேளையில்ää ஒரு கணம் இது உன் வீடு இல்ல! வேலை செய்யும் ர்ழளவநடல் இருக்க... என்று மூளையில் வந்து போன மின்னல்வேக உணர்வால் துள்ளி எழுந்து கதவைத் திறந்தேன். சுடர் வெளிச்சத்தால் வானத்தின் அழகைத் தேடி கண்களைச் சுருக்கினேன். நச்சுக் கலக்காத குளிர் காற்றின் மணம் மூக்கை அடைத்தது. பயணப் பாதைகளின் காத்திருப்பில் பறவைகளின் சுறுசுறுப்பான வெளிப்பாடுகளின் ஒலி காற்றில் கலந்து இசையாக ரீங்கரிக்கää பச்சையம் கலந்த மஞ்சள் துகள்களாக சிதறிய வாகை மலர்களின் மென்மை பாதங்களில் உணர பச்சைப் புல் தளிர்களில் நடந்து சென்றுää எரிந்து கொண்டிருக்கும் மின் விளக்குகளை அனைத்தேன். “உறக்கத்திற்கே உயிர்கொடுத்து” அழகான புன்னகையுடன் தூய்மையாக உறங்கிக்கொண்டிருந்த தன்னையறியாத குழந்தைகளை இரக்கமே இல்லாமல் அதட்டி எழுப்பினேன்.
     ஒவ்வொருத்தராக கக்கா இருந்துவிட்டு சுத்தமாக கழுவிவிட்டு பல்லுத்தேய்க்க வாங்க என்றவாறு கேட் சாவியை சலசலக்க ஆட்டியவாறு மெயின் கேட்டுக்குப் போனேன்.
    அனுப் அய்யா வாங்க!உங்களத்தான எதிர்பார்த்து நிக்கிறேன். மூணுää நாலு நாட்களாக கண்ணில் தட்டுப்படாத ஆட்டக்காரத் தாத்தாவ கையோடு இழுத்துக் கொண்டு நடந்து பக்கத்தில் வந்துää அய்யாääஜாஸ்மின் டீச்சர் இருக்காவுகளாää இந்த செவிட்டு மூதி கையில் பாருங்க ஆயிரம் ரூபாய் தாளாக எவ்வளவு பதவள வச்சிருக்கு நம்ம பாய் டீக்கடைக்கு முன்னால புளியமரத்து அடியில டிரைவர் பயலுக சுத்தி நின்னு வேடிக்கை பார்த்துக்கிட்டிருக்க இது சூதுவாது இல்லாம எல்லாரும் பார்க்கிறபடி எண்ணிக் கிட்டு இருக்கு. இந்த காலத்துல எவனை நம்ப முடியும் சொல்லுங்க! அதுதான்சட்டையைப் புடுச்சு இழுத்துக்கிட்டு உங்க கிட்ட வாரேன் சார்.
    களவாணிப் பய உலகமாச்சே கேட்டிங்களா! என் வீட்டுக்கு முன்னால நாலுபேரும் ஒருத்தரை ஒருத்தர்; பார்த்தவாறு சைகையாலும் கண்களாலும் பேச்சாலும் பழைய ரூபாய் நோட்டு செல்லாதுன்னு அரசாங்கம் சொல்லிருச்சுää நாளு நாளாய் மக்கள் ரோட்டில் வட்டமடித்து காத்துக் கிடப்பதும் வருவதும் போவதுமாக இருப்பதை நாம பார்க்கிறோம். பாவத்துக்கு இந்த வௌரமில்லாதவனுக்கு சொந்த பந்தம்னு யாராச்சும் இருந்தா அவங்க கையில ஒப்படைச்சு விடுங்க என கடைக்கார கிழவி முப்பிடாதி ஓங்கி சொல்லியது.
    டீச்சர் நேராக வீட்டுக்குள் சென்று ஒரு பென்சிலையும் பேப்பரையும் எடுத்துக் கொண்டு தாத்தாவின் கையில் உள்ள பணத்தை வாங்கி எண்ணியதில் 99ää000க்கான 1000 ரூபாய் நோட்டுகள் என குறித்துக் கொண்டது. அடுத்த பையில் இருந்த அழுக்கான கட்டியான பிளாஸ்டிக் கவரை எடுத்து விரித்துக் கொடுத்தார். அதில் ரூ.500 நோட்டுகள்ää அவரை மேலும் கீழும் பார்த்து இன்னும் இருக்கா என்று சைகையில் கேட்கää மீதிப் பணத்தையும் இடுப்பு பெல்டில் இருந்து எடுத்துக் கொடுத்தார். மொத்தமாக எண்ணப் பார்க்கும் போது ஒரு லட்சத்து 40 ஆயிரம் என்று டோட்டல் போட்டு ஒரு கட்டாக கட்டி கொண்டு இருக்கும் போதுää கிழவரின் சங்க நிர்வாகி ஜேக்கப் ஓட்டமும்; நடையுமாக ஓடோடி வந்தார்.
    மணல் குவியலாக பரந்து விரிந்து கிடந்த மைதானத்தின் காலை குளிர்ச்சியில் அவருக்கு காது வழியாக வியர்வை வழிந்தது. கையில் உள்ள பணத்தையும் எங்கள் முகத்தையும் மாறி மாறிப் பார்த்தார். யோசிக்கவே இல்லை நிலமையைப் புரிந்து கொண்ட நாங்கள் “தாத்தாவின் பணம்ää அவருக்கு அடைக்கலம் கொடுக்கும் உங்களிடம் இருப்பதுதான் நல்லது” என அவர் கையில் பணத்தை ஒப்படைத்தோம்.
    வாங்கிக் கொண்டவாää; புன்னகையுடன் “சார் இந்த பணத்தை பெரிய அய்யாவிடம் விபரம் சொல்லி இவருக்கு வேண்டிய உதவி செய்கிறோம்” என தாத்தாவையும் பார்த்து சைகை செய்து மோகன்தாஸ் ஐயாவிடம் கொடுத்து மாற்றி விடலாம் வா என முன்னால் நடந்தார். ஆணிமுளைத்த கால்களை ஊனி நடந்து பின்தொடர்ந்தார் தாத்தா! ஏதோ தப்பு நடக்கப் போவுது என மனம் கனத்தது.
    தாத்தவைக் கூப்பிட்டு வந்த பெட்டிக்கடை கிழவிää“படுபாவி... இவன் கையில போயிடுச்சேää பணம் அம்போ தான்” என வெதும்பினாள். “யாருக்கு கொடுத்து வச்சிருக்கோää அய்யோää உங்களை நம்பி இந்த காரியத்தை நல்லபடியா முடிச்சி விடலாம்னு நெனைச்சேனே நம்பி வந்த அவருக்கு கேடாய்ப் போச்சேää காலத்துக்கும் எனக்கு வசவு விழுமே கடவுளே”ää என்றாள் கிழவி.
    நேரடியாக உள்ளுர் மக்களின் நடு வீட்டின் உள்ளே கால்மேல் கால்போட்டு பேசும் அன்பைப் பெற்றவர்கள்.... காரணம் இறை இயல் “செட்டிங்ஸ்” அப்படி! சமுக சேவைங்கிற பெயரில் வெளி வட்டாரத்தில் பொதுவாக நன் மதிப்பைப் பெற்றவர்கள்.
    நற்காரியங்கள் செய்ய அமைப்புகளில் எவ்வளவுதான் பணம் இருந்தாலும் ஸ்பான்ஸருக்காக மக்களிடம் போலியாக நெருக்கமாவார்கள். இப்போ தானா கையில் கிடைத்த பணத்தால் இயல்பாகவே நிர்வாகியின் பேச்சும் உடல்மொழியும் வேறு ஒருவராக காட்டிக் கொடுத்தது.
    பணத்தை ஏன் வாங்கினீர்கள்ää களவாணிப் பய... எங்க திருடினானோää பின்னால நமக்கு இடைஞ்சல் வந்திரப் போவுதுங்க என தன் பவரைக் காட்டினார்.
    பிறகு சமாதானம் அடைந்து டேபிள் மேல் இருக்கும் பணத்தை ஆசையோடு பார்த்தவாறு என்னிடமே இருக்கட்டும் ஆக வேண்டியது ஆகும். இதை யாரிடமும் லீக் அவுட் பண்ண வேண்டாம் எனவும் கிழவனின் பொருட்கள் கிடந்தால் கொடுத்து அனுப்பிவிடுங்கள் என்ற வார்த்தையையும் கண்டிப்பான குரலில் தெரிவித்தார். பணத்தை கமிஷனோடு மாற்றித் தர ஏற்ப்பாடுகளும் நடந்தது அய்யோ பாவம் தாத்தா.
    வாய் பேசாத காது கேட்காத குறைபாடுகளால் அவதிப்படுவதால் சொந்த பந்தங்களிடமிருந்து அறுபட்டு அனாதையான சமூக அடைக்கலத்தில் கிடைப்பவற்றை ஏற்றுக் கொண்டுää வேகாத வெயில் வெந்து தணிந்து பல வருடமாக சேகரித்து பாதுகாத்த பணத்தை யாரோ ஒருவனிடம் மொத்தமாக இழந்து விட்டு இதே பஸ்டாண்டுகளில் பிறர் வேடிக்கை பார்க்கும் மனிதனாக நடமாடிக் கொண்டு காலம் கழித்தாலும் யாரிடமுமம் ஒருநாள்கூட கையேந்தாத வரம் பெற்ற கண்ணியமான பிறப்பாய் இருக்கின்ற ஆணிக்கால் தாத்தாவை ஏமாற்றியவன் பிழைக்கத் தெரிந்த பிச்சைக்காரன்.
பெரிய பண முதலைகள் முதல் நடுத்தர கொடுக்கல் வாங்கல் பைனான்சியர் வரை கன கச்சிதமாக அதிகார வர்க்க அரசியல்வாதிகளின் கூட்டு செயலில் அதிகாரிகளின் மதிப்பிழந்த பணத்தை மதிப்புள்ள பணமாக மாற்றிட வசதியாக  புதிய பணத்தாள்களில் சிப் வசதியுடன் அச்சடிக்கப்பட்டுள்ளது அது சேட்டிலைட் தொழில் நுட்ப வசதியும் இணைக்கப்பட்டுள்ளது இனிமேல் ப10மிக்கு அடியில் புதைத்து வைத்தாலும் தண்ணிக்கு அடியில் ஒழித்து வைத்தாலும் கருப்பு பணமாக சேமிக்க முடியாது. ஓக்கா மக்கா எல்லாவனும் செத்தான் என பேசவைத்துவிட்டு எளிய மக்களாகிய அன்னாடங்காட்சிகள் தங்கள் கையில் உள்ள சட்டிää பெட்டிகளில்ää உப்பு டப்பாää கடுகு டப்பாவில்ää வருச காலமாக சேமித்த உண்டியல் பெட்டி சுருக்குப் பைää மஞ்சள் பையின் பணமெல்லாத்தையும் புடுங்கிää உடுத்திய கோமணத்தையும் உருவியது தெரியாத வேடிக்கை மனிதர்களாக அரசியலை புரிந்து கொள்ளாத கோமாளிகளாக பார்க்கும் உலகில் மக்கள் ஈசலாக அலைவதை யாரும் கண்டுகொள்ளவில்லை.இப்பதான் இறைவனிடம் பேசினேன்ää மதிய உணவுக்கு என் வீட்டுக்கு வந்து சாப்பிட்டு ஆசிர்வதிக்கிறேன்” எனவும்ää சொர்க்கத்தில் உனக்கு இடம் உண்டுää என பேசித்திரியும் அரசு அலுவலக சீட்டை கெட்டியாகப் பிடித்துக் கொண்ட கும்பலின் அவர்களில் முன்னோடிகளின் ஆலோசனையின் பெயரில் திட்டமிட்ட சில காரியங்களை நடத்தி கேள்வி கேட்க கேட்பாரற்றுப் போன இந்த பணத்தை பயன்படுத்திக் கொண்டனர். சுட்டெரிக்கும் வெயிலில் மணிக்கணக்கில் காக்க வைத்து தனி ஒருவருக்கு ஒரு நாளுக்கு இரண்டாயிரம் மட்டுமே மாற்ற முடியும் என முன்வாசலை மூடிவிட்ட ஆட்கள் அவர்களுக்கு கிடைத்துக் கொண்டே இருக்கிறது. அவர்களும் வாங்கிக் கொண்டே இருக்கிறார்கள். அனைத்து பண்புகளையும் உள்ளடக்கிய அறத்தினை பின்பற்றாதவர்களிடம் என்ற சிந்தனை மேலோங்கி ஒரு நாள் அல்ல... பல நாட்கள் கடந்தது.
    அல்லாடும் வாழ்க்கையில் தள்ளாடும் மனிதனாக மாற்று வேலைக்கு போனேன். எனக்கான ஒவ்வொரு நாளிலும் பாதிநேரம் பயணத்திலும் காத்திரிப்பிலும் கரைந்து போகும்! சொந்தமாக பைக் வாங்கிட நினைத்தாலும் சமூகத்தின் முன்னால் உறவுமுறையில்லாத இருவேறு ஊர்களைச் சேர்ந்த சகபணியாளர் என்கிற நட்பு மட்டுமே இருவருக்கும்ää ஓரே வண்டியில் பயணம் செய்வது மனதுக்கு உறுத்தலாக இருக்கு ஆதலால் பஸ் பயணமே சிறந்ததாக இருந்தது. பஸ்நிலையத்துக்குள் நுழைந்த கணத்தில் செல்ல வேண்டிய பஸ் கிடைக்கவில்லை எனில் ஓர் ஓவ்வாமை உண்டாகும். அங்கு பார்க்கும் கண்ராவிகளை கண்கொண்டு பார்க்க இருவேறு மனம் வேண்டும்.
    நூற்றுக்கணக்கான தலைகள்ää... பழக்கடைகளில் கொஞ்சம் பலகாரக்கடைகளில்  கொஞ்சம்... பஸ்களில் அமர்ந்த்திருப்போர்... குறுக்கும் மறுக்குமாக பலபேர் என காட்சி பிம்பமாய்! அவர்களோடு நானும்... பஸ்ஸில் இருந்து இறங்கிய உடன் சிகரெட்டை வாங்க கடையைத்தேடி ஓடி முட்டிப்போன மூத்திரத்தைää வருடக்கணக்கில் வடிவதற்கு வழி இல்லாமல் பிளாஸ்டிக் கழிவுகளால் அடைத்து ஊரி நொதித்து துர்நாற்றம் எடுக்கும் சாக்கடையில் ஈக்கள்ää கொசுக்கள்ää மலக்கழிவுகள் மிதந்து ஊறிப்போன நாற்றம் பிடித்த வீச்சத்தை சிகரெட் புகையை வெளியே ஊதி அந்த மணத்தையும் சுவாசித்தவாறு திறந்த வெளியில் மூத்திரம் போனால் சட்டப்படி நடவடிக்கை என்ற தகவல் பலகையை படித்துக் கொண்டே எந்தவித கூச்ச நாச்சமுமில்லாமல் தன் வயிற்று உபத்திரத்தை இறக்கும் இடத்தில் ஒன்றுமே நடக்காததைப்போல் கடந்து செல்வதைப் பார்க்கையில் “நாய்ப்பய” என  கோபம் கொப்பழித்து கண்கள் முறைத்துக் கொண்டே அவனை பின்தொடரும்.
கிராமவாசிகள் தன் ஊருக்கு போகும் பஸ்க்காக மணிக்கணக்கில் காத்திருக்க ஏதுவாக சுதந்திரமாக உட்காரவோ குழந்தை குட்டிகளுடன் நிற்கவோ இடமில்லாமல் சீழ் பிடித்த கால்களில் “ஈ”ஓட்டிக்கொண்டிருக்கும் கைவிடப்பட்டவர்கள்ää ஊசிபாசி விற்கும் சிறு வணிகர்கள்ää வாய் நிறைய வெற்றிலை போட்டு கைநிறைய வளையல்கள் இட்டு ஜல் ஜல் ஜதையோடு போதையேறிய கண்களுடன் தலைநிறைய மல்லிகைப் ப10 வாசனையோடு மருதாணியிட்ட கைகளால் நெற்றி நிறைய பொருட்கள் இட்டு ஒவ்வொரு பஸ்ஸாக ஏறி இறங்கி துட்டு கேட்கும் ஆண் சகோதிரிகள்ää மன நோயாளிகளின் மௌனப் பார்வைகள்ää கண்பார்வையற்றவரின் கணீர் குரலில் “கடவுள் இருக்கின்றான் அது உன் கண்ணுக்குத் தெரிகின்றதா...” என்று பாட்டுப்பாடி ஸ்பீக்கரோடு கட்டி உண்டியலில் சில்லரை விழும் சத்தம் கூட்ட நெரிசலிலும்; குழந்தைகளைக் கண்ட உடன் பொட்டலம் போட்ட கடலையை நீட்டி கடலக்கடலக் கடல்  என அதிர முழங்குபவர் அவரது அகோர முகத்தைப் பார்த்து சிறு பிள்ளைகள் மிரண்டு போய் தன் தாயின் உடம்போடு ஒட்டிக்கொள்ளும்ää பின் சிரித்து கை நீட்டி பொட்டலத்தை புன்சிரிப்புடன் வாங்கி அம்மாவிடம் கொடுக்கும். காதின் செவிப்பறைகள் கிளிய ராஜபாளையம் ஸ்ட்ரிவிää கரிவலம்ää ராயகிரி செவ்வேரி என தனியார் பஸ் கண்டக்டர்கள் காக்கி ய10னிபார்ம் போட்டääபணப்பையை தோளில் சுமந்து கொண்டு கையில் விசிலோடு கூவிக்கொண்டு பேட்டாவுக்காக போட்டி போட்டு சத்தமிடும் போது முகச்சுழிப்பு ஏற்பட்டாலும் அவர்களுக்கான இருத்தலை தக்க வைத்துக் கொள்ள படும்பாடு இது என மனசு ஏற்றுக்கொள்ளும்.
    சலார் சலார் என டப்பாவில் சில்லரையைக் குலுக்கி காசைப் போடும்வரை நகர மறுத்து கைகளை நீட்டியவாறு நிற்பவர்கள் கணிசமான எடை வந்த உடன் தனக்கான கண்டக்டர்களிடம் சில்லரை பஞ்சத்தை தீர்த்து வைக்கும் பங்குதாரர்களாகவும் இருப்பதை காண முடியும்.
    நையாண்டி மேள அண்ணாவிகள் உதடுகள் சிவக்க வெத்தலையை உப்பிக் கொண்டு நெற்றி நிறைய விப10தி இட்டு கண்ணைக் கவரும் சிலுக்கு சட்டையை போட்டுக் கொண்டு ஆட்டக்கார சொதை வரும்வரை இடத்தை காத்துக்கொண்டு இருப்பர்ää நகராட்சிக்குள் நெடுஞ்சாலைத்துறையின் தரைகளைக் காட்டி வெளிமார்க்கெட் வசூல் பண்ணும் குத்தகைக்கார அல்லக்கைகள் கடைக்காரர்களிடம் மிரட்டி வசூல் செய்யும்போது வரும் கெட்டவார்த்தைகளை கண்டுகொள்ளாமல் லூசு அண்ணன் கடையைத் தாண்டிää சொரிபிடித்த நாய்களின் தூக்கத்தை கெடுக்கும் குறும்புகள் ஊக்கு விற்கும் குறச்சமூக வணிகக் குழந்தைகள் என அனைத்தையும் கடந்துää சில தெரிந்த மனிதர்களின் வணக்கங்களை ஏற்றுக்கொண்டும் ஒவ்வொரு நாளும் கரையும்
    ஒரு நாள் கூட்டத்தோடு கூட்டமாக ஆணிக்கால் தாத்தா உட்கார்ந்து இருப்பதை பார்த்து அவரிடம் பேச்சுக் கொடுத்தேன். என்னை அடையாளம் கண்டு அவரின் பாசையில் சத்தமா கையை நீட்டி ஆட்டி கண்கள் சிவக்க உமிழ்நீரின் நுரையை விழுங்க முடியாமல் கையால் துடைத்துக்கொண்டு தன் ஏமாற்றத்தை விளக்கினார். எனக்குத் தெரிந்த அளவு புரிந்து கொண்டு மவுனித்தேன்.
    புறச் சூழலின் காரணமாக வேறு வேலையைத் தேடி அலைந்த குறுகிய காலங்கள் மறந்து புதிய கூழலில் பணியில் சேர்ந்து சிறப்பாக இல்லாவிட்டாலும் சிறுமைப்படுத்தாத காரணத்தால் பெண்களோடு நாள் முழுவதும் நடந்தும்ää பஸ்ஸிலும் ஆட்டோவிலும் லிப்ட் கேட்டும் எங்கள் ஒவ்வொரு நாளும் இலக்குகளை நோக்கிய வெற்றி நாள்களாகக் கரைந்து சென்றது!


                                                      - கபிலன் சசிகுமார்,
                                                           சங்கரன்கோவில்,
                                                             9952533779.