பாரதி ..! 014

தமிழ்ச் சுடர் விருது கவிதைப் போட்டி

பாரதி ..! 014

நின்னையே... உயிர் என்று நினைத்தானடி...

நினைவிற்கும் மேலாக உயிர் வைத்தானடி...

கண் என போற்றி வளர்த்தானடி...

தமக்கு.. என்று உடன் இருக்க வைத்தானடி.. அறுமறை தாண்டி..

தமிழ் மறை(யா) வண்ணம்... ஒளி புக செய்தானடி.. உனை கொண்டு உயிர்களை எல்லாம் சுடர் விட செய்தானடி...

உடனிருப்போர் உனையன்றி ஒருவருமில்லை என்றோ...

கண்ணே... தேனே.. என்று சுவைத்தானோடி.. சிறுபிள்ளை என்று உள்ளுக்குள் புகுந்தாயோடி..

பாரதியை சிறுபிள்ளை என்று உள்ளுக்குள் புகுந்தாயோடி.. சீறு கொண்டு வெகுண்டு எழ செய்தாயோடி... அந்நியரை விரட்டிட துணை நின்றாயடி.. பலமொழிகள் எல்லாம் தேடி பார்த்த பின்பும்...

தேசம் முழுவதும் காணாத தேன் நீ... என்றானடி... மொழித்தேன் நீ என்றானடி.. பாரதிக்குள் உன்னைக்காண செய்தாயடி... இன்றோ... நீயோ... பாரதி என பின் கண்டோமடி ...!

பூ.வனிதா மணி, கமுதி,