தமிழும் பாரதியும்...! 064

தமிழ்ச் சுடர் விருது கவிதைப் போட்டி

தமிழும் பாரதியும்...! 064

தமிழும் பாரதியும்...!

 பாரதி தமிழை மூச்சாய்க்  கொண்டாரே,  தமிழில் புரட்சி செய்தாரே...!

தமிழும் நாடும் மெய்உயிராய்த்  தம்முள் கொண்டு வாழ்ந்தாரே...!

இமைக்கும் பொழுதும் தமிழ் என்றே இதயத்துடிப்பாய் உழைத்தாரே...!

தமிழாய் என்றும் வாழ்ந்திங்கே தங்கத் தமிழைத்  தந்தாரே...!

 தமிழை இயற்கை வழிநின்றே தமிழின் அறிவில் உறைந்தாரே...!

சமூகம் உற்றுக் கற்பனையில் தமிழின் அழகை வடித்தாரே...!

 உலக ஒற்றுமை வேண்டியுமே ஊன்றிப் பதித்தார்  தமிழ் உணர்வை...!

 உலகில் தாயின் உள்ளங்கள் ஓங்கி நிலைக்கும் எந்நாளும்...!

 பொதுவுடமை வேண்டியே  மண்ணில் புதுமைக்  கருத்தைப்  புகுத்திட்டார்...!

 புதிய உலகைப்  படைக்க வேண்டியே புரட்சிகள் பல செய்தாரே...!

தமிழின் இயற்கை அறிந்திங்கே தமிழைத்  தழுவும் கவிஞர்கள்...!

 தமிழின் விந்தை மிகக்கண்டே தங்கத்  தமிழைப் பேணிடுக..!

 எளிய நடையில் தமிழ்த் தந்தே ஏற்றம் உலகில் கண்டிடுவாய்...!

விளிக்கும் புதிய படைப்பிற்கே  வீழாத்  தமிழைச் சூட்டிடுவாய்...!

வெளியுலகைக்  கண்டுணர்ந்திடவே வீச்சாய்த்  தமிழ்நூல் விதைத்திடுவாய்...!

ஒளிப்போல் தமிழும் மிளிர்ந்திடவே மகாகவி பாரதியின் வழியில் நிற்போமே... !

முனைவர் ம.ப.சாந்தி சங்கரி, ஆதித்யா வித்யாஷ்ரம்,  புதுச்சேரி.