முத்தமிழறிஞர் விருது கவிதைப் போட்டி கவிதைகள்

முத்தமிழறிஞர் விருது கவிதைப் போட்டி கவிதைகள்

முத்தமிழறிஞர் விருது கவிதைப் போட்டி கவிதைகள்

0001.செம்மொழியின் நாயகன்.....

முத்தமிழ் அறிஞனே! மூத்த தமிழ்மகனே!1

என்னோடு நீங்கள் இல்லை என்றாலும்/2

என் உயிரான தமிழோடு கலந்துவிட்டீர்கள்/3

உங்கள் பேச்சும் தமிழும் எங்களது/4

உள்ளத்தில் நிறைந்திருக்கிறது அழியாத சுவடாக/5

உங்களது இறப்பு இவ்வுலகில் புதிய/6

பிறப்பு அன்றி இழப்பு இல்லை/7

செம்மொழியான அழகிய தமிழ் மொழிக்கு /8

மாநாடு நடத்திய தமிழ் மகன் நீரே/9

கலைத்தாயின் தலைமகனும் நீரே உங்களது/10

ஓயாத உழைப்பால் உயர்ந்த சூரியனே/11

காற்று உள்ளவரை உங்கள் குரல்/12

என்றும் எங்கள் காதுகளில் ஒலிக்கும்/13

வான் புகழ் வள்ளுவருக்குச் சிலை அமைத்தாய்/14

என்றும் அழியாத சூரியன் ஆனாய்/15

நாடகம், திரைப்படம், வசனம், கவிதை/16

என அனைத்து துறைகளிலும் சிறந்த/17

கலைஞனே!!! நீர் அல்லவா? கலைஞர்!18

முத்தமிழ் கலைஞருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!!!

இர.உஷாநந்தினி சதீஸ்குமார்
கோவை
.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

0002.கலைஞர் ஓர் காவியம்

தமிழின் அடையாளமே கலைகளின் பிறப்பிடமே /

அறிவின் ஊற்றே அகந்தையிலா ஆளுமையே/

ஆறாம் விரலாம் பேனாவால்

அசைக்கமுடியா /

ஆலமரமாய் நிமிர்ந்து உயர்ந்த அதிசயமே -உம்/

புகழுக்கு ஏது ஈடு இணையே..../

வள்ளுவர் குறளை கதையாய் தந்த -காவியமே /

வாளினும் கூரிய பேனாவல் வலிமை/

கொண்ட எழுத்துகளை

விதையாய் தூவி /

வெற்றிகொண்ட

மகத்துவமான மேதையே -உமை/

புகழ தமிழ் சொற்கள் போதலையே.../

இலக்கண இலக்கிய காப்பியங்கள் பற்பல/

படைத்தீர் சீர் மிகுவாய்

எம்மொழி செம்மொழி உயர்மொழியாய் ஆனதும் உம்மாலே /

தமிழர்களே என நீர் மொழிந்தால்/

குருதியும் வேகம் கொண்டிடுமே.../

காவியங்கள் பல செய்தாலும்

அழிவிலா காவியம் நீரன்றோ/

வாழிய வாழிய நின்புகழே வாழிய வாழிவே/

செம்மொழியாகிய நம் தமிழால் உமை/

புகழ்வதில் பெருமை தமிழருக்கே.../

 

- முனைவர் விஜி சிரோமணி.,

உதவிப் பேராசிரியர்,

பிரின்ஸ் ஸ்ரீ வெங்கடேஷ்வரா கலை மற்றும் அறிவியல் கல்லூரி,

கௌரிவாக்கம்,

சென்னை -73

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

0003.கலைஞர் ஒரு சகாப்தம்
***************
முத்தமிழ் அறிஞரே முத்தான முதல்வரே/
தமிழக வரலாற்றில் சிம்மாசன செங்கோலே/
எண்ணற்ற தூரிகையால் வார்த்தைகளை வசனமாக்கியவரே/
காவியத் தலைவரே தமிழ் மீது/
கொண்ட காதலை சொல்ல வேண்டுமா/
எழுதுகோலால் நாளும் புதுமை படைத்தவரே/
செம்மொழியான தமிழ் மொழிக்கு ஆற்றிய/
அரும் பணியை மறக்க முடியுமா/
இவரது வாழ்வே நெஞ்சுக்கு நீதியானதே/
கலைஞர் எழுதிய வசனம் மனதில்/
என்றும் நிலைத்து நிற்க செய்யுமே/
சவாலுக்கும் சந்திப்புக்கும் மத்தியில் எழுதிக்/
கொண்டிருக்கும் மிகப் பெ‌ரிய போராளி/
வயது கூட கூட வாலிபமும்/
கூடிக் கொண்டே போனது எனலாம்/
எழுதுக்கோலை இறுதி வரை பிடித்தவரே/
தமிழக வரலாற்றில் உச்சம் தொட்டு/
வானுயர வலம் வந்தவரே கலைஞர்/


-ம.செ.அ.பாமிலா பேகம்,நாகர்கோவில்.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

0004. முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி

தமிழகத்திற்கு வந்து உதித்த சூரியனே//
தமிழை வளர்த்த விதை இவரே//
தமிழினத் தலைவராய் பிறந்திட்ட முத்தே// 
தலையால் ஆண்ட தமிழ் சுடரே// 

தட்சிணாமூர்த்தி இயற்பெயரால் உருவான சொத்தே//
தடைகளை உடைத்து வென்ற வீரனே//
தலைவராய் திராவிடத்தில் ஜொலித்த விளக்கே//
தமிழக முன்னாள் முதல்வர் நீரோ//
தமிழுக்கு பெருமை சேர்க்க வந்தியோ// 

தமிழக முதலமைச்சராய் வளம் வந்தீரோ//
தனித்துவமாய் தன்னை தரணியில் ஆக்கினீரோ//
தமிழ் திரையுலகை தன்வசம் ஆக்கினீரோ//
தமிழ் கதையில் ஆர்வத்தை காட்டனீரோ// 

உரையாடல் பணிகளில் வெடிலாக இருந்தவரோ//
உயிராக தமிழை எண்ணி வாழ்ந்தீரோ//
உம் தூக்குமேடை நாடகத்தால் கலைஞரானீரோ//
உம் பணியால் மக்களை ஈர்த்தீரோ// 


இந்திய அரசியலை திரும்பிப்பார்க்க வைத்தவரே//
       
     ஜஸூரா ஜலீல்

@@@@@@@@@@@@@@@@@@@@@@@

0005. தமிழோடு கலைஞர்!!!

முத்தமிழின் முதல் மகன் நீயோ !

முறையோடு தமிழ் கற்றவன் நீயோ !

முற்ப்பட்டு காதல் கொண்டவன் நீயோ !

உயிரில்த்தமிழ் சேர்த்து வாழ்ந்தவன் நீயோ !

எனது தமிழோடு கதைப்பவன் நீயோ !

கவிஉரை படைத்த கலைஞன் நீயோ !

பேச்சிலே மைவைத்து கறைப்பவன் நீயோ !

மூச்சாய் என்னி உரைப்பவன் நீயோ !

மேடையிலே தமிழ் வாக்கிய நடனம்
       உற்று கரு கொடுத்தவன் நீயோ !

எழுத்து நடையிலே புதியவன் நீயோ !

நீங்கா தமிழோடு நித்திரைக்கொண்டவன் நீயோ !

மாறாத இனிமையை சுவைத்தவன் நீயோ !

தீரா கைவண்ணம் படைத்தவன் நீயோ !

நிதம்நிதம் இரத்து பார்த்து நீயோ !

புத்தக கருத்தையே கதைப்பவன் நீயோ !

கற்க்கும் விதத்திலே கல்வன் நீயோ !

தமிழிழே வாழ்ந்த தலைவன் நீயோ !

தமிழர் ஏங்கும் கவிஞன் நீயோ !

தமிழ் தொண்டு செய்த கலைஞனை ,
 கவிஞனை.. போற்றுகிறேன்...
கவிதை படைக்க முயழும் தமிழன்

                        ம.சக்திபாலமீனா, ஈரோடு 

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

0006. எழுதுகோல் நாயகன்

ஐந்துமுறையும் தமிழகத்தில்
ஐயமில்லா முதல்வரே
எழுதுகோலின் எழுத்தாழுமை
எழிலரசன் இவரே

ஏழைகளின் கர்ணணாய்
ஏணியாய் உயர்ந்தவர்
கோழைக்கும் மறத்தையூட்டும்
கோமகன் கலைஞரே

தரணியும் அறியும்
தமிழின் பற்றை
கரங்களும் அள்ளிக்
காயாது கொடுக்குமே

தேயாத பிறையாய்
தோன்றிடும் நிலா
சாயாது நிமிர்ந்திட்ட
சரித்திர உலா

அறிவும் ஆளுமையும்
அரசியலும் சொல்லுமே
குறிக்கோலில் எப்போது
குன்றாத கோபுரக்கலசமே

எழுத்தாணி உயிரூட்டி
எழுதினார் பாக்களே
அழுத்தமாய் ஆழ்மனதை
அனைவரிடமும் தொட்டாரே

எத்தனையோ செயல்த்திட்டங்கள் 
எங்கும் செய்தே
சொத்தாக வாழ்ந்த
சொக்கத் தங்கமே

கடமை கன்னியம்
கட்டுப்பாடு என்றே
திடமாகத் திகழ்ந்த
திருப்புமுனைத் தியாகியே

தமிழுக்கு செம்மொழி
தனித்துவம் வழங்கியவரே
மண்ணும் பாடும்
மகத்துவ உன்புகழையே

-கவித்தாரகை 
கிருஷ் அபி இலங்கை.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@

0007. கலைஞர் 1000

+++++++++++++++
தவம்மிகு தமிழின் தலைமகன் கலைஞர்! 
தவறாமல் தமிழினைக் கற்றதால்
இளைஞர்! 
முத்தமிழ் முக்கனி சுவையுடன் தந்தவர்! 
நித்தமும் அக்கனி சுளையுடன் ஈந்தவர்! 

பள்ளி சென்று அவர் படித்ததில்லை! 
கல்லூரி சென்று அவர் கற்றதில்லை! 
கலைஞர் எழுத்துகள் இல்லாமல் பாடமில்லை! 
கனித்தமிழ் முழுவதும் கலைஞரே எல்லை! 

தேசியத் தலைவர் பலருக்கு மதிப்பளித்தார்! 
தேசம் எங்கும் சிலை வடித்தார்! 
நாட்டின் அவல நிலைகள் படியெடுத்தார்! 
ஏட்டினில்  எழுதி நாடகங்கள் வடிவமைத்தார்! 

பெரியார் வகுத்த பாதையில் பயணித்தவர்! 
பெண்கள் உரிமைக்குக் குரல் கொடுத்தவர்! 
தமிழின் வளமதில் தவமே பூண்டவர்! 
தமிழனின் நலமதில் கவனம் கொண்டவர்! 

முத்தமிழறிஞர் மூத்த தமிழ்ப் பேரறிஞர்! 
சமத்துவப் போதகர்! சரித்திர நாயகர்! 

-முனைவர் வ ஹரிஹரன்
திருநெல்வேலி

@@@@@@@@@@@@@@@@@@@@@@@

0008.

அஞ்சுகத்தாய் பெற்றெடுத்த அஞ்சாத சிங்கமே//
எட்டுத்திக்கும் புகழ் கொண்ட கலைஞரே//
எட்டாதப்புகழ் கொண்ட  எழில்மிகு வேந்தரே//
தண்ணிகரில்லா
தமிழ் தாயின் தவப்புதல்வரே//
தரணி போற்றும் தங்கத்தமிழ் மகனே//
தங்கள் குரலாலே எதிரியை விரட்டியவரே//
பெண்களுக்கு சொத்துரிமை தந்து சிறப்பித்தவரே//
பெண்களின் விடி வெள்ளியாய்  திகழ்ந்தவரே//
அய்யன் திருவள்ளுவருக்கு சிலை வைத்தவரே//
காக்கும் காவல்துறை ஆணையத்தை அமைத்தவரே//
முதல் விவசாய கல்லூரியை உருவாக்கியவரே//
பெண்களுக்கு திருமண உதவி கொடுத்தவரே//
சுய உதவிக் குழுக்களால் பெண்களை//
சுயமாவும் தன்நிறைவாகவும் வாழ வைத்தவரே//
அனல் தெறிக்க வசனமெழுதி அன்னைத்தமிழை வளர்த்தவரே//
செம்மொழி மாநாட்டை நடத்தி தந்தவரே//
செம்மொழி அங்கீகாரம் பெற்று தந்தவரே//
தரணி போற்றும் தங்கத்தலைவனுக்கு புகழ்வணக்கம்//


சி. தேவி பிரியா திருச்செந்தூர்.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

0009. 

"சுடர்விடும் சூரியன்"
&&&&&&&&&

திருக்குவளை ஈன்றளித்த திருமகனும் நீயன்றோ//

வறுமையிலும் செம்மைகண்ட வாய்ச்சொல் வேந்தனன்றோ!//
தமிழுக்கு மகுடஞ்சூட்டி அழகுபார்த்த அறிஞரன்றோ!//
நகைச்சுவைப் பேச்சோடு நய்யாண்டி கலந்திடுவாய்!//

நானிலம் போற்றிடவே ஐந்துமுறை அமைச்சரானாய்!//

நாடுபோற்ற நல்லபலத் திட்டம் தந்தாய்!//

வறியோர் நிலைகண்டு உதவிக்கரம் கொடுத்தாய்!//

பெண்களின் நிலையறிந்து திருமணத் திட்டந்தத்தாய்!//

 தமிழையே அமுதெனச்  சுவைத்து மகிழ்ந்தாய்!//

வள்ளுவத்தில்  காதல்கொண்டு அலைகடல் நடுவினிலே!//

ஆழிப்பேரலையில் அழியாத சிலை வடித்தாய்!//

அகிலமே போற்றும் வண்ணம் செம்மொழிக்கு//
பன்னிசைத்து கொங்கு நாட்டில்விழாவெடுத்தாய்!//
சிலப்பதிகாரத்திற்கு வசனம்தீட்டி இலக்கியச்
சிறப்புப்பெற்றாய்!//

எண்ணையும் எழுத்தையும் கடைசிவரைக் கண்ணெனக்!//

காத்துவந்தாய்  என்றும் மறையாத சூரியனாய்ச்!//

சுடர்விட தினந்தோறும் உன்வசனம் செவிவழியில்!//
தமிழ்மகனே!  நீமறையவில்லை அழியாத காவியமாய்!//

மருத்துவர்
ஜே.குணசுந்தரி.ஒத்தக்கால்
மண்டபம்.

 

@@@@@@@@@@@@@@@@@@@@@@@

0010. 

*மாதர் குலத்தின் மாணிக்கம்*  
மகளிர்க்கு 
சுயஉதவிக் குழுக்கள் உருவாக்கியது//
பெண்கல்வி வளர்ச்சிக்கு உதவித்தொகை ஈந்தது//
விதவைக்கும் பொட்டிட்டு கைம்பெண் ஆக்கியது//
விதவைகள் 
மறுமணத்திற்கு உதவித்தொகை  வழங்கியது//
பெண்களுக்கு சொத்தில் சமஉரிமை அளித்தது//
மகளிர் இலவச பட்டபடிப்பு நல்கியது//
அரசு வேலையில் 30சதவித இடமளித்தது//
ஏழைப் பெண்களின்
திருமணத்திற்கு நிதியளித்தது//
கர்ப்பிணிகளுக்கு பேறுகால உதவித்தொகை கொடுத்தது//
இந்தியாவிலேயே முதல்   
பெண்காவலரை நியமித்தது//
 உள்ளாட்சி தேர்தலில் பெண்களுக்கு வாய்ப்பளித்து//
இலவச எரிவாயுவுடன் அடுப்பும் 
தந்தது//
இலவச தையல் இயந்திரம் வழங்கியது//
மேயராக  பழங்குடியின பெண்களுக்கு வாய்ப்பளித்தது//
ஆதரவற்ற பெண்களின் திருமணத்திற்கு வித்திட்டது//
இப்படி எத்தனையோ திட்டம் வகுத்து//
இந்நாட்டின் கண்கள் பெண்கள் என்றவர்//
மாதர்களை தலைநிமிர செய்த மாணிக்கம்//

கவிஞர் சு.சிவசுந்தரி
பெரம்பலூர்.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

 

0011. கவிஞர் கலைஞருக்கு கவி 

முத்தமிழ் அறிஞரே!! முத்தான மூத்தோனே!!

உதித்தாய் சூரியனாக நாட்டிலும் வீட்டிலும்!!

தொன்மொழியாம் தமிழுக்கு செம்மொழியென சூட்டியவனே!!

திராவிடத்தை முன்னேற்றிய தியாகச் செம்மலே!!

அரசியல் சாணக்கியனே!!தமிழ்நாட்டின் முதலமைச்சரே!!

ஆசிரியர்களுக்கு எல்லாம் மூத்த ஆசானே!!

விதைநெல்லுக்கு கணக்கு பார்க்கக்கூடாது என

ஆசிரியர்களுக்கு ஊதியத்தை உயர்த்திட்ட வள்ளலே!!

எண்ணிலடங்கா தமிழ் இலக்கியம் படைத்தவனே!!

மக்கள் அறிவுச் சுடரைத்
தூண்ட

மாபெரும்  நூலகம் அமைத்து கொடுத்தவரே!!

திரைப்பட வசனங்களால் சிந்திக்க வைத்தவனே!!

தமிழ்நாட்டை சென்னை என பெயர்சூட்டியவரே!!

சென்னையை மாற்ற சிங்காரச் சென்னை

திட்டத்தை அறிமுகம் செய்த மாமனிதனே!!

நீடு துயில் காணச் சென்றாயோ?

உன்னை எதிர்நோக்கி காத்திருக்கும் மக்களைக்

காணவருவாயோ?
மீண்டும் உதயசூரியனாக!! இம்மண்ணில்!!

 பா.சாரதா மீனா
கணித ஆசிரியை
வ.சித்தூர்
வடமதுரை ஒன்றியம்
திண்டுக்கல் மாவட்டம்

 

@@@@@@@@@@@@@@@@@@@@@@@

0012. சகலகலா வல்லவன் நீரே..


தமிழின காவலனே தமிழுக்கு பெருமை சேர்ப்பவனே!

திராவிடத்தின் தலைமகனே தன்னிகரில்லா தலைவனே!

ஐம்பூதங்கள் உலகை ஆளும் அதுபோல் ஐந்து முறை தமிழ்நாட்டை ஆண்டாய் நீரே!

திருக்குவளையத்தில் பூத்த சூரியனே!

 திரையுலக திரைக்கதையை திருத்தி அமைத்தவனே!

உன் உரையாடலை உரைக்காத நாயகன் உண்டோ!

போக்குவரத்து துறைக்கு போராடியவரும் நீரே !

குடிசை மாற்று வாரியம் தோற்றிவித்தவரும் நீரே!

 ஏழை மக்களுக்கு குடிசை வீட்டினை மாளிகை ஆக்கியவரும் நீரே!

விவசாய கல்லூரியை உருவாக்கியவர் நீரே!

குழந்தைகளுக்கு கருணை இல்லம் கட்டி அளித்தவரும் நீரே!

வசனம் எழுதுவதற்கு முன்னோடியே நீரே!

அரசியல் களத்தில் சாணக்கியனும் நீரே!

பார் போற்றும் படைப்பாளியும் நீரே !

ஓய்வறியா போராளியும் நீரே!!

உலகிற்கு ஒரு சூரியன் போல் திராவிட இயக்கத்திற்கு சூரியனாய் திகழ்ந்தார்!!!

நீர் வாழ்க என் புகழ் வாழ்க!!!

முனைவர் இரா. அன்சல்யா* உதவி பேராசிரியர் தமிழ் துறை  குயின்ஸ் கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரி புனல் குளம் புதுக்கோட்டை 

@@@@@@@@@@@@@@@@@@@@@@@

0013.

ஓய்வறியா திராவிடச் சூரியனே... 

அஞ்சுகத்தாயின் கருவில் உதித்தச் சூரியனே//
தமிழகம் தழைத்திட தரணியில் உதித்தவரே//
ஓய்வறியாது உழைத்திட்ட உழைப்பின் சிகரமே//
ஆர்ப்பரிக்கும் குரலால் அனைவரையும் ஈர்த்தவரே//
நெஞ்சுக்கு நீதிகேட்டு நெடும்பயணம் சென்றவரே//

எழுதுகோல் ராஜ்ஜியத்தில் என்றும் முதல்வனே//
வள்ளுவனுக்கு சிலை வைத்திட்ட வள்ளலே//
கூர்தீட்டி எழுதிய உந்தன் எழுதுகோல்//
மாற்றியது நம் தமிழகத்தின் தலையெழுத்தை//
ஒடுக்கப்பட்ட சமுதாயத்திற்கு ஒளி கொடுத்தவரே//

சிறுபான்மையினர் நலனுக்காய்
திட்டங்கள் தீட்டியவரே//
திருக்குவளையின் தீப்பொறியே
நெஞ்சுக்கு நீதிபேசியே//
குறளோவியம் படைத்திட்ட செந்தமிழ் ஊற்றே//
நாடாண்ட நற்றமிழே தெவிட்டாத தீந்தமிழே//
தமிழ் மாநிலம் காத்திட்ட பைந்தமிழே//
உலகத் தமிழர்களைக் கட்டியிழுத்த ஆளுமையே//
தமிழ் மண்ணின் தன்மானத் தலைவரே//
மேதினியில் உன்போல் யாரும் உளரோ!//

கவிஞர் சசிகலா திருமால்
கும்பகோணம்.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

0014. 

முத்தமிழ் காவலரே..

முத்தமிழ் காவலனே திராவிடச் சூரியனே//
ஈரேழு உலகமும் உன்புகழ் பாடிடும்//
இறவாப் புகழ் பெற்றிட்ட  பகலவனே//
உன் குறும்புப் பேச்சும் வீரத்தமிழும்//
கலையும் எழுத்தும் சொல்லும் செயலும்//
உன் பெயர் சொல்லியே முழக்கமிடும்//

அஞ்சுகத்தாய் பெற்றெடுத்த அழகுத் தமிழே//
திருக்குவளைத் தந்த தமிழகத்தின் திருமகனே//
அன்னைத் தமிழின் அருந்தவ நாயகனே//
விதவைக்கு கைம்பெண்ணென பொட்டு வைத்தவரே//
சமூகநீதி காத்திட வந்த சமத்துவமே//
கல்லக்குடிக் கொண்ட கருணைக் கடலே//

தமிழ் மொழியை செம்மொழியாக்கிய செஞ்சுடரே//
பார் போற்றும் பகலவனாய் உதித்தவரே//
வற்றாத எழுதுகோலில் எழுதி எழுதி//
வளரறிவைத் நம் தமிழுக்கு ஊட்டியவரே//
கன்னித்தமிழ் கவிதைகளும் 
சுவைமிகு நாடகங்களும்//
உணர்ச்சிமிகு வசனங்களும்
என்றென்றும் வாழும்...//

கோ. ஶ்ரீஅஹிலேஷ்
கும்பகோணம்.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

.0015. 

தரணி ஆண்டத் தங்கத் தமிழன்... 

முத்தமிழில் மூழ்கி முத்தெடுத்தத் தலைவரே//
திராவிட மொழியாம் தமிழ் மொழியை//
ஒளிரச் செய்த ஒளிமிகு சூரியனே//
தெள்ளுத் தமிழைத்  தித்திக்கும் தமிழாய்//
அள்ளி எடுத்து அழகு பார்த்தது//
அழிவே அறியா உந்தன் எழுதுகோல்//

சட்டமன்றத் தேர்தல்தோறும் சரித்திரம் படைத்தவரே//
தமிழ் காக்கும் தங்கத் தமிழனாக//
தரணி எங்கும் வலம் வந்தவரே//
நாளும் தேயும் தேய்பிறை அல்ல//
மீண்டும் மீண்டும் எழும் சூரியன்//
கலைத்தாயின் தலைமகனாய் விளங்கிய வள்ளலே//

உந்தன் மேடைப் பேச்சைக் கேட்டு//
தமிழ்த்தாயும் மேனி சிலிர்கிறாள் பார்//
அயராத உன் உழைப்பைக் கண்டு//
ஆதவனும் அயர்ந்துப் போகிறான் பார்//
அஞ்சுகம்மாள் பெற்றெடுத்த அரசியல் சகாப்தமே//
தங்கத் தலைவா நீ வாழியவே!//.. 

கோ. ஶ்ரீஆதேஷ்
கும்பகோணம்.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

0016. 

அகிலம் ஆளும் பைந்தமிழ் போர்கருவியாய் 

அஞ்சுகம் அம்மையார் வயிற்றில் வளர்ந்து

 முத்துவேல்  தோளில் சுமந்த தமிழ்கனல் 

தாய்மொழி மீது நரம்பில் தமிழ

 திருக்குவளை மண் ஈன்றெடுத்த தட்சிணாமூர்த்தி

 நினைவலைகள் தொட்டு செல்லும் தூய அன்புள்ளம்

 ஏற்றுமிகு வாழ்வை முன்னெடுத்துச் செல்லும்

 தன்னிகரற்ற தலைவன் பகுத்துண்டு பல்லுயிர்ஓம்பி

 கோவையில் செம்மொழி மாநாட்டின் தலைவன்


நீ பண்புகளின் ஊற்றுக் கண்ணாடி 

அருள்பெற்ற அவதாரம் மங்கா விளக்கே

 மொழி வளம் இயற்கை வளம் மக்கள் நலமென

உன் பொறுப்பில் ஆயிரம் வந்தாலும் 

புதுமை பெற்ற பல திட்டங்கள் பெற்றாலும் 

ஆயிரம் திட்டம் மனதில் வைத்து 

திறமைகளை இங்கு பலரை வளர்த்தாலும்

 புல்லுருவிகளை புறம் தள்ளிவிட்டு 

வீறுகொண்ட பேச்சால் நெஞ்சில் ஏறுகொண்டு

தமிழக வரலாற்றில் தனியிடம் பிடித்தவரே..

புது உலகை படைத்திட்ட உதயசூரியன் 

உதிக்கட்டும் ஒலிக்கட்டும் திசைதோறும் நின்புகழ்

 தமிழில் எழுச்சி உரும் தன்மான உணர்ச்சி 

மனித மாண்பு காத்திடவே மாண்புமிக்க 

மானிடராய் திராவிடம் காத்தவனே நீடூடி வாழ்க

 மீண்டும் வாழ்க தமிழகத்தை மீட்டெடுக்க...

முனைவர் ப.விக்னேஸ்வரி
உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, நேரு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோவை.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

0017.

முத்தமிழ் அறிஞர்

 முத்தமிழ் அறிஞரே நம் கலைஞரே!

 திருநங்கை என்ற பெயரை சூட்டியவரே!

 கற்கண்டு கவிதையால் உள்ளத்தை வென்றவரே!

 நலத்திட்டம் பல கொண்டு வந்தவரே!

 மக்கள் மனதில் இன்றும் வாழ்பவரே!

 தரணிக்கு தமிழின் பெருமையை உணர்த்தியவரே!

 உன் கல்லறை மெரினாவுக்கு சொத்து!

 உன் பேச்சில் மேடை அலறும்!

 நீ பெரியாரின் கொள்கையை நிறைவேற்றினாயே!

 அண்ணா வழியில்  நடந்து வென்றாயே!

 அறியாமையை நீக்கிய முத்தமிழ் அறிஞரே!

 மூன்று தலைமுறை காண ஜொலித்தாயே!

 நீ தலைமுறைகளை கடந்த தலைப்புச் செய்தியை!

 சாதிகளை கடந்த சாமத்துவ சரித்திரமே!

 கலைஞர் என்றால் மனதில்வருவது இளைஞர்!

தமிழ்த்தாயை தாலாட்டி வளர்த்த கலைஞரே!

 நீ இன்றி அமையாது திராவிட கழகமே!

 திராவிடசூரியனே நீர் மறைந்தது ஏனோ!

 மிஜினா
 புதுவை 

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

0018.

கலைஞரைப் போற்றுதும்!             
கலைஞரைப் போற்றுதும் கலைஞரைப் போற்றுதும்!
கலைத்தாயின் தலைமகனைக் கனிவுடனே போற்றுதுமே!

எழுத்தாற்றலைத் தன்வசமாக்கி ஏடுகளில் எழுதினாரே!
எல்லாதரப்பு மக்களையும் ஏகத்துக்கும் கவர்ந்தாரே! 
குறளோவியம் எழுதி தமிழன்னையைக் குளிர்வித்தாரே!
தொல்காப்பியப் பூங்காவில் இளைப்பாற வைத்தாரே!

பேச்சாற்றல் தமிழ்மகனின் பெரும்புகழை உயர்த்தியதே!
தடையின்றி நனிசொற்கள் தண்ணீராய் பாய்ந்தனவே!
சங்கத்தமிழைத் தங்கமாய் மினுமினுக்க வைத்தாரே!
மூச்சுவிடாமல் முத்தமிழை மேடையில் முழங்கினாரே!

 கலைத்துறையில் கால்பதித்து கைதட்ட வைத்தாரே!
கனல்பறக்கும் வசனமெழுதி கருத்துகளை விதைத்தாரே!
திரைக்கதையைத் தித்திக்கும் விதங்களில் தீட்டினாரே!
திரையுலகில் திண்ணமாக நற்பெயரைப் பொறித்தாரே! 
 
அரசியல் சாணக்கியத்தை அருமையாய் கையாண்டாரே!
அத்தனை மக்களுக்குமான திட்டங்களை வகுத்தாரே!
முப்பொழுதும் முழுமனதாய் முன்னின்று உழைத்தாரே!
முதல்வராயிருந்து முத்தாய்ப்பாய் வரலாறு படைத்தாரே!
                 

-டி.என்.இமாஜான், சிங்கப்பூர்.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

0019.

தன்னிகரில்லா தலைவர்

*திருக்குவளை சூரியன் ;

குவளையில் வந்து உதித்த சூரியரே

குன்றாத புகழ் நிறைந்த சூரியரே

*இளஞ்சூரியன்;

 வற்றாத எழுதுகோலை வாளாய் ஏந்தியவரே

 பராசக்தி தந்த பகுத்தறிவு பகலவரே

*தமிழ் இன சூரியன்;

தமிழினத்தை தலை நிமிர்த்திய தலைவரே

 உறவுக்கும், உரிமைக்கும் உடன் பிறப்பே

 *திராவிட சூரியன்;

உரிமைக்கு குரலாய் ஒளிரும் சூரியரே

எழுத்து வழி நடத்திய உதயசூரியனே

*முத்தமிழ் சூரியன் ;

தாய் தமிழை வளர்த்த தமிழ் மகனே

முத்தமிழை சுவாசித்து உயிர்ப்பித்த மூத்தவரே

*சமத்துவ சூரியன் ;

சமூக நீதிபெற சமத்துவநெறி தந்தவரே

சாமானிய மனிதருள் மனிதராய் வாழ்ந்தவரே

*முரசொலி சூரியன்

முரசொலியின் முழக்கத்தில் நீதி வென்றவரே

முதல் பிள்ளையாய் முரசொலியை நேசித்தவரே

*சாதனை சூரியன் ;

வந்தவரே வானுயர நின்றவரே வென்றவரே

சரித்திரம் புகழ சாதனைகள் புரிந்தவரே

*ஓய்வறியா சூரியன்;

ஓய்வறியா சூரியரே உறங்கச் சென்றீர்களா ?

 ஓய்வறியா அலைகளை ரசிக்கச் சென்றீர்களா?

 

எ.விக்னேஸ்வரி சரவணன்

ஆசிரியை

ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி

ஆவாரம்பாளையம்

கோயம்புத்தூர் -6

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

0020.

அஞ்சுகம் அம்மையின் அருந்தவப் புதல்வர்..

ஆலயம் "கமலாலயம்"தந்த முதல்வர்..

இயற்றமிழும் இவர் நாவில் சதிராடும்..

ஈர்ப்பு இவர் குரல் தனித்துவம்..

உலகாளும் முத்தமிழில் இவரின் கவித்துவம்..

ஊர் போற்றிடுமே இவரை விகடகவியென..

எந்த இலக்கியமும் இவரின் சொல்லாடலில் உயிர்த்தெழும்..

ஏற்கும் கதாப்பாத்திரங்களின் வசனகர்த்தா அரசாளும்..

ஐயமில்லை செந்தமிழ் மாநாடுகள் புகழ் பேசும்..

ஒவ்வொன்றும் செப்பேடுகள் தந்ததெல்லாம் வரலாறுகள்..

ஓராயிரம் பேனாமுனை கவியெழுதினாலும் முற்றுப்பெறாது..

ஔவையாரும் இன்றிருந்தால் செய்யுள் இயற்றிருப்பார் இவருக்காகவே..

மனிதருள் மாணிக்கமென எழுத்தாணிகள் பெருமை எழுதும்..

மாண்புமிகுகளும் இவர் நாவின் தமிழில் சொக்கி நிற்கும்..

முரசொலி பறைசாற்றியது இவரின் எழுத்தின் தீரத்தை..

மூன்றிலும் ஒன்றென முழுமையாய் நின்றவர்..

மெய்யென்னவென்றால் இவர் பெருமை சொல்லில்லடங்காது..

மேன்மைகளும் அருமைகளும் நம் வரிகளில் வார்க்கயிலாது.

கவிஞர் .திருமதி. சரஸ்வதி ஐயப்பன், திருச்சி.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

0021.கோபாலபுரத்து கொடை வள்ளல்...

அஞ்சுகதாய் தாய்மையின் சின்ன மாய் வந்து

திருவாரூர் திருக்குவளையில் பிறந்த மகனே

பராசக்தி திரைப்பட வசனத்தின் திறவுகோல்

செம்மொழியை செழுமையாக்கிய அற சுடரே

எழுத்தாணியே வாழ்வில் சுகமாய் சுவாசித்து

பெரியார் கொள்கையில் வந்த கதிரவனே

மகளிர் சுய உதவிக் குழு சொத்துரிமை

திருமண உதவி திட்டம் என பெண்ணிற்கு

பெரும் சலுகை அளித்த நல்லாட்சியாளரே!

பெருந்தலைவர்களைப் போற்றுவோம் என

கடற்கரையில் சிலை வைத்த முதல்வரே!

தரணியில் தலைமகன்புகழ் வாரிசுகளாய்...

தலைவர் ஸ்டாலின் தமிழக முதல்வராய்

கவிஞர் கனிமொழி நாடாளும் உறுப்பினராக!

வாழையடி வாழையாய் திராவிடம் வளரவே!

மருத்துவ சேவைக்கு கோபாலபுரம் வீட்டை...

தானமாய் உயில் எழுதிய கொடையாளரே!

உங்களின் புகழ் என்றும் ஓயாது!!

கே. நஜீமா ஜமான்,

யாண்பு, சவுதி அரேபியா.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

0022.

''காலத்தை வென்ற குமுகச்சிற்பி.''
(முனைவர் அ அரவரசன், தேவகோட்டை)
கடமையுடன் கண்ணியத்தைக் கட்டுப் பாட்டைக் 
கலங்காமல் தன்னுயிராய்ப் போற்றி வாய்மைத் 
தடம்பதித்த தலைவர்களில் தலைசி றந்த 
தத்துவமாய் வாழ்ந்திட்ட பலபே ருக்குள் 
அடலேறாய் விளங்கியவர் கலைஞர் என்னும் 
ஆற்றலாளர் ஒருவர்தான்! மறுப்பா ருண்டோ? 
நுணுக்கமிகும் அரசியலில் எதிர்ப்பைப் போக்கி 
நுட்பம்சேர் சாதனைகள் புரிந்த மேதை! 
கணக்கற்ற பனுவல்களைப் படைத்த ளித்துக் 
கண்மூடி வழக்கங்கள் மாய்வ தற்குச் 
சுணக்கமின்றி தன்னுழைப்பை வழங்கி நாளும் 
சுடராகி இருள்நீக்கிய எழுத்து வேந்தர்! 
அவமானம் தனைவந்துத் தாக்கும் போதும் 
அணுவளவும் பொறுமையினை இழந்தி டாமல் 
நவயுகத்தைத் தமிழகத்தில் வடிவ மைத்த 
நல்லறிஞர்! நாற்பொன்நிகர் குமுகச் சிற்பி! 
கவசமென இம்மண்ணைக் காத்து நின்ற 
கலைஞர்புகழ் காலத்தை வென்று நிற்கும்! 

-முனைவர் அ.அரவரசன், தேவகோட்டை. 
 

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

0023.

முத்தமிழறிஞர் 

கற்பனையின் களமதிலே
         கங்கையெனப் பாய்ந்தவரே!
விற்பன்ன  ராய்நிறுத்தி
        வீதியுலா அழைத்தவரே!
பற்பலவாய் கவித்திறனில் 
        படைக்கலனாய் ஆக்கிட்டார்!
தெற்றெனவே விளம்புகின்ற
         தென்னாட்டுத்  தமிழ்வேந்தர்!

கொற்றவனாய் முன்னின்று
         குலத்தமிழைக் காத்திட்டார்!
மற்றும்பல்  லிலக்கியமும்
         மகிழ்வுடனே படைத்திட்டார்!
பற்றுடனே பைந்தமிழைப்
         பண்புடனே சேர்த்திட்டார்!
நெற்றிக்கண் திறந்திடினும்
         நேர்மைவழி நின்றிடுவார்!

இற்றையநாள் இவர்போலும்
           எவருளரோ புவிமீது?
கற்றார்கண் கவித்திறனில்
           களம்வென்ற அறிஞரவர்!
முற்றியதாம் தெங்கெனவே
          முழுப்புலமை கொண்டவராம்!
பொற்றாம ரையாகப் 
          புகழ்மலர்ந்து நிறைத்திட்டார்!!!.....

தானாய்க்  கிளைத்தெழுந்த      
       தன்மானத்தின் இமயமிவர்!
தேனாய்த்   தமிழ்செதுக்கியத்
       தெளிவின்  சமயமிவர்.
பேனாவோ முளைத்தெழுந்த 
        பெரும்புகழாம்  ஆறாம்விரல்.
கூனாது   குறுகாது 
        கொள்கை  கூறும்ஒளிப்பரல்.

வானைத்தொடும்  வள்ளுவரும்      
       வாழ்த்திடுவார்  வல்லமையை!
ஆனையென   அஞ்சாது        
         ஆற்றிடுவார் அரும்பணியை!
தானையென  அமைத்திட்டார் 
        தரமான    கழகமதை.
சேனையதும் காத்திடுதே
       செந்தமிழர் நாட்டினையே!

வாழிய கலைஞர் புகழ்!
வாழிய! வாழியவே!

முனைவர் கிருட்டிண திலகா 
21 /24 சிவாஜி நகர், 
மதனந்தபுரம்,
 போரூர், 
சென்னை-600125

******************************************

0024.

முத்தமிழறிஞர் 

மூன்றெழுத்து கவிதையால் முத்துக்குள் சிப்பியானவரே/1

தமிழ் தாய்க்கு கோவில் அமைத்தவரே/2

தமிழை செம்மொழியாக்க அயராது பாடுபட்டவரே/3

அண்ணாவுக்கு சிறப்பானதொரு இரங்கற்பா இயற்றியவரே/4

தமிழ்த்தாய் வாழ்த்தை பாடச் செய்தவரே/5

சென்னை சங்கமம் உருவாக்கிய செந்தமிழரே/6

தமிழ் ஆண்டை திருவள்ளுவர் ஆண்டாக்கியவரே/7

அனைத்தும் பள்ளிகளிலும் தமிழைப் போதித்தவரே/8

என்றும் பிரகாசமான  எழுத்து சூரியனே/9

தமிழ் பக்தரே! முடிசூடா மன்னனே!/10

 படைப்பு பெட்டகமே! சிறந்த சிந்தனையாளரே!/11

அறிவுக் களஞ்சியமே ஆகச்சிறந்த தலைவரே/12

வசனகர்த்தாவில் வாகை சூடிய செம்மலே/13

திரைப்பட பாடல்களில் சொல்லாற்றலை செதுக்கியவரே/14

மதிநுட்பம் ,பேராற்றல் வாய்ந்தவரே வியக்கதக்கவரே/15

எழுச்சியோடு  புரட்சியோடு நயம்பட பேசுபவரே/16

அடுக்குமொழி ,கோபக்கனல், நகைச்சுவை குறும்பு/17

அனைத்து உணர்வுகளையும் தரும் அநேகனே!/18


கவிஞர் தி.மீரா
ஈரோடு.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

0025.

தலைவன்.

தமிழ் மொழி போற்றும் தமிழன்./1
கலைமகள் அருள் பெற்ற கலைஞர்./2
எழுத்துக்கு உயிர் தந்த எழுத்தாளர்./3
தாய் போற்றும் சிறந்த மகன்./4
மக்கள் கொண்டாடும் சிறந்த பேச்சாளர்./5
தமிழ் மொழி வளர்த்த நாயகன்./6.
அழியாத தமிழ் மொழி காதலன்./7
தன்னம்பிக்கை நிறைந்த அரசியல் மேதை./8.
தோல்வியை கண்டு அஞ்சாத தமிழன்/9
என்றும் மின்னும் விடாமுயற்சி நாயகன்./10
ஏழைகளின் பசி அகற்றும் தமிழன்./11
மிளிரும் சிந்தனை நிறைந்த சிந்தனையாளர் /12
 மக்களை வழிநடத்தும் சிறந்த தலைவர்/13.
அனுபவம் நிறைந்த தமிழ் ஆசான்./14.
எழுத்துகள் பேசும் மின்னும் எழுத்தாளர்/15
 அச்சம் இல்லாத அரசியல் அரசன்/16 ஓய்வு அறியாத சுறுசுறுப்பான அறிஞன்/17.
மக்கள் அன்பின் அடையாளம் கலைஞர்./18.

மு‌.விக்னேஷ்வரி பி .ஏ‌ பி.எட் ஆசிரியர் தூத்துக்குடி மாவட்டம்.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

0026.

நித்திலக் கலைஞரே
***********************
முத்துவேல் அஞ்சுகம்
முத்தாய் பெற்றெடுத்த
முத்தமிழ் அறிஞராய்
முழுமுதல் ஆசானே!

நித்திலக் கலைஞரே
நெஞ்சுக்கோர் நீதியே
எத்திசையும் புகழோங்க
ஏணியின்றி ஏறியவரே! 

சமத்துவத்தில் சாதனை
சாகாவரத்தில் சோதனை
அமரத்துவம் ஆனாலும்
அசையாத கட்டுமரமே !

காலங் காலமாக
கற்பனைக் கடவுளாக
கோவிலில் கும்மாளமிட்ட
கூத்தர்களை விரட்டியவரே!

நாற்பதாண்டு அரசியலில்
நாயகராகி நாடுபோற்றி
கற்பக விருட்சமாகிய
காலத்தின் அடிச்சுவடே !

ஐந்துமுறை முதல்வராகி
ஐம்பெரும் பூதங்களாம்
ஐம்புலன்களின் ஆதிக்க 
ஐயத்தை  அடக்கியவரே 

வாழ்வினை வகுத்திட்ட
வள்ளுவனுக்கு ஓர்சிலை
சொல்வினை எழுத்தால்
செதுக்கிய குறளோவியம்

ஓயாத உழைப்பில்
ஒருபோதும் சளைக்காது
சாயாத சாத்திரத்தை
சாய்த்தே சாதித்தவரே !

சமத்துவபுரம் கண்ட
சரித்திர நாயகனே
தமதுரிமை வரம்புக்குள்
தமிழனை நிமிர்த்தியவரே!

முனைவர் கவியோகி 
சி.அண்ணாதுரை,
 கருமாத்தூர் மதுரை .

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

0027.

தன்னிகரில்லா தலைவன்

ஓய்வறியா சூரியனே
தமிழினக் காவலனே

முத்தமிழின் தலைமகனே
அரசியலின் ஆளுமையே

சொல்வன்மை சோதியனே
தமிழெழுத்துகளின் உயிர்ப்பானவனே

கலை பல கண்ட மேதாவியே

சரித்திரம் போற்றும் சிவப்பு சூரியனே

எழுத்தாணி பிடித்து
எண்ணங்களை விரித்தாய்

பாரினில் தமிழை தழைத்திடச் செய்தாய்

உழைப்பவர் தோழனாய் உயிரினில் நின்றாய்

உலகெலாம் தமிழை ஓங்கியே ஒலித்தாய்

தமிழ்மகன் இவனென தரணியும் புகழ

தமிழுக்கோர் இலக்கணமாய் நீயும் வாழ்ந்தாய்

எம்மொழியாம் செம்மொழி சிறந்திடச் செய்தாய்

வள்ளுவன் அவனுக்கோர் சிலையும் வடித்தாய்

தோற்றாலும் துவளாத அரசியல் ஞானியே

சமயோசித்த ஆளுமையின் சாணக்கிய மூளையே

சமமான வாழ்வுக்கு சமத்துவபுரம் தந்தாய்

சாதனை நாயகனாய் சரித்திரம் கண்டாய்

தன்னிகரில்லா தலைவன் நீயென ஆனாய்

புலவர் பெ. மீனா, 
பட்டாபிராம்,
திருவள்ளூர் மாவட்டம்.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@

0028.

முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி

சிந்தனை ஆற்றால் 
ஒளிந்ததே சூரியனாய்//
தமிழ் வார்த்தைகள் 
வளர்ந்ததே அகிலத்தில்//
தடைகளை தாண்டி 
வாழ்வில் உயர்ந்து//
கவளையென்னும் கடலில் 
விழுந்து மிதக்காமல்//
தமிழென்னும் மழையில்
 நனைந்து கொண்டு//
மக்கள் மனதில் 
இடம் பிடித்து//
தமிழகத்தில் புகழ் 
பெற்ற கலைஞ்ராக//
தமிழ் மண்ணில் 
சாதனை செய்து//
திரைவுலகில் தமிழ் 
வசனங்களை எழுதி//
தமிழ் கதையில்
 ஆர்வத்தை வளர்த்து//
அழகிய தமிழை
 வர்ணித்து காட்டிட//
தமிழ்மொழி அகிலத்தில்
 அதிகம் நிறைந்தது//
மக்கள் மனதில்
 தெரிவு உண்டனாதே//
கடமை கன்னியம்
 கட்டுப்பாத்தை வாழ்க்கையில்//
ஆயுதமாய் அருகே 
வைத்து கொண்டு//
தமிழ் வரலாற்றில்
 கம்பீரமாக இருந்திட//
ஏழைகளின் ஏழைகளின்
 முகதில் மகிச்சி பிறந்து//
சோகமென்னும் இருளுக்கு 
வெளிச்சம் தந்திதிட//
ஏழைகளின் வாழ்க்கையில் 
நன்மை பிறந்ததே//

இரா.மோகனதாஸ் சிவலிங்கம்.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

0029.

மண்ணின் முத்தமிழின் முதல் மகன் நீயோ -1 

அஞ்சுகம் பெற்றெடுத்த தமிழ்நாட்டின் அற்புதமே -2

முத்துவேல் பிறப்பித்த அன்பு மாணிக்கமே-3

தமிழனாய் பிறந்த அன்பு தவப்புதல்வனே-4

தலைக்கனம் இல்லாத தமிழ் மைந்தனே  -5

உதிராத சூரியனாய் உலகிற்கு ஒளி வீச -6  இன்று உங்கள் இனிய பிறந்தநாள் -7  கனிந்த வாழ்த்துமொழிகிறேன் நான்   -8  தேசம் எல்லாம் உங்கள் புகழ் பாட -9 திரையெல்லாம் உங்கள் வசனம் பேச -10  நாடெங்கும் உங்கள் திட்டம் செயல்பட  -11 தமிழாகி தந்தையாகி முதல்வனாகி கவிஞராகி -12

தமிழ் நாட்டில் வரலாறாகி உயர்ந்தவர் -13 மாதர்களை தலை நிமிரச் செய்த மாணிக்கமே -14

இந்நாட்டின் கண்கள் பெண்கள் என்றவர் -15 

தங்களை நான் வாழ்த்த வயதில்லை  -16  அதனால் தலை வணங்கி கூறுகிறேன் -17 பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் கலைஞர் அவர்களுக்கு -18

-லயன் டாக்டர் ஃப்ரீதா தூத்துக்குடி 

@@@@@@@@@@@@@################

0030. 

*முத்தமிழ் வித்தகர்* 

சிப்பிக்குள் முத்து பிறப்பதுண்டு நீரிலே/
முத்து அஞ்சுகத்துக்கோ பிறந்தது பாரிலே/

மூவேந்தராண்ட நம் நாட்டிலே/ 
மூன்றா வதாய் அவதரித்த வித்தகரே/

  கிரிக்கெட்காதலனாய் இருந்த போதும்/
ஹாக்கியை விளையாடி மகிழ்ந்தவரே/

அன்பெனும் மனம் கொண்ட வராயினும்/ நட்புபெனும் முதல் பேச்சை முழங்கினாரே/

கருத்துகள் நிறைந்த வராகை யால்/
பல கதை கருக்களை உருவாக்கினாரே/ 

இயற்றிய வசனங்கள் இயற்றமிழ் ஆகுக/
இசைத்திட்ட இசையருவிகள் இசை தமிழாகுக/

நடிக்க   செய்திட்ட நாடகத்  தமிழோடு/
முத்தமிழையும்  வளர்த்திட்ட முத்தமிழறிஞர் இவரே /

மூவேந்தர் வழி வாழ்ந்தயென் இனிய தமிழ் மகன்/
கலைகளுக்கெல்லாம் நாயகனாய் கலைஞரானவரே/

சூரியனையே உதயமாகச்செய்த உதயச்சூரியனே/ 
முத்தமிழை ஆண்ட வித்தகரே/

முத்தமிழான தமிழ் நாட்டையாண்ட தமிழே/
மூவுலகம் போற்றும் உன்முத்தமிழ்புகழ்/

செம்மொழி காத்த தலைவரே/

செம்மொழி வித்தகரே/
வாழ்க உன் புகழ்!

வளர்க நம் தமிழ்!

கவிஞர் .
செ. கிருஷ்ணமணி, தூத்துக்குடி மாவட்டம்.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@

0031 . 

உழைக்கும் மக்களின் உதய சூரியன்
****************************************

முத்துவேலர் அஞ்சுகத்தாய் முழுநிலவாய்ப் பெற்றெடுத்த
வித்தகராம்! முத்தமிழாம்! தத்துவத்தின் தனிச்சுடராம்!

பெரியார் அண்ணா சமத்துவத் தோழர்
புவனம்
 போற்றும் முத்தமிழ் அறிஞர்!

வரியவர் வாழ்வில் வளர்ச்சியைக் கொண்டவர்
வான்புகழ் வெற்றியின் வழியினை அமைத்தவர்

அண்ணா அமைத்த அரசை ஏற்றவர்
அரும்பெரும் செயலாய் ஆற்றல் பெற்றவர்

அன்பை விதைத்து அருள்வழி நடந்து
இன்பம் பெருக  இன்னுயிர் காத்தவர்

பொங்கும் தமிழாய்க் கொள்கைப் பிடிப்பாய்
எங்கும் எதிலும் ஏற்றம் கண்டவர்

ஏழையர் வாழ்வில் வளமையைத் திணித்தவர்
உழைக்கும் மக்களின் உதய சூரியன்

வங்கக் கடலி்ன் மணல் வெளியில்
வந்தவர் வழிபடும் செந்தமிழ் அமுதாய்ச்
சிம்மக் குரலோன் செஞ்சொல் மணக்கச்
சிந்தைச் சுடராய்ப் புகழிடம் புகுந்தாரே!!!

     கவிஞர்
சைதை பாலு.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

0032. 

கலைஞர் கருணாநிதி 
***************************

தமிழகத்தின்  நாகப்பட்டினத்தில் திருக்குவளை சிறுகிராமம்//
தமிழ்க்கவி கலைஞரவர் திரவியமாய்ப் பிறந்தாராம்//

பதினான்கு வயதினிலே அரசியலில் கால்பதித்தார்//
பதிப்பகத்தில் முரசொலி பத்திரிகையும் துவங்கினார்//

திரைப்படப் பாடல்களில் நயமுடன் இலங்கினார்//
திரையில் வசனங்களிலும் நலமாக விளங்கினார்//

நூறுக்கும் மேற்பட்ட உரைநடை மற்றும்//
வீறுடன் இலக்கிய நூல்களும் ஏற்றம்//

 மேடை நாடகங்களிலும் சிறந்த பங்கு//
மேன்மை நடிப்பும் துலங்கியது நன்கு//

முத்துவேலர் தந்தையாம் அஞ்சுகம் தாயாராம்//
பத்மாவதி  தயாளு ராஜாத்தி மனைவியராம்//

பள்ளிப் படிப்பு கைகூடாது விடினும்//
பதவிகள் பெற்றே படித்தரம் உயர்ந்தாராம்//

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராம்//
திறமுடன் பொன்விழா கண்ட அறிஞராம்//

அகவை தொண்ணூற்று நான்கில் அவரும்//
அயர்ந்தே முதுமையால் இறையடி சேர்ந்தாராம்//

பஸ்லா பர்ஸான் 
காத்தான்குடி 
இலங்கை.

 

@@@@@@@@@@@@@@@@@@@#@@#

0033.

முத்தமிழறிஞர் கலைஞர்

ஈரோட்டுப் பகுத்தறிவுப் 
                       பட்டறையில்
ஈட்டி முனையாகத் தன்னைக்
                               கூர் தீட்டி
காஞ்சித் தலைவனின் 
            அரசியல் களத்தில்
காவியக் கலைஞர் உதய
         சூரியனாக பிரகாசித்தார்.!

தமிழ்நாடு, தமிழினம் தமிழ்
                      மொழி காத்த
திராவிட முன்னேற்றக்
               கழகத் தலைவர்.!
தமிழ்நாட்டில் பொற்கால
                        ஆட்சி தந்து..
திராவிட ஆட்சிக்கு வித்திட்ட
                              போதகர்.!

இந்திய பிரதமரை வழி
        நடத்திய சாணக்கியர்.!
இந்திப் பேயை விரட்ட
         முரசொலித்த கலைஞர்.

குறளாசான் வள்ளுவரின்
        வானலாவிய சிலை..
குறளோவியம் தீட்டிய
          கலைஞரின் கலை.
சொற்களைக் கற்களாகப்
                       பயன்படுத்தி
அற்புத தமிழ் மாளிகை
        -யெழுப்பும் கலைஞர்.

இலவச வண்ணத்
           தொலைக்காட்சிப்
                      ‌‌   பெட்டியால்..
இலட்சக்கணக்கான ஏழைகள்
          கண்டு மகிழ்ந்தனர்.
சாதி வேற்றுமை அகல
      சமத்துவபுரம் அமைத்தவர்.
செம்மொழி நாயகரின்
            சாதனைகளாயிரம்
கலைஞரின் கடற்கரைப்
        பேனா விடை சொல்லும்.

கலைநன்மணி
அ.சை. தஸ்தகீர்.
திருச்சி.
9488960484.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

0034. 

சிற்பியாம் கலைஞர் 

திருக்குவளை ஈன்றெடுத்த புதல்வன் தட்சிணாமூர்த்தியே! 
தமிழ் மாணவர் மன்றத்தின் தலைவனே !
மாணவநேசன் மூலம் சமூகப்பணியை ஊட்டியவரே !
மாதஇதழாம் முரசொலியை நாளிதழாக மாற்றியவரே !
கல்லக்குடி ஆர்ப்பாட்டத்தால் அரசியல் இறங்கியவரே !
பண்பாட்டைப் பாதுகாக்க மெழிப்போராட்டம் நடத்தியவரே !
இலங்கை தமிழரின் நலனுக்காக போராடியவரே !
பொதுப்பணித்துறை மூலம் மக்களுக்கு தொண்டாற்றியவரே!
தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக திட்டங்களை அறிவித்தவரே !
டைடல் மென்பொருள் பூங்காவை உருவாக்கியவரே !
உடன்பிறப்புக்கு மடல்கள் எழுதி சிறப்பித்தவரே !
ராஜகுமாரியால் 
திரைத்துறை எழுத்தாளராய் உயர்ந்தவரே !
உலகக் கலை படைப்பாளிக்கு சொந்தக்காரரே !
உலகத் தமிழ் மாநாட்டை தொடங்கியவரே!
செம்மொழித் தமிழுக்குப் பாடலை இயற்றியவரே!
சமச்சீர் கல்வித் திட்டத்தின் முன்னோடியே!
அரசியலில் பொன்விழா கண்ட நாயகனே!
சிற்பியான உன்புகழ் பெருக வாழ்த்துகின்றேன்!!!

ஆ.ஜெசிந்த்
கேரள வித்யாலயம் மேல் நிலைப் பள்ளி, புரசைவாக்கம், சென்னை -600084

@@@@@@@@@@@@@@@#@#@@@####

0035.

வாழ்ந்தான் உயர்ந்தார்

ஏழையாக பிறந்தான் ஏணியாக வளர்ந்தான்
ஏட்டை படித்தான் எழுத்தாணியாக வளர்ந்தான்
இரு கொள்கை கையில் எடுத்து போராடினான்
சினிமா அரசியல் ஆக்கப்பூர்வமாக வளர்ந்தான்

சினிமாவில் பாடல் வசனம் எழுதினான் சீக்கிரமாய் மக்கள் மனதில் இடம் பிடித்தான்
அரசியலில் இறங்கினான் அற்புத வளர்ச்சி
ஆளுமையை உலகுக்கு உணர்த்திக் காட்டினான்

புதியபடைப்பு புதிய சிந்தனை கொண்ட புரட்சியாளர் புத்துணர்ச்சியுடன் புதியஉலகை படைத்து காட்டினான் படைத்தவன் படைப்பாளி படைத்தான் புதுமையை 
பார்த்தவர் வியந்தனர் பரவசமாக இருந்தனர்

போற்றிப் புகழ்ந்திடும் செய்த தொண்டு போரிட்டு வெல்லாததை புகழ்ந்து பாடி வென்றவர் வாய்ப்பேச்சில் வல்லவர் புகழ்ந்துரைப்பதில் நல்லவர்
வாழத் தெரிந்தவர் பிறருக்கு எடுத்துக்காட்டியவர்

கருணை உள்ளம் கொண்ட கருணாநிதி கருத்தாய் பேசி உள்ளங்களை கவர்ந்தவர் 
எழுத்தில் உயிர்கலந்து இன்னும் வாழ்கிறது

நம்மை விட்டு பிரியாமல் வாழ்கிறார்
என்றுமே.

K. சுகுமாரன் M.Sc.M.A
143/1 திருக்கயிலை இல்லம் கோபால் நகர் ஓய்எம்ஆர் பட்டி 
திண்டுக்கல்..624 001.

 

@@@@@@@@@@@@@@@@@@@@@@@

0036.

****காவியத்தலைவன்****

அஞ்சுகத்தாய் ஈன்றெடுத்த அருந்தமிழ்ப் புதல்வரே
அன்னைத் தமிழை அரியணையில் ஏற்றியவரே!
அரசியல் களத்தின் அண்ணாவின் வழித்தோன்றலே
அசாத்திய செயல்களை அஞ்சாமல் செய்தவரே!

இன்பம் பொங்கிடும் இனியத் தமிழை
இன்னுயிராய் எண்ணியே இமயத்தில் வைத்தவரே!
இன்னல்கள் கலைந்தே இதயங்களை வென்றிடுவாய்
ஈகை குணம்கொண்ட ஈடில்லா தலைவனே!

உலகப் பொதுமறையை உன்னதமாய்க் காத்தவரே
உள்ளப் பொருளதனை உண்மையாச் சொன்னவரே!
வாழும் குறளுக்கு வலிமைதனைச் சேர்த்தவரே
வள்ளுவருக்குச் சிலைவைத்து வானுயர நிற்பவரே!

எண்ணிலடங்கா திட்டங்களால் எங்களைக் கவர்ந்தவரே
ஏற்றமிகு வாழ்விலே ஏணியாய் இருப்பவரே!
கருணைக் கடலாய் கலைஞரின் ஆட்சி
கந்துவட்டிக் கொடுமைகள் காணாமற் போச்சி!

வாழிய நின்பெருமை வாழிய வாழியவே!

வையகம் உள்ளவரை வாழ்த்துமனைத்து உயிர்களுமே!!

-இரா.கி.இராமகிருஷ்ணன்,சேலம்.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

0037.

*செம்மொழி வேந்தனே*

திருக்குவளையின்  சிங்கமே! அஞ்சா நெஞ்சமே!

முத்தமிழறிஞரே!
தமிழ்த்தாயின்
தலைமகனே!
தமிழ்மணமே!

தமிழ்காத்து 
செம்மொழியெனும்
பெருமை சேர்த்தவரே!

தண்டமிழால்
வான்புகழ்
பெற்றுயர்ந்த பெறுமகனே! 

காந்தவீச்சு எழுத்துகளின்/ வசனங்களின் சொந்தமே!   

பேச்சாற்றல்/
செயலாற்றல்/ பன்முக
அரசியல்வித்தகரே!

சொற்பொழிவின்
சொந்தக்காரரே;
கணத்தகுரலின்
கம்பீரமே!

இடிமுழக்கம் பேச்சு;
புயல்வேக விவேகம்!  

தூங்கி கொண்டிருந்தோரை
தட்டியெழுப்பிய
வசனநடையாளரே!

பல்துறை மேதைகளை
மேடையேற்றிய
மாமேதையே!

புரட்சி புயலே;
எழுச்சி நாயகனே!

மெத்தபடித்தவனும்
மலைக்கிறான!
நின்பேச்சினிலே
அதிர்கிறான்!

காவிய வேந்தனே;
தன்னிகரில்லாத தலைவரே!

முன்னேற்ற கழக
வேந்தனே! கலைஞரே!

சகலகலா வல்லவரே;
சகலமும் சகித்தவரே!

உதயசூரியனே;
கொட்டுமுரசே;
முரசொலி இதழாளரே!

சமத்துவ நாயகனே;
சிம்மாசன செங்கோலே!

எழுதுகோலுக்கு நல்எழுத்தோவியமே!
திருவள்ளுவச்சிலை
ஆழியிலெடுத்தவரே!

ந.ராஜசுலோச்சனா
ஆவடி,திருவள்ளூர்
மாவட்டம்.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

0038.

காவியத் தலைவன் 

செம்மொழியின் மணம் பரப்பும் செங்கடலே.......
எண்ணங்களில் ஏவுகணைகளை வீசிய சிந்தனையாளனே ...
எழுத்துக்களுக்கு உயிர் ஊட்டிய கவிஞனே ...
காவியங்கள் தோறும் போற்றப்படும் கலைமகனே...
கவிதைகள் ஊற்றெடுக்கும் உணர்வின் பிற்பிடமே...
கனவுகளில் மிளிர்கின்ற உண்மை நாயகனே....
விடியலைப் புலர்வித்த எங்கள் சூரியனே....
உயர்வுத் தாழ்வுப் பாராத தத்துவனே....
காரிருள் நீக்கிட்ட நின் ஒளியே...
திரை  உலகிற்கு  கிடைத்த திரவியமே...
திராவிடம் இதுவரை கண்டிராத மாண்பாளனே....
பாரதம் போற்றும் பகுத்தறிவு பண்பாளனே....
முக்கடலும் முழங்குகின்ற முத்தமிழ் வித்தகரே...
நலத்திட்டங்கள் வழங்கி வாழ்வளித்த அறிஞரே...
உறங்கும்போதும் ஊக்கமூட்டுகிறது உம் வாழ்வு....
உலகம் முழுவதும் நீவீர் வாழ்கிறீர் ... 
உள்ளங்கள் தோறும் உமது தமிழ் ஆளுகிறது... 
தமிழும் தரணியும் புகழுகின்ற காவியத் தலைவனே.....!!!!!!!! 


ரா. ராதிகா 
புதுக்கோட்டை மாவட்டம் 
 

@@@@@@@@@@@@@@@@@@@@@@@

0039.முத்தமிழ் அறிஞர் விருது  கவிதைப் போட்டி.                ____________________________கன்னல் தமிழின் தலைசிறந்த தலைவன்!!!குறளோவியம் தந்த தவப் புதல்வன்!!!                   திருவாரூர் கண்டெடுத்த  தமிழ்ப் புதையல்!!!                 புரட்சியைத் திரைப்படங்களில் புகுத்திய நாயகன்!!!           நெருப்பு வசனங்களால் தீயோரை மிரட்டியவன்!!!        இயலிசை நாடகத்தில் கரை கண்டவன்!!!               தமிழகத்தின் தலை எழுத்தை மாற்றியவன்!!!       தமிழனை தலை நிமிரச் செய்தவன்!!!                          செம்மொழி தமிழ்மொழியென பெருமைப்பட வைத்தான்!!!                         வாழ்நாளெல்லாம் தமிழனுக்காகவே போராடி வென்றான்!!!        வாழும் வரை போராளியாகவே இருந்தார்!!!                             தமிழினத்தின் செறிவே இவரின் சிந்தனை!!!        தமிழனுக்குப் பெருமை கலைஞர் தான்!!!!                   கலைஞரை விட்டுவிட்டு தமிழக வரலாறில்லை!!!       தமிழனின் மானம் காத்த மாவீரன்!!!                              வள்ளுவக் கோட்டம் தந்த வல்லவன்!!!!                  கண்ணகிக்கு சிலையெடுத்து பெண்ணுக்கு மதிப்பளித்தான்!!!              இணையில்லா தமிழகத்தின் தலைவர் கலைஞர்!!!!                               

முனைவர் பீ.ரகமத் பீபி ,

திருவையாறு.

 

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

0040.

முத்தமிழே
மூத்த தமிழ் படைப்பு நீ
வித்தகு சொல்லால் வியத்தகு படைப்பு
வியன் உலகின் விந்தை தான் அது
உம் செம்மையான செந்தமிழ் படைப்பு....
ஐம்பெரும் காப்பியம் அழகு தமிழில்
ஐந்திணை பாகுபாடு அக ஒழுக்கத்துடன்
இத்தனை படைப்புகள் இன்பத்தில்
இதுமட்டுமின்றி உன்னதமான உம் படைப்பும்....
இமயத்தில் கல்லெடுத்து தமிழுக்கு சிறப்பு
நீயோ சொல்லெடுத்தால் உம் புகழ் இமயமாய் 
உரை ஆசிரியர் பலர் புகழ் ஏணி
தொல் புகழ் தொல்காப்பியத்திற்கும் உம் உரை....
மறை தந்த உலகபொதுமறை தந்த 
உத்தமனுக்கு உயர் சிலை தந்தாய்
அம் மறைக்கு உரையும் தந்து 
சிலை உயர் உம் புகழ் இன்று....

அரசு ஆசனத்தில் சிம்மாய் நீ
சாசனம் பல தந்தாய் தமிழகத்திற்கு
உன் பேர் சொல்லா இடம்
எங்கும் இல்லை தமி (ழ் அ)வேகத்தில்....

உதிக்கிறாய் நீ  உதய சூரியனாய்
சின்னமாய் அல்ல மக்கள் மன எண்ணமாய்  
சாதி மத பேதம் அகற்றினார் இன்று
ஊரெங்கும் சாட்சியாய் சமத்துவபுரம்.....

இன்னும் வரைந்திடலாம் வர்ணிக்கிறார் 
வார்த்தையால் 

உன்னைப் பற்றி
உயர் மொழியாம் செம்மொழியில் 
உன்னைப் புகழ்ந்த களைப்பில்
சற்று இளைப்பாற 
இடம் கேட்கும் உன்னிடம்......

முனைவர் உ.சுப்பிரமணியன்
உதவிப் பேராசிரியர் தமிழ்
தூய சவேரியார் கல்வியியல் கல்லூரி பாளையங்கோட்டை, திருநெல்வேலி.

 

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

0041. 

முத்தமிழ் கலைஞரின் சாதனைக்கோர் வாழ்த்துப்பா!

தித்திக்கும் தேன்த்தமிழில் புலமையான வித்தகரே!
திகட்டாத முத்தமிழில் முக்குளித்து மகிழ்ந்தவரே! திருவள்ளுவனின் ஈரடி வெண்பா குரளுக்கு! திருநீர் மணமாய் உரையெழுதிச் சென்றவரே! கண்ணிய நீதி கேட்டு போராடிய! கற்புக்கரசியாம் கண்ணகிக்கு கடற்கரைச்சிலை வைத்தவரே! 
அடுப்பூதும் மகளிர்க்கும் 33சதவீதம் இடஒதுக்கீட்டவரே!
அகிலத்திலே மிடுக்குடனே நடமாடச் செய்தவரே!..

மெதுவெதுவாய் மறையும் நம் தமிழ்மொழியோ! மின்னொளியாய் மிளிர்ந்திடவே மீண்டும்-நீ வாராயோ! உன்னை வாழ்த்திப் பாடிடவே கொட்டுமுரசே! உன் புகழ்ப்பாடி மகிழ்ந்திடவே கொட்டுமுரசே!.. 

புவன வசந்தங்கள் யாவும் போதிடுமோ?.. புதுக்கவி மாலை நாம் தொடுத்திடவே! சப்த ஸ்வரங்கள் தான் போதிடுமோ? சங்கீத கீதம் நாம் மீட்டவே! என் கவிதையில் தான் அடங்கிடுமோ? என் இனிய வாழ்த்துத் துதிகள்!..

கவிதாயினி 
ச.கலைச்செல்வி திருப்பூர்.

@@@@@@@@@@@@@@@@@@@@@

0042.

உலகத் தமிழரின் உன்னதத் தலைவர்
****************************************

திருக்குவளை ஆரூரில் திராவிடத்தின் ஔிச்சுடராய்/

அருட்செல்வர் பிறந்தாரே அஞ்சுகத்தாய் வயிற்றினிலே/

பெரியாரும் அண்ணாவும் பேரியக்கக் கழகத்தில்/

அறிவுச்சுடர் ஆற்றலினால் ஆளுமையை வளர்த்தாரே/

தென்னவர்கள் புகழந்திடவே தென்றலாய் திகழ்ந்தாரே/

உன்னதத் தலைவர் உத்தமர் கலைஞர்/

ஈகைத் திறத்தால் இன்தமிழ்த் திருநாட்டில்/

வெற்றி வாகைசூடிய வையத் திருமகன்/

மக்களை மதிக்கும் மகிழ்ச்சியே உழைப்பென/

மாப்புகழ்த் தலைவர் கலைஞர் உழைத்தார்/

குறள்மணம் பரப்பிய கொள்கை கோமான்/

மறத்தமிழ் மக்களின் மாத்துயர் துடைத்தார்/

ஒற்றுமை ஓங்கிட ஓரினம் கண்டிட/

வேற்றுமை அகற்றிய வேந்தர் கலைஞர்/

கொஞ்சும் தமிழின் கொள்கை முரசு/

நெஞ்சுக்கு நீதியின் நியாயத் தராசு/


ஆன்றோர் சான்றோர் அணைவரும் போற்றும்/

தேன்தமிழ்ச் செம்மல் வின்னில் மறைந்தார்...

      அன்புடன்
      M .சுந்தர்
தளபதி ஸ்டாலின் தன்னார்வலர் மாநில நிர்வாகி.
சென்னை--15.

 

@@@@@@@@@@@@@@@@@@@@@@@

0043. ஆரூரில் பிறந்திட்ட அற்புத முத்து/
முத்துவேலர் அஞ்சுகத்தின் அரும்பெருஞ்   சொத்து!/
திருக்குவளை தந்த கருத்துப் பேழை/
கண்டவரும் விரும்பிப் படிக்கும் நான்மணிமாலை/ இவரின் எழுத்தில் இனிமை கொஞ்சும் /
எதிரியையே வீழ்த்திடும் அவரின் பேனா/
அதனால்  சிலை வைக்கிறார்கள் என்பேனா?/ காவியங்களில் கரைகண்ட கவிஞர்களை  திணற வைத்தவர் /ஒப்பற்ற கவிஞர்களில் ஒருவனென உணரவைத்தவர் !/
 சோடை போகா சிலேடை மனிதர்/ சாடைப் பேச்சில் சாகசப் புனிதர்./
பெற்றெடுத்த தாய்  அஞ்சுகமாய் இருந்தாலும் /
அம்மாவை கண்டு அஞ்சியது இல்லை/
இவரின் இலக்கியம் இன்பத்தமிழின் எல்லை/
சாஸ்திரங்கள் பார்க்காத 
சரித்திரம் படைத்தவர்./மூடநம்பிக்கையினை தன் எழுத்தால் உடைத்தவர் /
உடன்பிறப்பே எனும் ஒற்றை வார்த்தை /
உயிரைக் கொடுக்கும் உன்னத வார்த்தை/
அழைத்தால் போதும் அலை கடலென ஆர்ப்பரிக்கும்  உள்ளம்./இவரது பேச்சோ நாவினிக்கும்  பாகு வெல்லம்./
என்றும் இவரின் தமிழ் உலகை வெல்லும்./       

      திருமதி.இள.செல்வமணி  தலைமைஆசிரியை. ஊ.ஒ.தொ.பள்ளி,சித்தமல்லி,கோட்டூர் ஒன்றியம் திருவாரூர் - மாவட்டம்.     

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

0044. திராவிடத்தின் தந்தை

 திருக்குவளையில் அஞ்சுகத்தின் கருவறையில் 
உதித்த சூரியனே//

மாச் செய்யலால்
புகழ் பொறித்த நற்சேரன்//
                     நீயன்றோ!

நிலைத்திருக்கும் கல்லணை போலவே

வள்ளுவக் கோட்டத்தை
அமைத்திட்ட
நற்சோழன்//
   ‌‌                   நீயன்றோ!

தலைச்சங்கம் மூன்றமைத்து
தமிழ் வளர்த்தது  
போலவே//

தமிழ் வளர்த்திட்ட
தகைமையான
பாண்டிய மன்னன் //
                       நீயன்றோ!

கலை மிளிர்ந்த
மூவேந்தர் ஆட்சி போலவே//

கவின் ஆட்சி தந்த திராவிடத்தின் 
உதய சூரியன்//             ‌                                                   ‌                  நீயன்றோ!
சமமென்னும் சமத்துவ புரத்திணை உருவாக்கியவர்//
                       நீயன்றோ!
சிந்தனைக்கும் எட்டாத விதவை மறுமணங்களை
ஆதரித்தவர்//
                  நீ‌‌யன்றோ!

சந்தனத் தமிழை செம்மொழியாக்கிய
பெருமைக்குரியவர்//
                       நீயன்றோ!

ஆட்சியில் மாட்சியுடன் அமர்ந்து காட்சிக்கு எளிமையாவர்//
                       நீயன்றோ! 

உழவர்த் தம் பொருள் விற்றிடவே சந்தை அமைத்தவர்//
                      நீயன்றோ! 

திராவிட மொழியாம் தமிழ் மொழியை 
ஒளிரச் செய்தவர் //
                      நீயன்றோ!  

சட்டமன்றத் தேர்தல் தோறும் சரித்திரம் படைத்தவர்//
                       நீயன்றோ! 

தமிழ் காக்கும் தலைவனாக// தரணியெங்கும் வலம் வந்த தலைமகன்//
                      நீயன்றோ!

திராவிட மொழியாம் தமிழ் மொழியை ஒளிரச் செய்தவர்//
                      நீயன்றோ !

தமிழ் ஒளி ஒளிரும் வரையே//
தமிழர் மனத்தில் திராவிடச்
சூரியன் ஒளிருமே//


பெ.சித்ரா இளஞ்செழியன் 
பள்ளி  முதல்வர்
படைக்கலன் தொழிற்சாலை உயர்நிலைப்பள்ளி
(CBSE)
ஓஎப்டி ,  திருச்சி 16.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

0045. 

வணக்கம்

சாதனை  மாமனிதர்

இந்திய வரலாற்றில் தனிச்சிறப்பு தலைவரே!

தமிழர்களின் வாழ்வில் ஒளி ஏற்றியவரே!

தமிழ் தாயின் அழகிய தலைமகனே!

தேசிய அரசியல் வாழ்வில் மூதறிஞரே!

குறள் ஓவியம் படைத்த நாயகனே!

தலை நிமிர்ந்த தமிழகத்தின் முகவரியே!

நூற்றாண்டை கடந்த தெளிந்த நுண்ணறிவே!

சமூக நீதியின் அவதார புருஷரே!

தனக்கு உவமை இல்லாத தலைவரே!

பெரியார் பட்டறையில் உதித்த சூரியனே!

அண்ணா வழியில் உருவெடுத்த
 சிங்கமே!

பல்துறையில் சிறந்த விளங்கிய வித்தகரே!

காலம் அளித்த நற் கரும்பே!

அரசியல் களத்தில்  இலக்கியத் தோட்டாவே!

சமூக நீதியின் மறையாத சூரியனே!

செம்மொழியை வளர்த்த செம்மொழி நாயகனே!

மக்களின் இதயத்தில் நீக்கமற நிறைந்தவனே!

தமிழ்நாட்டின் அரிய இனிய பொக்கிஷமே!

     வாழ்க!
      தமிழ் வாழ்க!!! 

      முனைவர்.
இரா.வனிதாமணி
உதவிப் பேராசிரியர்
தமிழ்த்துறை
குயின்ஸ் கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரி புதுக்கோட்டை

@@@@@@@@@@@@@@@@@@@@@@@

0046.

 கலைஞர் வாழிய நின் புகழ்

அஞ்சுகத் தாயின் அருந்தவப் புதல்வரே //

ஆட்சியில் பலப்பல புதுமைகளை புகுத்தியவரே//

 இன்னல் செய்தாரை அன்றே மறப்பவரே//

 ஈடில்லா உழைப்பில் உறுதி உடையவரே //

உலக வரலாற்றில் உன்னதஇடம் பிடித்த வரே //

ஊர் போற்றும் தளபதியை தந்தவரே //

எழுத்தால் மக்களை கவர்ந்த நாயகனே//

 ஏழைகளின் இன்னல்களை 
போக்கிய தலைவரே//

 ஐயம் அறவே அகற்றும் சுடர் விளக்கே//

 ஒற்றுமைக்கு குரல் கொடுத்த உத்தமரே//

ஓயாப் புகழை பெற்று தந்தவரே //

ஔடதமாய் புவியில் என்றும் வாழ்பவரே//

பல்வகை இடரும் பாங்குற கடந்து //

தமிழ்மொழி நாளும் தழைத்திடல் கண்டோம்//

 தமிழக முன்னிலும் தலை நிமிர்உற்றதால்// 

தமிழர் இன்று தகவாய் வாழ்கின்றனர்//

 தமிழுக்கும் தமிழினத்திற்கும் தன்னையே அர்ப்பணித்த//

 முத்தமிழ் காவலர் முதல்வர் கலைஞர்//

 வாழிய நீடூழி வாழிய செந்தமிழ்//

  கவிஞர் ந.மலர்க்கொடி,தலைமை ஆசிரியர்,பெரம்பலூர்.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@

0047.

திருக்குவளை மலரே...!
*****"***************
தமிழாய் வாழ்ந்த தன்னிகரில்லா பெருந்தகையே//
தரணி போற்றிட்ட தமிழ்த்தாயின் தலைமகனே//
வள்ளுவனுக்கு கோட்டம் அமைத்திட்ட வள்ளலே//
சமச்சீர் கல்வியை தந்திட்ட ஆசானே//
சமத்துவபுரம் அமைத்திட்ட உன்னத சான்றோனே//
ஓய்வறியாமல் உழைத்திட்ட ஒப்பற்ற இளைஞனே//
 முத்தமிழ் முதல்வனே செம்மொழி சிற்பியே//
ஒளிமிக்க திராவிட தீபத்தின் தூண்டுகோலே//
அண்ணா நூற்றாண்டு 
நூலகத்தை தந்த அறிவுச்சுடரே//
உலகத் தமிழ் மாநாட்டின் நாயகரே//
வள்ளுவனுக்கு வானுயர 
சிலையெடுத்த சிற்பியே//
அஞ்சுகத்தம்மை ஈன்றெடுத்த அணையா விளக்கே//
வங்கக்கரையோரம் துயில் கொண்ட சூரியனே//
வாழ்வாங்கு வாழ்ந்து வரலாற்றில் தடம்பதித்தவரே//
பூம்புகாரையும் பராசக்தியும் படைத்திட்ட பாவலரே//
தன்னிகரில்லா தமிழக வரலாற்றின் தலைமகனே//
ஐவகை நிலத்திற்கும் ஆற்றல்மிகு தலைவனே//
திருக்குவளையில் மலர்ந்திட்ட தமிழ் மலரே//

கவிஞர்.
ந. உதயகுமார்.
கொளத்தூர்.
ஆசிரியர்.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@

0048.

அருந்தமிழ்த் தலைவர் கலைஞர்.
##########################

கொஞ்சுதமிழ்த் திருநாட்டில் திருக்குவளைச் சிற்றூரில் 

அஞ்சுகத்தாய் ஈன்றெடுத்த அருள்வடிவே கலைஞர்மகான்

பகுத்தறிவு பெட்டகமாம் பெரியாரின் பாசறையில்

அகத்தூய்மை அண்ணாவின் அறிவுச்சுடர் மாணவராம்

 காஞ்சியிலே அண்ணாவின் கழகத்தை ஆதரித்து

வாஞ்சையுடன் பட்டிதோறும் முரசொலித்த போர்வாளாம்

கழகத்தைக் காத்திடவே கதிரவனாய் உழைத்தவராம்

பழக்கத்தில் மக்களுக்குப் பாங்கான தொண்டரவர்

அண்ணாவின் இதயத்தை இரவலாகப் பெற்றவராம்

ஆட்சியிலே பெண்களுக்குத் தனித்திட்டம் வகுத்தவராம்

கலைஞானம் மிக்கவராம் காவியத்தின் நாயகராம்

ஏழையரின் வாழ்வினிலே எழில்கூட்ட உழைத்தவராம்

ஊன்உருகி உடல்மெலிந்த உழவர்கள் உயர்வதற்கு

உழவுசந்தை அமைத்திட்ட உத்தமராம் சற்குருவாம்

சாதிமதப் பேதமின்றிச் சமத்துவத்தைப் படைத்தவராம்

நாதியற்ற மக்களுக்கு மறுவாழ்வு கொடுத்தவராம்

தமிழகத்தின் தவப்புதல்வர் தத்துவத்தின் தனிப்பிறவி

அமிழ்தினிய தமிழாக அங்கமெலாம் நிறைந்தவராம்...

  M.K.அர்ச்சுணன்
 திமுகழக மூத்த   உறுப்பினர்.
இராசபாளையம்
விருதுநகர் மாவட்டம்.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@

0049.

முத்தமிழ் அறிஞர் விருது
கவிதை போட்டி
---------------------------------------

நவீன தமிழகத்தின் அவதார புருஷர்.

சனாதன வேதங்களை வேரறுத்த முதல்வர்.

மக்கள்நல திட்டங்களை இந்தியாவில்  முதலில்

கொண்டு வந்த தமிழக முதல்வர்.

மனிதனை மனிதன் சுமந்த கைரிக்ஷாவை

மிதிவண்டியாய்  மாற்றிதந்த  முதல் முதல்வர்.

கவர்னரேற்றிய கொடியை முதல்வரேற்றும் உரிமைபெற்றவர்.

வங்கிகள்  பேருந்துகள் 
பொதுவுடமை  ஆக்க 

குரல்  கொடுத்து வெற்றிகண்ட முதல்வர்.

பெண் கல்வியை ஊக்கப்படுத்த  திருமண உதவி

சாதிமதம்   இல்லாமல் சந்தோஷமான 
சமத்துவபுரம் 

அனைத்து பிரிவினரும் அர்ச்சகர் ஆகலாமென்ற

 சட்டம்   இயற்றிய   
 நவீன இராமானுஜர் 
 
விவசாயிகளுக்கு  இலவச  மின்சாரம் 
அளித்த  முதல்முதல்வர் 

இளைஞர்க்கு தொழிற்சாலைகள் பெண்களுக்கு சுயவுதவி

ஏராளமாய் அமைத்த அற்புதமான தலைவர் 

தேசத்தின் வால்பகுதியை தலைப்பகுதியாக மாற்றியவர் 

காலத்தாலழியாத
காவியமாய் வாழும் தலைவர்.


கவிஞர் லோ. வரகுண பாண்டியன்,
 உத்தரமேரூர்.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@

0050.

தமிழின் அடையாளமே  
முத்தமிழ் அறிஞரே தமிழின் அடையாளமே//
முத்தான தமிழின் முத்தாய்ப்பான பிறப்பிடமே//
முத்தமிழுக்கு இலக்கணம் வகுத்த சான்றோனே//
முதன்மையாய் திருக்குறளுக்கோர் புகழ்பெற்ற குறளோவியமே//

கலைத்துறையிலே மணிமகுடமாய் சிறப்பான கதாசிரியரே//
கற்போரை எழுதத் தூண்டும் புதினங்க ளே//
கட்டுரைப் படைப்பிற்கோர் ஒப்பற்ற சிகரமே//
கவிதைகளிலே பாத்திரங்களை வடித்தெடுக்கும் சிற்பியே//

செம்மொழியாம் தமிழ்மொழியின் பெருமையை வெளிப்படுத்திடவே//
செம்மையான வள்ளுவர் கோட்டந்தனை அளித்திட்ட//
செழுமையான வளத்துடனே உருவாக்கும் கலைஞனே//
செருக்குடனே தமிழனாய் வாழ்ந்திட்ட பொக்கிஷமே//

தொன்மையான தமிழுக்கு அடையாளமான பேச்சாளரே//
தொன்மையதனை வாழ்விலே கடைபிடித்து நெஞ்சமதிலே//
தொலைநோக்கு பார்வையோடு அமுதாய் அளித்திட்ட//
தொல்காப்பியப் பூங்காவோ பேசிடுதே பெருமைதனை//

எங்கும் தமிழ் எதிலும் தமிழாய்//
மணம் பரப்பியே வாழ்ந்திட்ட நற்றமிழே//

இளம்முனைவர் வ.கமலா
203/45, 13வது குறுக்குத்தெரு,
த.நா.வீ.வா. பகுதி-1,
ஆர்க்காடு-632503

@@@@@@@@@@@@@@@@@@@@@@@

0051.

தலைப்பு
 முத்தமிழ் அறிஞர்

 முத்தமிழ் அறிஞர் முன்னாள் முதல்வர்

 முத்தமிழ் கலைஞர் 
 மூன்று தமிழ் காவலர்

 காவியங்கள் பல படைத்தவர் கருணாநிதி என பெயர் கொண்டவர்

 அண்ணாவின் குரலாய் கடமை கண்ணியம் காத்தவர்!

 தொகுப்பு ஊதியத்தை மாற்ற துரித நடவடிக்கை எடுத்தவர்!

 செந்தமிழின் காதலர் வள்ளுவர் சிலையை வடிவமைத்தவர்

 ஆழ் கடலில் வீசி எறிந்தாலும் கட்டுமரமாக வந்து மகன்வழியே உதவி செய்பவர்!

 அழியாத பல சட்டங்களை அசால்ட்டாக சாதித்தவர்!

 ஆசிரியப் பெருமக்களுக்கு அவரே ஆலயத்தின் தெய்வத்தந்தை!

 கடவுள் இல்லை என்று மக்களை கடவுளாக நினைத்தவர்

 உலக மக்கள் மனங்களில் நீங்கா இடத்தை பிடித்தவர்

 கவிஞர்
 இரா வாசுகி 
பொன்னரசு கள்ளக்குறிச்சி .

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

0052.

தலைப்பு
 ஆதவன்

 ஆதவனே சின்னமாக கொண்டு
 அறியனை பல கண்டவர்!

 அகிலம் போற்ற வாழ்ந்தவர்
 ஆயிரம் நூல்களைப் படைத்தவர்!

 எழுதுகோலும் இலக்கியமும் என் நேரமும்
 நேசித்தவர்

 திருக்குறளுக்கு உரை எழுதிய சிந்தனையாளர்!

 ஓய்வெடுக்க தெரியாத உத்தம தலைவர்!

 மக்களுக்காகவே மாதக்கணக்கில் சிறைச்சென்றவர்!

 வாழ்நாளில் பல சாதனைகள் செய்து வாகை சூடியவர்!

 நல்வழி காட்டிய நல்ல தலைவர் நாடே போற்றும் முத்தமிழ் கலைஞர்!

 வங்கக் கடலோரம் வருவோர் போவோருக்கெல்லாம் வழிகாட்டியா இன்றும்
திகழ்பவர்

 இனி வரும் காலங்கள் எல்லாம்
 எடுத்துக்காட்டாய் வாழ்ந்தவர்

 கவிஞர்
 ஆ பொன்னரசு 
 முதுகலை ஆசிரியர் கள்ளக்குறிச்சி .

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

0053.

எழுதுகோல் நாயகன்


திருக்குவளையில்  பூத்த 
        சூரியகாந்தி மலர்
தெருவெல்லாம் மணக்கும்படி தெளித்த மணம்
கருவெல்லாம் கன்னித்தமிழ் என்னும் மூச்சு
திருவெல்லாம் சேர்ந்தாற்போல் உன் பேச்சு....

பகுத்தறிவு பகலவனின் பாதையில் பயணித்தாய்
வெகுண்டெழுந்து வெற்றிகளை குவித்துக் கொண்டாய்.
தொகுத்து வைத்துப் பார்த்தால் தமிழ்
தொன்மையின் அடையாளமாக ஆட்சி செய்தாய்.

அண்ணாவின் தம்பியென அகம் மகிழ்ந்தாய்
எந்நாளும் நீயே தமிழுக்கு தலைமகனானாய்.
சாமானியனும் படிக்க சங்கத்தமிழ் பொருளுரைத்தாய்.
பேரார்வத்துடன் குறளுக்கு ஓவியம் தீட்டினாய்.

செம்மொழி மாநாட்டின் செழுமை நீ.
நம் மொழி காக்கும் வளமை நீ
வருமுன் காக்கும் சிறப்பு நீ
வந்தபின் எதிர்கொள்ளும் திரள் நீ

கடல் நீரே மையாக மாறினாலும்
எழுதித்தீராத பேரன்பு பேனா நீ.

எழுதியவர்:
ஆசிரியர்.சுதா மாணிக்கம்
I.H.F.D நகர்
சத்திரம் கருப்பூர்
கும்பகோணம் 
தஞ்சாவூர் மாவட்டம் .

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

0054. 

*முத்தமிழ் அறிஞர்*

கலைஞரே
மூத்த தமிழறிஞரே
எங்களின் இதயத்தில் கோவில் கொண்டவரே

நெஞ்சுக்குநீதி தந்த சிங்கத்தமிழரே
அஞ்சா நெஞ்சுடையவரே

காப்பியங்களின் நாயகரே
பூமலபுகாரின் பாவலரே

எங்கும் என்றும் 
உமது புகழ்
பொங்கிப்பரவுதே

செம்மொழியான
தமிழ்மொழியைத்
தந்தவரே
அகரத்தை
முதலென்று

உரைத்த ஐயன் வள்ளிவனின்வழி வந்தே குறளோவியம்
தந்த எங்கள் குலவிளக்கே

நலத்தைச்
சொல்லி
நல்லதை
செய்திட்ட அருந்தமிழ்ப்
பற்றாளரே

தமிழ்த்தாய் தத்தெடுத்தே வளர்த்த தகைமை சால் பெருமைக்
குரியவரே

எங்கள் முத்தமிழ் அறிஞர் கலைஞரே
மூத்த குடிமகனே

மக்களின் மனங்களில் முதன்மையாக வாழ்பவரே

முதல்வரே
மூலவரே
என்றென்றுமே
உமது புகழ்
வாழ்வாங்கு

வாழ்ந்திடுமய்யா
வையகம் உள்ளவரை
கோடிக்கு

புகழ்கண்ட தொல்காப்பிய நாயகரே

கொள்ளை கொண்டு
நெஞ்சங்களை கசடை அழித்தவரே

ஐயமின்றி அழகுத்தமிழை
அழகாய்ச்
ஔவையின்
ரசிகரே
எங்களின்
நாடாண்ட
மன்னவரே

தமிழாண்ட தென்னவரே
உம்புகழ்
இப்புவி
உள்ளவரை
நிலைத்தே நிற்குதய்யா
எங்களின்
முதல்வரே
மூலவரே
தென்னகமெங்கும்
தெளிந்த நடையில் தமிழ்தந்தவரே
மறையெல்லாம்
போற்றுதய்யா
மங்காப்புகழோடு உம்மையே

முனைவர்
கவிநாயகி
சு.நாகவள்ளி
மதுரை

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

0055.  

சரித்திர நாயகன்

ஆர்ப் பரிக்கும் கடலும் அமைதியாகும்//
முத்தமிழ் தலைவரின் பேச்சின் இனிமையால்!!

சுட்டெரிக்கும் சூரிய வெம்மை கதிர்களாம்//
சூழலும் பூமியாம், குளிரும் நிலவாம்//
உலக இன்பத் தேன் - யாவும்//
அறிந்தேன் கலைஞரின் இன்பக் கவிதையால்!!

வான் புகழ் வள்ளுவரின் வரிகளை//
அடி செதுக்கி, அலை கடலில்//
அடங்காத பெருமையாக நிற்க வைத்தது//
முதுமொழி கண்ட தலைவரின் எண்ணத்தால்!!

கட்டுக் கடங்காத திட்ட கொள்கையால்//
வாழ்வியல் இழந்த மக்கள் கூட்டம்//
வெற்றி வாகை சூடி - காலத்திலே//
வீறுநடை‌ போட்டது கலைஞரின் அரசியலால்!!

எதிரியின் போர் முரசு சத்தத்தையும்//
புன் முறுவல் சத்தத்தால் வரவேற்று//
இன்ப கனி தந்து வாழ்த்திடும்//
உயர்பண்பு கொண்ட கலைஞரின் ஆட்சியில்!!

பா.நூருல்லாக்
மதுரை

@@@@@@#@##@@@@@@@@@@@@@@

0056.

கலைஞரின் சாதனைகள்

உழவர்களின் துயர்துடைக்க இலவச  மின்சாரம்  

வங்கிக்கடன் தள்ளுபடியால் விவசாயம் காப்பாற்றியவர்

உழவர்சந்தை என்னும் உன்னததிட்டம் கொண்டு

உழவர்தம் பொருட்களுக்கு அவர்களே விலைபேசி

விவசாயப்பணியை விரிவாக்கம் செய்த மதியூகி

நெசவாளிகளின் துயர்துடைத்து வாழ்விலே ஒளிபெற

நேசமிகு முதல்வரால் தமிழர்களின் திருநாளில்

காளையர்க்கு வேட்டியும் கன்னியர்க்கு சேலையும் 

கனிவுடன் வழங்கிட்ட கண்ணிய கிருஷ்ணன்

கற்பதனால் மட்டுமே தமிழகம் ஒளிபெறுமென

மாணவச் செல்வங்களுக்கு மாநகரப்பேருந்தில் இலவசபயணம்

கற்பதற்கு தேவையான புத்தகங்கள் மட்டுமின்றி 

சீருடையும் காலணியும் வழங்கிய நவயுகக்கர்ணன்

கிராமச் சாலைகளை நகரங்களோடு இணைத்து

பட்டிதொட்டி எல்லாம் மின்சாரம் பாய விட்டு

தமிழகம் முழுமைக்கும் சரிநிகர் சமானமாக்கி

தமிழினை தரணி யெங்கும் பரவும்

 அற்புதநிலை அளித்த முத்தமிழ் அறிஞர் கலைஞர்


கவிதை ஆக்கம்:
ப. பாக்கியராஜ்
பாரத மிகுமின் நிறுவனம்
திருச்சி-14

@@@@@@@@@@@@@@@@@@@@@@#@

0057. 

*கலைஞர்* 
திருவாரூரில் பூத்த செந்தாமரையே !
அண்ணாவின் உடன்பிறப்பே!
 அண்ணாவின் விரல் கையசைவை புரிந்தவனே!
திரை காவியத்தின் சிற்பமே!
தோல்வி காணாத தலைவனே!
பத்திரிக்கை உலகத்தின் நாயகனே!
தமிழகத்தின் தலைமகனே!
தமிழ் மக்களின்  சிந்தனைச் செல்வனே!
 இயல் இசை நாடகத்தின் முத்தமிழ் அறிஞரே!
அரை நூற்றாண்டில் அரசியல் சாணக்கியரே!
ஏழை மாணவர்களுக்கு சத்துணவியல் முட்டை அழித்த நாயகனே!
மக்கள் சேவை போதும் என்று ஓய்வெடுக்க கடல் அருகே சென்றாயோ!
 இல்லை அண்ணாவின் அருகினிலே உறவாடச் சென்றாயோ !
உன் மூச்ச உள்ளவரை தமிழுக்கு உழைத்தவனே!
 உன் உடல் பிரிந்தாலும் உன் புகழ் தமிழிருக்கும் வரை பூத்துக் குலுங்கி கொண்டே இருக்கும்
 வாழ்க தமிழ்! 
வளர்க தமிழ்!!

மதிப்புறு முனைவர் இ.ரவிந்தர்
கிருஷ்ணகிரி கம்பன் கழக தலைவர் கிருஷ்ணகிரி மாவட்டம்.

@@@@@@@@@@@@@@@#@@@@

0058.

*தமிழ்த்தாயின்  கலைமகன்*

சூனில் உதித்திட்ட உதய சூரியனே!
வானில்  நிலைத்திட்ட தமிழ்க் கலைஞனே!

திருக்குவளை முத்துவேலரின் தலை மகனாரே!
அஞ்சுகம் அம்மையாரின் தவப் புதல்வரே!

வளரிளம் பருவத்தில் மாணவ நேசனானாரே!
முரசொலி முழங்கிடவே புரட்சி செய்தாரே!

அழகிரிசாமிபேச்சில் ஈர்க்கப்பட்ட அனல்துளியே!
அகவை14ல் அரசியல் நெருப்பு கனன்றதுவே!

கல்லக்குடி ஆர்ப்பாட்டமே களம் இறக்கியதுவே!
மொழிப்போராட்டத் தலைமை முதன்மை ஆக்கியதே!

இயல் நாடகத்தில் முத்திரை பதித்தாரே!
விருதுகள் எல்லாமும் சிறப்புறச் செய்தாரே!

படைப்புகள் யாவும் சிறப்பு பெற்றதே!
பாரெங்கும் தமிழர்களின் தனித்துவச் சின்னமானதே!

செம்மொழிப் புகழ்மிகு மொழி வேந்தரே!
மடமைகள் கலைந்திட்ட  சீர்திருத்த செம்மலே!

தி.மு.க.வின் பொருளாளராகி நிரந்தரத் தலைவரானாரே!
தமிழ்த்தாயின் நேசமிகு கலைமகன் ஆனாரே!


செவிலியசகோதரி
இர.பாக்யலட்சுமிசுந்தரம்
கோவை.

@@@@@@@@@@@@@@@@@@@@@@

0059.

       தொல் கலைஞரே

அஞ்சுகம் ஈன்ற அகல் விளக்கே!
உதய சூரியனே! ஊக்கத்தின் ஊன்றே! 
எளியவனின் ஏணியாய் ஒடுக்கப்பட்டோரின் முதல்வரியே!

அன்னைத் தமிழில் அரும்பாய் முளைத்து 
எறும்பாய் உழைத்து உயர்ந்த உத்தமரே!
அன்னைத் தமிழுக்கும் ஆதி வள்ளுவனுக்கும்
  சிலை அமைத்து  புல்லரிப்பு     ஊட்டியவனே!

ஏழுகடல் தாண்டி பேசிய ஓசை மொழியை 
போர்க்குரலாய் கிளர்த்தெழ செய்த கம்பீரமே !
முற்றுப்புள்ளியையும் முதற் புள்ளியாய்  துவக்கிய 
எழுகதிரவனே!
நற்கழகம் அமைத்து வெற்றித்திலமிட்ட 
தலைமகனே!

தள்ளாடும் நிலை வந்த போதும் 
தளராமல் தொண்டாற்றிய தமிழரின்  தொல்குடிமகனே! 
சாதி வேண்டாமென உலகெங்கும் சேதி 
சொன்ன உன்னத உயர்க் கலைஞா! 

கம்பனையும் வள்ளுவனையும் உங்களாலே உலகமறிந்தது! 
அன்னைத் தமிழ்த்தாய்க்கு தலையாய புதல்வனே! 
தமிழ்த்தாய்க்கு சிலை அமைத்த தலைமகனே! 

எந்த திசை திரும்பினாலும் உன் முரசு(சொ) ஒலியே ஒலிக்கிறது! 
தளபதியை வழிநடத்திய தன்மானமே! போர்க்களமே! 

முனைவர் நா.குமாரி
உதவிப்பேராசிரியர்
தமிழ்த்துறை
அக்சிலியம் கல்லூரி
வேலூர் -632006

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

0060. 

தலைப்பு: வரலாற்றில் ஒரு கவிஞன்

முத்தமிழ் அறிஞரை போற்றி புகழ

மூவாயிரம் சொற்கள் தமிழில் இருந்தாலும்

பத்தாமல் போய்விடும் அவரின் படைப்பாற்றல்முன்

மூன்றாம் பாலினத்தவருக்கு புதுஅடையாளம் தந்தீர்கள் 

பொன்னை கையில் கொடுத்தாலும் பொன்னர்சங்கர்

 நாவலின் புகழினை வாங்க முடியாது

தூக்குமேடையில் இறந்தோரின் புகழை தான்

கேட்டதுண்டு முதன் முதலில் தூக்குமேடையில்

கலைஞரென்ற பட்டம் பெற்றவர் நீரே

அறிஞர் அண்ணாவின் செல்ல தம்பி

முரசொலியை உருவாக்கிய இலக்கிய ஒளி

தென்தமிழகத்தில் இலக்கிய சிங்கம் இயற்றிய

தென்பாண்டி சிங்கம் இராசராசனிடம் விருது

பெற முடியாது என அறிந்ததால் 

தானோ ராசராசன் விருதையாவது வாங்கிட 

முனைந்ததோ உங்களுடைய தென்பாண்டி சிங்கம்

தழிழை செம்மொழியாக்க போராடிய இலக்கியவாதி

நீதிக்கட்சியில் இணைந்த இலக்கியக்கட்சி திரு.மு.கருணாநிதி.

கா.பிரகதீஸ்வரி, 
கன்னியாகுமரி மாவட்டம் .

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

0061.

கலைஞர் என்னும் காவியம் 
-------------------------------

கருப்பு கண்ணாடியும் கணீர் குரலும்

 கலைஞர் என்றே சரித்திரம் கூறும்

 ஓய்வில்லா சூரியன் மெரினாவில் ஓய்வு

 ஏற்றிவைத்த அறிவுச்சுடர் இன்னும் பிரகாசமாய் 

சங்கஇலக்கியம் முதல் இக்கால இலக்கியம் வரை

 அத்தனையும் உள்வாங்கிய ஒப்பற்ற மாணிக்கம்

 சிலேடைப் பேச்சில் சிந்தனை சிற்பி 

சீரிய கருத்துக்களால் தமிழை சீர்தூக்கியவர்

 திருக்குறளுக்கு உரையெழுதி வள்ளுவர்கோட்டம் அமைத்து

 வானுயர வள்ளுவருக்கு குமரியில் சிலைவடித்தும்

 தொல்காப்பியத்திற்கு உரையெழுதி பூங்கா  அமைத்தும்

 கண்ணகிக்கு சிலைவடித்து மெரினாவில் நிறுவியவரே

 அரசியலை கரைத்துக் குடித்திட்ட சாணக்கியனே

 பெரியாரின் பாசறையில் வளர்ந்திட்ட தமிழ்மகனே

 அறியாமை எனும் இருள் போக்கிட

 முற்போக்கு சிந்தனைகளை அனல்பறக்கும் வசனங்களால்

பாமரனும் புரிந்து கொள்ள வசதியாய்


 வெள்ளித் திரையில் முத்திரை படைத்திட்டவரே

 கலைஞரெனும் காவியம் என்றும் உயிர்ப்புடன்.
------------------------------

 சு. நடராஜன்,
 சிவகிரி,
 ஈரோடு மாவட்டம்.

 @@@@@@@@@@@@@@@@@@@@@@@

0062. 

கலைஞலைப் போற்றுவோமே !!

பாவலர் கருமலைத்தமிழாழன்

அஞ்சுகத்தாய்   முத்துவேலர்  அரும்பு  தல்வர்

அண்ணாவின்   வழிநடந்த  பெருந்த  லைவர்

கொஞ்சுதமிழ்  பேரறிஞர் !  பெரியார்  தம்மின்

கொள்கைவழி  ஆட்சிசெய்த  நறுந்த  லைவர் !

படியரிசி  தந்திட்ட  அண்ணா  போல

படியளந்தார்  இலவசமாய்  அரிசி  தன்னை

விடியலினைக்  காணாத  கண்க  ளுக்கு

விடியலாகக்  கண்ணொளியாம்  திட்டம்  தந்தார் !

பிடிப்புடனே  கைரிக்ஷா   தனையொ  ழித்துப்

பிறரமரக்  கால்மிதிக்கும்  ரிக்ஷா  தந்தார்

குடியிருக்க  வீடில்லா  ஏழை  யர்க்குக்

குடியேற  வீட்டுமனைப்  பட்டா  தந்தார் !

 

தொழுநோயர்  பிச்சையர்க்கு  மறுவாழ்  வில்லம்

தொட்டிலில்லா  குழந்தைகட்குக்  கருணை  இல்லம்

கலப்புமணம்   விதவைமணம்  சட்டம்  செய்தார்

கன்னியர்கள்  மணமுடிக்கத்  தொகையைத்  தந்தார்

நிலத்தமிழை  செம்மொழியாய்  உயர  வைத்த

நிறைகலைஞர்  தமைவாழ்த்திப்  போற்று  வோமே !

 பாவலர் கருமலைத்தமிழாழன் .

@@@@@@@@@@@@@@@@@@@@@@@

0063. 

முத்தமிழ் அறிஞர் விருது_2023

தலைப்பு: அனைத்திலும் நீயே ஐயா.....

தமிழ், தமிழ் மண்ணில் பிறந்து

தமிழ் மண்ணில் வளர்ந்து, அந்த 

மண்ணில் உயிரை விற்று, தமிழ்
 
நாட்டை விட்டும், தமிழ் மக்களை 

விட்டும் பிரிந்த எங்கள் ஐயா!

உன் சங்கத்தமிழும் உன்னை வாழ்த்திச் 

செல்லும், பல கன்னித்தமிழும் உன் 

மேல் காதல் கொள்ளும் அல்லவா!

பலநாட்டுப் பண்போடு திராவிட கலையோடு

பல்வேறு பேரோடு உன்னைப் போற்றி 

புகழ்கிறது, இந்தத் தமிழ் மண்!

கட்சிக் கூட்டமோ போர் ஆட்டமோ

நீ இல்லையே அது இல்லை

பொருளாளராக பொறுப்பேற்று நன்மை செய்து

கட்சித் தலைவராக பொறுப்பேற்று கொடிநாட்டினாய்

பட்டிமன்றமும் சட்டமன்றமும்  பாத்திரங்களோ பாடங்களோ 

பாடப்பகுதிகளோ அனைத்திலும் நீயே
ஏற்றி

வைத்தாயே உன் அரசியல் சரித்திரத்தை..

ஆ ரொசாரியோ ராணி உசிலம்பட்டி.

@@@@@@@@@@@@@@@@@@@@@

0064.

கலைஞரும் தொல்காப்பியப் பூங்காவும்

மூத்த குடியின் முதல் மொழியாம் தமிழ்//

அகத்தியர் தந்த இலக்கண வரம்பும்//

வழிமொழிந்த தொல்காப்பியமும் சொல்ஏர் உழவர்வடித்த //

வாழ்வியல் சங்கப்பாவும்
நாளும்சுவைத்த முத்தமிழ்வித்தகன்//

கடினநடையும் இலக்கணவரம்பும்
எளியோரை அணுகத் தயங்க//

தன்தூரிகையின் துயில்களைத்து வரைந்தார் தொல்காப்பியப் பூங்கா //

வரட்சி வார்த்தைகளை எளியோரின் இன்மொழியில் அடக்கினாய்!//

கதைச் சொல்லியும் கேட்டும் வளர்ந்த மரபாதலால்//

கதை வழியே இலக்கணம் இயம்பியது உச்சம்//

 செறிவும் நிறைவும் நிறைந்த மதிநுட்பம்//

கரடுமுரடாணப் பாதையை சீர்செய்து எளிதாக்கியது //

உம்தூவல்
எழுத்து சொல் பொருள் மூன்றையும்//

 பூங்காவில் உலவவிட்டாய் நுகர்த்தவர் வியந்தனர்//

தித்திக்கும் தெள்ளமுதாம்  இளமை மாறா முத்தமிழை//

 புத்தொளிவிட்டு ஒளிரச் செய்தாய்
உம் புகழ்வாழ்க//

 வாழ்த்தும் தமிழ் வளரும் தமிழ்.....

அ.சத்பதி
கற்பகநாதர்குளம்.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

0065. 

செம்மொழி சிகரம்
********************** 

கருணையின் உச்சமே..

அருந்தமிழ்   சிகரமே......

காக்கும் இறைவனே.....

தமிழர் திலகமே.....

அரசியல் சாசனமே.....

தந்திர மன்னரே.....

சொற்களின் சுடரே....

சுழலும் நாவரசே.......

வீசும் தமிழ்த் தென்றலே..

எழுத்தாளர்களின் எழுத்தாணியே....

எத்திசையிலும்
ஆளுமைச்சுடரே....

வறுமைக்கு வறுமை அருளிய புரவலரே...

பெரும்புலவருக்கும்
பெரிய புலவரே.....

புதைந்து போன பூம்புகாருக்கு
புத்துயிர் புகட்டியவரே..

கைரிக்சா கைவரிசைகளை
சில வரிகளில்
சீர்திருத்தம் செய்தவரே....

வரிகளாக இருந்த
திருக்குறள்தனை
தேவனது ஆலயமாக்கிய
சிற்பியே.....

சட்டமன்ற
அகராதியே......

சிந்தனை
சிகரத்திற்கும் 
ஒளிப்பாய்ச்சும்
உதய சூரியனே.....

ஆக்கம்
ஆளுமைச்சுடர்
கவிஞர்
முனைவர்
அரங்க சக்திவேல் வணிகவியல் துறை
திரு கொளஞ்சியப்பர் அரசு கலைக் கல்லூரி விருத்தாசலம் .

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

0066. 

*முத்தமிழ் அறிஞர்*

உலகெங்கும் தமிழ்வாழ வழிசெய்த தந்தையே!

தமிழை செம்மொழியாக்கி செய்தாய் விந்தையே!

ஊரும் பாரும் வியக்கும் எந்தையே! 

சீரிய
சீர்திருத்தங்களைக் கொண்டது உன்சிந்தையே!

உன் திட்டங்களில் ஒன்று உழவர் சந்தையே!

நீ வராதிருந்தால் யாம் வெறும் ஆட்டு மந்தையே!

பதவி ஏற்பின் போது செய்தாய் ரகசிய காப்பு! 

பதவிக்கு வந்ததும் செய்தவை எல்லாம் சிறப்பு! 

உன் வசனங்களை கேட்டால் ஏற்படும் கொதிப்பு!

உன் பேனாவிற்கும் வேண்டும் சிலைவடிப்பு! 

நீ தமிழுக்காகவே பிரம்மன் படைத்த படைப்பு!

உனைக்கண்டால் தமிழுக்கே ஏற்படும் வியப்பு!

உன்பேச்சால் கண்டோம் உயர் சொப்பனம்!

உரைவீச்சில் வீணர்களுக்கு நீயொரு சிம்மசொப்பனம்!

கலங்கமில்லா நிலை கொண்டது உன்மனம்!

நாளிதழ்கள் உன் பெயர் சொல்லுதே தினம்!

எமனும் தமிழ் கற்க நினைத்தானோ உன்னிடம்!

கற்றுக் கொடுக்க நீங்களும் சென்று விட்டீர்களா அவனிடம்..! 

சு.உஷா, திருவண்ணாமலை.

@@@@@@@@@@@@@@@@@@@@@@

0067.

முத்தமிழறிஞர் கலைஞர்

முத்தான முத்தமிழுக்கும் அறிஞர் பெருந்தகையாக

விளங்கி பூமி ஞாயிறை ‌வளம்

வருவதை போல நீயோ தமிழை 

வளம் வந்து தமிழ் தாய்க்கு

தலை வணங்கிய தலைமகன்‌ அல்லவா?

உன் தமிழ் பேச்சை கண்டு

தமிழறியா மாந்தர்க்கு கூட புல்லறிப்பை

 ஏற்படுத்தும் ஆற்றல் மிக்கவர் நீயல்லவா?

உன் வாழ்நாள் முழுவதும்  தமிழுக்‌‌‌காக

செலவிட்ட  சொல்வளர்‌ நாயகன் நீயல்லவா?

உழைப்புக்கு மறுபெயர் என்றால் அது 

கலைஞர் என்று  சொல்லும் அளவிற்கு

இளம்வயதிலிருந்தே உழைப்பால் உயர்ந்தவர் நீயல்லவா?

தமிழை வைத்து நாடகத்துறை இசைத்துறை

திரைப்படத்துறை வசனத்துறை என உன்

தமிழ் புகாத இடமொன்று உண்டோ?

கசப்பையும் இனிப்பாக்க முடியும் என்றால்

அது உன் தமிழுக்கே உள்ளது!


-பா.கீர்த்தனா,
திருப்பூர்.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

0068.சிந்தனை சிற்பி  கலைஞர்                                                  

 சமூகத்தின் காலச்சுவடு கலைஞர்  மகான்///                                     அண்ணா வழியில் ஆட்சிசெய்த அற்புதமகான்///                     தனது ஆளுமைத்திறனால் மக்களை கவர்ந்தமகான்///                   சமத்துவம் சாதிபேதமில்லா நிகழ்த்தி காட்டியமகான்///            ஏழைமக்கள் பயனுறும் வகையில் வாழ்ந்தமகான்///                 உணர்வுகளுக்கு ஊக்கமளிக்கும் செயல்களை செய்தமகான்///               ஏற்றத்தாழ்வுகளற்ற சமூகசிந்தனை படைத்த வள்ளல்மகான்///             கல்விக்கு மாற்றம் கொணர்ந்த மகத்துவமகான்///              சமத்துவபுரம் அமைத்த ஒற்றுமையின் நல்மகான்///                       உழவர்சந்தை அமைத்து வேளாண்மையை மலராக்கியமகான்///                    சமூக வேலைவாய்ப்பில் உரியவருக்கு இடயொதுக்கீடுதந்தமகான்///                                       செம்மொழி மாநாடு நடத்திய தமிழ்மகான்///                                  நிதிமேலாண்மையை சீர்செய்த சமூகசிற்பி முத்தமிழ்மகான்///           இயல்,இசை,நாடகம்  மிளிரவைத்தமகான்///                                                                 அண்ணாமறுமலர்ச்சித்திட்டம் தந்து ஊராட்சியை காத்தமகான்///                மாற்றுத்திறனாளியின் வாழ்வில் மாற்றமளித்த   வள்ளல்மகான்///                                         உரியவருக்கு அரசின் நலத்திட்டம்   கொடுத்தமகான்///        உலகம் வணங்கும் உத்தம சமூகசிற்பிமகான்///     

முனைவர் எ.செந்தில்வெங்கடாசலம் ஆசிரியர், ஊ.ஒ.தொ.பள்ளி,ஜேடர்பாளையம், எளச்சிப்பாளையம் ஒன்றியம், நாமக்கல் மாவட்டம்.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@

0069. 

தமிழ் போற்றும் அறிஞர்....

தமிழ் நாட்டு முதல் அமைச்சராம்,
முத்தமிழ் அறிஞராம் டாக்டர் கருணநிதி,

தமிழ் நாடு சட்டமன்ற உறுப்பினராம்,
திராவிட முன்னேற்ற கழக தலைவராம்,

தமிழ் திரையுலகில் ஆர்வம் கொண்டவராம்,
தினம் தமிழுக்கு வரிகள் சொன்னவராம்,
கலைஞர் என்ற பட்டம் பெற்றவராம்,
கலைக்கு முத்தி விளங்கும் மூத்தவராம்,

இருப்பிடத்தை கோபால புரத்தில் கொண்டவராம்,
முரசொழி இதழை முதல் வெளியிட்டவராம்,

பொருளாலர் பதவியும் ஆண்டுகளில் வகித்தவராம்,
திரைப்படங்களுக்கு கதை வசனம் எழுதியவராம்,

உலகக் கலை படைப்பாளி விருதோடு,
தமிழ் கலைஞர் கௌரவம் பெற்றவராம்,

சில சட்டமன்ற உரைகளுக்கும் சொந்தக்காரராம்,
இன முழக்க கட்டுரைக்கு ஆசிரியருமாம்,

பதினைந்து நாவல்களின் உரிமை சொந்தக்காரராம்,
சென்னைக்கு கிடைத்த தமிழ் கலைஞராம்.

முஹம்மத் ஷரீப் முஹம்மத் சஜ்ஜாத்(கபூரி),

இளம்கலை பட்டதாரி மாணவன்,
இலங்கை..

@@#@@@@@@@@@@@@@@@@@@@@

0070.

காவியத் தலைவன்

தமிழுக்கு  மூன்றெழுத்து ; தமிழ் தந்த
வாழ்வுக்கு மூன்றெழுத்து; உடல் கொண்ட 
உயிருக்கு மூன்றெழுத்து ; நம் உயிராக
தமிழை ஊடுருவ செய்த டாக்டர்.கலைஞர்  
என்னும் தலைவா விற்கு மூன்றெழுத்து; 
 மூன்றெழுத்து; மூன்றெழுத்து ; மூன்றெழுத்து ;
தமிழ் வளர்த்த கலைஞனின் பேனா
மை தீர்ந்து போகக் கூடும்
ஆனால் காவியம் படைத்த தலைவனின்
புகழுமை என்றுமே தீர்ந்து போகாது;
அறிஞர் அண்ணாவின் ஆரூயிர் தோழனே;
மெரினாவை நினைவிடமாகக் கொண்ட தமிழ் கலைஞனே ....
தமிழுக்கு மூத்த தலைமகனே ....
இயல், இசை, நாடகம் என்ற 
முத்தமிழின் ரசிகனாக திகழ்ந்த நாயகனே ....
தமிழ் மொழியைச் செம்மொழியாக திகழச் 
செய்து காவியம் படைத்த அறிஞனே ...
தேனை நாடும் தேனீக்களைப் போன்று 
தமிழ் மொழியைப் பருகியச் சிந்தனையாளரே....
பாமர மக்களின் பாசமிகு தலைவனே ....
வையத்தையாள கருஞ்சிவப்பு நிறத்தை சின்னமாக
கொண்ட கருணை மனம் கொண்ட தமிழ் காவலனே ....
பூமிதனில் தமிழினைப் பூவாய் துவியவரே ....
திராவிட கழகத்தின் முடிசூடா மன்னனே .....
குளித்தலையில் கொடி நாட்டிய கலைஞனே ...
பெண்களின் பேரன்பைப் பெற்ற பெருமை கொண்டவரே ...

- ச.நவிதா
வளையர்பாளையம் ,கரூர் .

@@@@@@@@@@@@@@@@@@@@@@@

0071.

காலத்தை வென்றவன்

தனிப்பட்ட வாழ்க்கையின் முகவரியாம் திருக்குவளையே!

தமிழ்நாட்டின் வரைபடத்தில் முத்திரை பதித்த திருவாரூரே!

முத்துவேல் அஞ்சுகம் அம்மையாரின் தவப்புதல்வனே!

சிறுவயதிலேயே தமிழன்னையை பற்றால் ஈர்த்தவனே! 

இளம்வயதில் இந்தி திணிப்பிற்கு எதிராக படைதிரண்டவனே! 

பட்டறிவு இல்லாமல் தனிஅறிவால் பத்திரிக்கையை வென்றவனே! 

கலைத்துறையின் வசனகர்த்தாவாக வான் உயர்ந்தவனே! 

உலகத்தில் உயர்ந்த இலக்கணங்களுக்கு இலக்கியவாதியே! 

அண்ணாவின் படையினை ஒருங்கிணைக்கும் பண்பாளனே! 

தமிழ் மக்களின் இதயங்களை உலகம் உள்ளவரை கொள்ளையடித்தவனே! 

வறுமையை வெல்ல துடிப்பான கட்டுமரமாய்...
 
நம்பிக்கை என்ற ஆயுதத்தால் உலக சரித்திரத்தில் முத்திரை பதித்தவனே! 

என்றும் இளைஞர்களின் எழுச்சி நாயகனே! 

இயற்கையால் அழிந்து போன தமிழினத்திற்கு 
அடையாள அடைமொழியாம் - எங்கள் 

செம்மொழியை உலகத் திருவிழாவாய் உலகிற்கு பறைசாற்றியவனே! 

வான்உயர்ந்த புகழுக்கு தமிழன்னையின் இளஞ்சூரியனே! 

அழியாப் புகழோடு மெரினாவில் அடைக்கலமானவனே!

                      கி.மு.செல்வன்,
                      பருகூர்,
                      கிருஷ்ணகிரி மாவட்டம்.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

0072.  
தரணிப்போற்றும் தமிழ் வேந்தன் 
 
எட்டமுடியா சாதனைகளை
 சாத்தியமாக்கிய  சரித்திர நாயகன்    //
 
தமிழ்நாட்டை  தனித்துவமாய் 
வடிமைத்த  அரசியல் சிற்பி    //
 
முத்தமிழை  போற்றி  புகழ்ந்திட்ட 
தமிழ்க்காதலர் //
 
பேனாமுனைகளே  பொறாமையுறும் 
 தலைச்சிறந்த எழுத்தாளர் //
 
முரசொலியில்  எண்ணத்தின்  அதிர்வுகளை 
தெறிக்கவிட்டவர்   //
 
தேன்சொட்டும்  கவி  வரிகளுக்கு சொந்தக்காரர் //
 
தமிழ்மொழியின்  சிறப்பினை  மக்களிடம் எளிமையாய் //
 
எடுத்துரைக்க அருந்தொண்டாற்றிய  தமிழ் வேந்தர்   //
 
 பெரும்புகழ் படைத்த மேதையாய்  போற்றப்பட்டவர்  //
 
அண்ணாவின்  மீது தீராக்காதல் கொண்டவர் //
 
இடிமுழக்க  புரட்சிவரிகளே இவரது  பொக்கிஷம்  //
 
இலக்கியம்  விடுத்து  பல்துறைகளில் தடம்பதித்தவர் //
 
அரசியலில் மகுடம் சூட்டபட்ட மாமனிதர் //
 
திராவிட கொள்கையின்  சிந்தனை திறவுகோலாய் //
 
விதவைக்கு மகுடம் சூட்டி கைம்பெண்ணாக்கியவர்   //
 
மூன்றாம் பாலினத்தை  அங்கீகரித்த  முத்தமிழ்வேந்தர் //
 
தமிழ்மொழியை இமைப்போல் காத்திட்ட பாதுகாவலர்   //
 
இத்தகு பெருமைக்குரிய கலைஞர் ஐயா 
 
 நின்புகழ் யுகம்பல கடந்தும் வாழியவாழியவே  //
 
மதிப்புறு முனைவர்.நா.பாரதி 

( கள்ளக்குறிச்சி )
 

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

0073. 

தமிழ் முரசே கொட்டுங்கள்!
--------------------------------
ஆரூரில் நீபிறந்தாய் அஞ்சுகத்தாய்  மடிதவழ்ந்தாய்
பேரறிஞர் அண்ணாவின் பிரியத்துக் கிடமானாய் 
போராட்டம் பலகண்டாய் புன்னகைத்தே சிறைசென்றாய்
நாடாளும் மன்னனாகி நல்லாட்சி நீதந்தாய்!

எழுத்தாலே எதிரிகளின் இதயத்தை துளைத்திட்டாய்
பேச்சாலே சூழ்ச்சி எனும் வலைதன்னை அறுத்திட்டாய்
பழுத்தாலே கல்லடிக்கு கனிபலவும் பலியாகும்
உளியாலே கொத்தித் தான் பாறைகளும் சிலையாகும்!

கோடானு கோடிமக்கள் குலசாமி நீயானாய்
கும்பிட்டு வருவோரின் குறைதீர்க்கும் தாயானாய்
கோளாறு செய்வோர்க்கு கொதிக்கின்ற தீயானாய்
கோபுரத்தில் கொலுவிருக்கும் தமிழுக்கு சேயானாய்!

எளியோரின் நலனுக்கு எத்தனையோ திட்டங்கள்
ஏற்றம்பல கண்டிடவே எளிதான சட்டங்கள்
வலிய உனை வந்தடைந்து மகிழ்ந்தனவே பட்டங்கள்
வாழ்க எம் கலைஞரென தமிழ்முரசே கொட்டுங்கள்!

முத்தமிழ் அறிஞரே கலைஞரே நீ(ர்)வாழி!
நித்தமுன் நினைவுகள் வாழுமே நீடூழி!!
----கலிஞர்.செங்கதிர்வாணன் 
சென்னை--56.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

0074. 

முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் 


செம்மொழியின் செவிலியோனே தர்மமொழியின் தாய்மகனே ! //
திகட்டாத அழகிய தென்மொழியின் தவப்புதல்வனே //
முத்தமிழின் மூத்தமகனே 
அழியாத புகழ்பெற்றீரே  
அழகான தமிழ்மொழியோடு ! //
பேனா முனையிலே
புதுயுகம் படைத்தீரே ! //
கலைத்துறையின் கருவறையே 
கண்ணிலே காதலைச் சொன்னீரே 
தெவிட்டாத தமிழ்மொழியின் மீது ! // 
இயல் இசை நாடகமெல்லாம் 
இயல்பாய் ஓடியது 
உமது உதிரத்திலே ! //
நாடி நரம்பிலும் உரைத்தீரே
நவரசமான தமிழ்மோழியின் பெருமைகளை !  //
செங்கோலின் கூர்மையான பற்றுடைய தமிழ்க்கதிரவனே ! //
நீர்தான் எங்கள் கலைஞரே  // 
நீரின்றி அமையாது உலகாம் கவிஞரே //
உம்மோடு உம் வரிகளின்றி அமையாது தமிழுலகு ! //

- கவிஞர் கு. ஜனனி ,
   நாமக்கல் .

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

0075. 

முத்திரை பதித்தத் தத்துவக் கலைஞர்
############################

திருவாரூர் அருகினிலே திருக்குவளை சிற்றூரில்
தியாகத்தின் திருவுருவை அஞ்சுகத்தாய் ஈன்றெடுத்தார்
பகுத்தறிவுப் பகலவனும் பண்பாளர் அண்ணாவும்
வகுத்திட்ட அரசியலை வகையாகக் கற்றவராம்

தொழில்துறை பெருகிடத் துணையாய் நின்றவர்
எழில்மிகு கோமான்! எங்கள் கலைஞர்
உழவர் மேன்மை உயர்ந்திடச் செய்தார்
மழலைக் காப்பகம் மாண்புற அமைத்தார்

ஆல்போல் தழைத்திட அருகென வளர்ந்திட
நூல்பல கற்றிட நூலகம் அமைத்தார்
வான்தொட வடித்தார் வள்ளுவர் சிலையை
வையகம் உணர்ந்திட குறள்மொழி உரைத்தார்

இலங்கை மக்களின் இன்னுயிர் காத்தார்
இதமாய் வாழ வழிவகை செய்தார்
வெண்மைப் புரட்சியின் வேந்தர் கலைஞர்
பெண்சமச் சொத்தில் உரிமையைக் கொடுத்தார்

சித்திரை நிலவாம் முத்தமிழ் அறிஞர்!
முத்திரை பதித்தவர் தத்துவக் கலைஞர்..

   அன்புடன்

கவிஞர் மா.சுந்தரசாமி.
செயலாளர்,
அமைப்புசார தொழிலாளர் முன்னேற்ற சங்கம்,
கோவைமாவட்டம்,
89வது வட்டம்,
கோவை--10.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

0076. 

கலைஞர் நூற்றாண்டு கவிதை...

 முத்தமிழ் மூன்று செந்தமிழ் ஒன்று
 வகுத்துக் கொடுத்த செந்தமிழ் தலைவா
 

 கழகம் காக்க
உலகம் பார்க்க
ஆட்சி செய்த அருட்பெரும் தலைவா 

 கண்ணுல பாதி நெஞ்சுல மீதி நிறைந்து இருக்கும் அன்பு தலைவா

 வறுமை ஒழிய ஏழ்மை உயர
திட்டம் வகுத்த உன்னத தலைவா

 வீடு விளங்க
 நாடு செழிக்க
விதை போட்ட
 வித்தக தலைவா

 நலிந்தோர் வாழ இழந்தோர் மீள
வழி வகுத்த
வம்ச தலைவா

 சொல்லும் செயலும் சொன்னதை செய்ய அல்லும் பகலும் உழைத்த தலைவா

 தீண்டாமை ஒழிய இல்லாமை விலக கல்லாமை மறைய பாடுபட்ட தலைவா

 பல முகங்கள் இருக்கும் பாரினிலே
 ஒரு முகமாய் ஒருங்கிணைத்த தலைவா
 

 கவிஞர்
 ப. சூர்ய சந்திரன்
 கம்மங்குடி கிராமம்
 நன்னிலம் வட்டம்
 திருவாரூர் மாவட்டம்
 கைபேசி: 8220765518

@@@@@@@@@@@@@@@@@@@@@

0077. 

முத்தமிழ் வித்தகர் கலைஞர்...

இயல் இசை நாடகத் தமிழை! இவ்வுலகிற்கு அமுதமாய் வழங்கிய வித்தகரே!!
கடலில் கல்லை கட்டி எறிந்தாலும்!
தமிழென்னும் கட்டுமரத்தால் கரை சேர்ந்தவரே!!
என்றும் விடியலாய் உதிக்கின்ற சூரியனே!!
கதிர்கள் வீசி இருளைப் போக்கும்!
காரிருள் அகத்தினில் நல்ல கதிரோனே!!
இயற்றமிழாய் பராசக்தியின் வசனத்தில் இயம்பினாய்!
இமயம் முதல் குமரியோடோ புகழ்!
எட்டுத்திக்கும் தமிழோசை பரவிடச் செய்தாய்!!
செம்மொழியாம் தமிழாலே  இன்மொழி பேசினாய்!
நன்மொழி நாடறிய நலம்பெறச் செய்தாய்!!
கடற்கரைக்கு வெளிச்சம் கலங்கரை விளக்கு!
கல்விக்கு வெளிச்சம் முத்தமிழ் அறிஞரே!!
தொல்காப்பியப் பூங்காவிற்கு குரலோவியம் படைத்தவரே!
மேடையிலே வீசிய மெல்லிய பூங்காற்றே!!
வரலாற்றிற்கு வரலாறு கவி பாடினேன்!
முத்தமிழ் வித்தகரே ஐயா கலைஞரே!!!!

முனைவர் பொன். பூஞ்சோலை,
 ஒட்டை,விழுப்புரம்.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

0078.

குறட்பா 

கலைஞர் புகழ்

குவளையிலே பூத்த கலைஞரை என்றும்
குவலயமே போற்றுவதைக் காண்.!
=====
நேரிசை வெண்பா

*அஞ்சுகத்தம்மையாரின் அன்புப் பரிசு*

அஞ்சுகத் தம்மையின் அன்பில் பிறந்தநல்
நெஞ்ச முடையநம் நாயகன் - செஞ்சொலின்
கொஞ்சு தமிழ்மொழிக் குன்றாப் புகழினில்
விஞ்சிட நின்றவர் வீறு.!
=====
கட்டளைக் கலித்துறை
(ஒற்று நீக்கி அடிதோறும் 17 எழுத்துகள் மட்டுமே வரும்)

*குன்றுபுகழ்க் குறளோவியம் தீட்டியவர்*

அறநெறி வாழ்வை அருளிய வள்ளுவன் ஆற்றியதைத்
திறமுள தாகத் தொகுத்த கலையில் தமிழறிஞர்
அறமதை மாறா தளித்த கலைஞர் அரியவரே
குறட்பாப் பொருளைக் குறளோ வியமாய்க் கொடுத்தவரே.!
=====

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

*எழுத்துலகின் முதல்வன்*

எழுதுகோலே வாழ்க்கையென என்று மாக
  ஏற்றமுடன் எழுத்தாற்றல் எழுச்சி ஆக
பழுதிலாத தமிழ்ச்சொற்கள் புனைந்த தாலே
  பாமரனைக் கவர்ந்திழுத்த பண்பில் தேனே
இழுத்திழுத்துப் பேசுமொழி எழிலாய் வீச
  இருக்கையிலே அமர்ந்தோரை ஈர்த்த நேசன்
முழுமையான பைந்தமிழில் மூழ்கி யோனே
  முத்தான இலக்கியத்தின் முதல்வ னானாய்

=====
பெருவை கி.பார்த்தசாரதி
நங்கநல்லூர், சென்னை.

 

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

0079. 

"எக்காலத்தும் வழிகாட்டும் கலங்கரை விளக்கமே!பகுத்தறிவுச் சுடரே!!

அன்னை அஞ்சுகத்தின் அருமைப் புதல்வரே!//
ஆதவனை அடையாளமாய் அரசியல் செய்தவரே!//இயலாக் குழந்தைகளை மாற்றுத்திறனாளிகளாக அழைத்தவரே!//ஈகைக்குணம் கொண்டு பெண்களுக்கு உதவியவரே!//
உலகத்தமிழ் மாநாடு நடத்தி உயர்ந்தவரே!//
ஊர்போற்ற "திருக்குவளை"க்கு சிறப்புச் சேர்த்தவரே!//
எனக்கு அரசுப்பணி கிடைத்திட வாய்ப்பளித்தவரே!//
ஏற்றமிகு வாழ்வைப் பெற வழிவகுத்தவரே!//
ஐந்துமுறை அரசியல் சிம்மாசனத்தின் முதலமைச்சரானவரே!//
ஒரு தெய்வப்புலவருக்கு கடலுக்குள் சிலை அமைத்தவரே!//
ஓங்கி ஒலிக்கும் உங்களது வசனநடையே!//
ஔடதம் நீக்கி ஆரோக்கியமாய் புன்னகைப்பவரே!//
மண்ணின் மைந்தரே!மகத்தான சாதனையாளரே!//
மாநிலத்திற்குச் சென்னை என்று பெயரிட்டவரே!//
மின்சாரம் இலவசமாய் விவசாயம்,தறித்தொழிலுக்குத் தந்தவரே!//
மீண்டும் பிறந்து சகாப்தம் படைப்பீரா!
முத்துவேலரின் தவமாய் பிறந்த சிங்கத்தமிழரே!//
மூச்சுக்காற்றாய் மக்கள் மனதில் நிறைந்திட்டவரே!//
"அகவை 100"ஐ தொட இருக்கும் எம் தமிழ்த்தாயின் தவப்புதல்வனுக்கு இக்கவிதை சமர்ப்பணம்.
டாக்டர்.கலைஞர். முத்தமிழறிஞருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். வாழ்த்த வயதில்லை,வணங்கி மகிழ்கின்றேன் ஐயா.நீவீர் பிறந்த காலத்தில் நாங்களும் வாழ்கின்றோம் என்பதில் மட்டற்ற மகிழ்ச்சி. ஐயா அவர்களுக்கு "கவிதை" புனைய வாய்ப்பளித்தமைக்கு மீண்டும், மீண்டும் நன்றி. இது நான் பெற்ற பேறு.


கவிஞர்.முனைவர். ச.மீனாட்சி, ப.ஆசிரியை,13-வது வார்டு, வெள்ளாளர் தெரு,தாரமங்கலம்,சேலம் மாவட்டம். 636502.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@

0080. 

முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர்!

கவிதை! நாவல்! வரலாற்று நாவல்!

சிறுகதை! நாடகம்! சுயசரிதை! திரைக்கதை! 

வசனம் என்றே பன்முக  படைப்பாளராக! 

இலக்கியத் துறையின் சிறந்த முன்னோடியாவார்!!

சீர்த்திருத்தக் கொள்கைகளைக் கடைப்பிடித்த சீர்த்திருத்தவாதி!!

அண்ணாமலைப் பல்கலைக்கழகமும் மதுரைக் காமராஜர் 

பல்கலைக்கழகமும் கௌரவ டாக்டர்பட்டம் வழங்கியது!!

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக!  

தமிழகத்தில் ஐந்துமுறை முதலமைச்சராக இருந்து! 

இந்திய அளவில் மிகப்பெரிய அரசியல் 

ஆளூமையாகக் கோலோச்சியவர்!! கைரிக்சாக்களை ஒழித்தவர்!!
 
குடிசை மாற்று வாரியத்தை தொடங்கியவர்!! 

கண்ணொளி திட்டம் கொண்டு வந்தவர்!!

தமிழையைப் போற்றிய சிறந்த அரசியல் 

தலைவராம்!! கலைஞர் அவர்களுக்கு மரியாதைச்

செலுத்தியும்! பொதுமக்களுக்கு உதவிகள் செய்தும்! 

கலைஞர் அவர்களின் புகழைப் போற்றுவோம்!!

முனைவர் வே.விஜி, சென்னை.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

0081.

காலத்தை வென்ற
.....கலைஞர்..கவிதை

காலத்தைவென்ற
...கலைஞர்..நெஞ்சில்
காவியமான கலைஞர்..
ஞாலத்தில்இவர்க்கு
....ஏது..இணை.தமிழ்
கூறும் நல்லுலகில்
..என்றும்இவர்துணை

சொன்னதைச்
...செய்யும் கலைஞர்
சோர்வின்றி
உழைக்கும் கலைஞர்
இன்னார்க்கு
..இன்னதென்றறிந்து
ஏற்புடைத்தாக்கும்
.........கலைஞர்
ஐந்து முறை தமிழக
..முதல்வராய்
அரியணை ஏறிய
...கலைஞர்
ஐயந்திரிபுர
மக்களாட்சி செய்த
....கலைஞர்
வெற்றி என்றும்
...தேர்தலில்
பற்றிக்கொண்ட
...கலைஞர்
வீறுநடை போட்டு
செந்தமிழை.
உயர்தனிச்
செம்மொழியாக்கிய
....கலைஞர்...
ஏழைஎளியர்பால்
...இரக்கமுறுகலைஞர்
இலவசத் திட்டங்கள்
.மூலம்..அவர்வாழ்வு
ஏற்றமுறச்செய்த
.....கலைஞர்..
அத்தியாவசிய
..பொரூட்கள்நித்தம்
.கிடைக்கச்செய்த
....கலைஞர்
இல்லைஎன்றசொல்
...ஆட்சியில்
இல்லாமல் செய்த
...கலைஞர்..
அஞ்சுகத்தாய்பெற்ற
..அன்பான கலைஞர்
அஞ்சாமை.ஈகை.
அறிவு ஊக்கமுடன்
..வாழ்ந்தகலைஞர்
அஞ்சலென்று
..வந்தவர்க்கு
அடைக்கலம் தந்த
....கலைஞர்
அங்கிங்கெனாதபடி
..எங்கும்.என்றும்
எப்போதும்
...உதயசூரியனாய்
..பிரகாசிக்கும்
...கலைஞர்
காலத்தில் கிடைத்த
...கலைஞர்..வாழும்
காலமெல்லாம் நாம்
..வணங்கும் கலைஞர்

..கவிஞர் மீரா என்கிற
மீனாட்சிசுந்தரம்
18..250.. CRP..LAY.OUT
B.D.O..காலனி
மங்கலம் பாதை
..பல்லடம்641664 
திருப்பூர் மாவட்டம்
 

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

0082.

காலமெல்லாம் கலைஞர் வாழ்க


கடமை தவறாது உழைத்த கலைஞரே//

காலமெல்லாம் கருணையுடைய
நல்ல தலைவரே//

கிறங்கடிக்கும் வசனங்களைப் படைத்த கவிஞரே//

கீழ்வானத்திவ் சிவந்து நிற்கும் நட்சத்திரமே//

குடிசைமாற்று வாரியம் அமைத்த அட்சயப்பாத்திரமே//

கூற்றுக்களைக் காப்பாற்ற உழைத்த உத்தமரே//

கெட்டவர்களுக்கும் கேடு நினைக்காத மகானே//

கேட்காமலே  நன்மைகள் செய்த நற்கேடயமே//

கைரிக்‌ஷாக்களை ஒழித்த ஏழைப் பாங்காளரே//

கொடுத்துக்கொடுத்து சிவந்த கைகளையுடைய வள்ளலே//

கோடியில் ஒருத்தராயிருந்து புகழ்பெற்ற உத்தமரே//

கௌ ரவமாய் தமிழகத்தை தலைநிமிர்த்திய ஆளுமையே//

தமிழுக்காக தன்னலமில்லாமல் உழைத்த தமிழ்ச்சுடரே//

தாயகத்தை எதிரிகளிடமிருந்து காத்த மாமன்னனே//

திருக்குறளுக்கு 
 தீர்க்கமாய் உரையெழுதிய திராவிடச்சூரியனே//

துணிவுடன் செயலாற்றிய 
சரித்திர நாயகனே//

தூங்காமல் துடிப்புடன் உழைத்த உன்னதமானவரே//

தென்னாட்டுச்சிங்கமாய்  நின்ற தங்களை போற்றுவோமே//


தமிழ்கவி.
அ.பாண்டிமுனியம்மாள்,
இடைநிலை ஆசிரியர்,
மதுரை.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

0083.
முத்தமிழ் அறிஞரே! முழுமதியே!

தமிழ்ப்பணி ஆற்றிய தவப்புதல்வர் கலைஞரே!//
அமிழ்தினு மினிய அருந்தமி ழார்வலரே//
அரசிய லாளுமை 
அதீதமாய் பெற்றவரே//
முரசொலி பத்திரிகை மூச்சாய் நடத்தினீரே!//
முத்தமிழை என்றும் முக்கனியாய் சுவைப்பவரே!//
தித்திக்கும் கவியை திரைக்கு அளித்தவரே//
எத்திக்கும் நும்புகழ் ஏட்டினில் வீசுதே//
நித்திலமாய் பவளமாய் நீங்காது ஒளிருதே//
முத்துவேலர் பெற்றெடுத்த முத்தமிழ் நாயகனே//
சொத்தில் பெண்களுக்கு சமஉரிமை பெற்றவரே//
நித்திரை அடைந்தாலும் நின்புகழ்  ஓங்கிட//
சொத்தாய் தமிழகம் சுவாசிக்கு முயிர்வளியே//
சோதியாய் மாநிலத்தில் சுடர்விடும் சூரியனே!//
ஆதியாய் எழுத்திற்கு எழுதுகோல் தந்தவனே//
கவிபடைத்த கவிஞன் கற்கண்டாய் பாடியவர்//
புவிக்கு விருதாய் செம்மொழி ஆக்கியோனே!//
நூறாவது பிறந்தநாளில் நூலோர்பா   மாலையாக்கி//
ஆறாத நின்புகழை அகமகிழ்ந்து போற்றிடுவோம்//
இவண்,
இர.அலமேலுரூப்சேகர்,
அரக்கோணம்.
இராணிப்பேட்டை மா.

@@@@@@@@@@@@@@@@@@@@@@

0084.

அவன் தலைவன்...
முத்தமிழ் அறிஞன் திருவுளம் கொண்ட//1
திராவிட கட்சியின் நிகரில்லா தலைவன்//2
தனிநபராக தன் ஆளுமையை வெளிப்படுத்தி
//3
உன் செந்தமிழ் எழுத்துக்களால் இலக்கியத்துறையில்//4
நீ எழுதிய வரலாற்று நாவல்கள்//5
சரித்திரம் பேசுதே அன்றும் இன்றும்//6
தமிழக அரசியல் வரலாற்றின் தாரகை//7
ஐந்து முறை தமிழக முதல்வனாக//8
மக்கள் மனதில் நீங்கா இடம்பெற்ற//9
தரணி போற்றும் உன்னத தலைவன்//10
திருவள்ளுவருக்கு குமரியில் சிலை அமைத்த//11
தமிழ்தாயின் ஆசிகளை அளவில்லாமல் பெற்றவன்//12
எங்கும் தமிழை ஓங்கச் செய்த//13
காலத்தால் அழியாத காவியத் தலைவன்//14
கலைஞர்  சிறப்பு பட்டம் பெற்றவன்//15
மூத்த தலைவனாக உலகை பிரிந்தாலும்//16
உம்மிடத்தை யாராலும் ஈடுசெய்ய முடியாத//17
இன்றைய இளைஞர்களின் முன்னுதாரண தலைவன்//18

மு.நௌ.பா.சஹ்றா
இலங்கை 

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

0085.       

திராவிட கலைஞன் 
 
“ முத்தமிழ் அறிஞனே 
 
  நீ – பகுத்தறிவு கலைஞனே  !
 
உன் வரிகள் திராவிடம் பேசும் 
 
  தீண்டாமையை தூக்கி வீசும் !
 
சமத்துவமே பொதுவுடைமை 
 
   சுயமரியாதை மனித இன உரிமை ! 
 
எனும் கோட்பாட்டை விதைத்தாய் !
 
   அனைத்து சாதியினரும்                 அர்ச்சகராக்கி
 
   சமத்துவம் பதித்தாய் !
 
சாதியத்தை சிதைத்தாய்  !
மதவாத சக்திகளை 
 
வேண்டாமென்று வெறுத்தாய் !
 
    சாதி தீண்டாமையை எதிர்த்தாய் 
 
இந்தி திணிப்பை ஏற்க மறுத்தாய் !
 
    நீ பொதுவுடைமை தலைவனே !
 
கலிகாலம் கண்டெடுத்த தவப்புதல்வனே !
 
   செம்மொழியை உலகம் 
    அறிய செய்தாய்  !
 
தமிழினம் சிறக்க
தமிழ்  புலமை வார்த்தாய்  !
 
    தமிழரின் தன்மானம் காக்க 
    அயராது உழைத்தாய் !
 
வாழ்நாளில் மக்கள் தொண்டாற்றி 
 
     சமத்துவத்தை பேணிக்காத்த…..
 
தமிழ் குடிகளின் நிரந்தர முதல்வனே 
   
  எங்களை விட்டு ஏன் பிரிந்தாய்  ?
 
ஆழ்ந்த துயிலில் நீ கலந்தாய் !
    
   நீ – திராவிடத் தமிழனே 
 
உனைப்போல் எவருமில்லை  கலைஞனே !
    நீ பார்கடல் போற்றும் மாமனிதனே ! “
 
   எழுத்தாளர்.கவிஞர்.A.S.நாகராஜன் 
 ( கள்ளக்குறிச்சி )
 
@@@@@@@@@@@@@@@@@@@@@@@

0086. 

திராவிடத்தூண் கலைஞர் வாழ்கவே
*****************************************
திராவிட இயக்கத்தின் 
ஆணி வேராய்/
திகட்டாத தமிழ்ச்சுவை 
உணர்ந்த மக(கா)னாய்/
ஓயாமல்  உழைப்பதிலே ஓய்வறியாச் சூரியனாய்/
ஒருபோதும் அதிகாரத்திற்கு அஞ்சா
சிங்கமானாய்/

சுயநலமற்ற சத்திய சீர்திருத்த 
வாதியாய்/
பயமறியா பார் போற்றும் தலைவா/
கயவர்களை சொல்லாயுதம் கொண்டு வீழ்த்தி/
கண்ணியம் காக்கும் 
புண்ணியவானாகத் திகழ்ந்தீர்/

பழி வாங்க எண்ணிடும்
பாசாங்கினரை/
பணிந்து நாணும்படி 
நற்செயல் புரிந்து/
சீர்மிகு ஆற்றலாய் 
சிந்தனைச் சிற்பியாய்/
கூர்மிகு ஆயுதமாம் 
எழுதுகோலை துணையாக்கினாய்/

ஒற்றைப் புன்னகையில் 
பற்றோடு உறவாடி/
நற்றமிழ் தவழ 
நயமுடன் திகழ்ந்து/
மக்கள் நலம்
பெற வேண்யே/
மனதார பாடுபட்ட 
கலைஞரே  வாழ்கவே/

கவிஞர் முனைவர் செ.ஆயிஷா
பல்லடம்.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

0087.

*தமிழாய் நிலைத்த கலைஞர்*

ஒப்பற்ற தமிழ் மொழி கொண்டு 
உலகை ஆளும் வித்தை கற்று 
தமிழர் துயர் நீக்கிய பேனாவே

கண்டு படித்த யாவும் கொண்டு 
திரை வசனம் எழுதி அறிவால்
இருள் அகற்றிய கொள்கை தீபமே

உன் மேடை மொழி கேட்டு
உடன் பிறப்பாய் மாறிய கூட்டம்
எதிர் பதமாய் நின்றவர் ஆட்டம்
முடிவது கண்ட வரத்தின் வடிவே

ஆட்சி அதிகாரம் குலுக்கி போட்டாலும் 
கட்சி பிடிமானம் நழுவாது ஆண்டு
மாட்சிமை மீட்க இயற்றிய சட்டமே

எத்தனை இடரையும் இயல்பாய் எதிர்கொண்டு
சாணக்கியபுரிக்கு பாடம் நடத்திய தலைவரே

புகழ்கோடி தேடி அடைந்து உயர்ந்தும்
கடைக்கோடி மனிதர் வாழ்வு உயர
தன்னுயரம் தாண்டி சாதித்த கலைஞரே

கு.கணேசசண்முக சுந்தரம் 
கோவை.

@@@@@@@@@@@@@@@@@@@@@

0088.

ஓய்ந்ததே தமிழோசை...

முத்துவேலின் முத்தானமகனாய்
அஞ்சுகத்தின் அருந்தவப்புதல்வனாய்!
தமிழ்க்கடலில் முத்துக்குளிக்க
தமிழ்மகனாய் அவதரித்து! இலக்கியமெனும் பாற்கடலை அருந்திய புத்திரனே!

சங்கத்தமிழ் முதல் சமகாலத்தமிழ்வரை ஆராய்ந்தவரே!
ஐந்து முறைதான் தமிழ்நாட்டை ஆண்டிருந்தாலும்!
பலமுறையாவது தமிழ் அவைகளை ஆண்டிருப்பீர்!

தீப்பொறிப்பறப்பதுபோல வசனங்களை அடுக்குமொழியில் உரைத்தவரே!
கடமை கண்ணியம் கட்டுப்பாடு உங்களுயிரானதே!
தஞ்சாவூரில் 133அடிகொண்ட திருவள்ளுவர் சிலைவடித்தவரே!

 கற்பின் நாயகிக்கு கடலோரத்தில் சிலைநிறுவியவரே!
வியத்தகு சரித்திரம் படைத்த பகலவனே!
முரசொலியாய் வலம் வந்த வீரமன்னவனே!

எண்ணிலடங்காத சேவைகள் புரிந்த கலைஞரே!
எங்கள்தமிழ்மொழியை செம்மொழியாக்கிய வித்தகரே!
கவிதையின் நாயகனே முத்தமிழ் தந்தையே!

அறிவாலயத்தின் அறிவுச்சுடரே இன்று நீங்கள்!
அண்ணா பெரியாரின் அணைப்போடு கலந்துவிட்டாலும்!
மெரினாகடலோரத்தில் தமிழனுக்கோர் வெளிச்சமாய் திகழ்கிறீர்களே!  

எம்.லீலா வினோதினி,
 இலங்கை.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@

0089. 

உள்ளம் கவர்ந்தவர் கலைஞர்


அண்ணா பெரியாரின் ஈடில்லா அன்புத் தம்பியே

அஞ்சுகத் தாயின் 

மடியினிலே ஊர் மெச்சிட பிறந்தாயே 

உள்ளத்தால் சிறந்து துணிந்து முயற்சியால்

அனைவரின் உள்ளத்தில் அழியா சிலையானாயே 

நல்லன எண்ணி நன்மைகள் புரிந்து

உயர் அன்பினிலே நல்ல பண்பினிலே

கடமை உணர்வை நெஞ்சில் காத்து

மக்களின் கொடுமை காணின் துடித்து எழுவாயே

சிந்தனை நிலத்தில் இலக்கிய பயிர் வளர்த்தாய்

செயலில் புதுமை திறன் விளைத்தாய்

செந்தமிழ் மொழிக்கும் இனத்தார்க்கும்

சிறுமை என்றதும் கொதித்து எழுந்தே

பெருமை சேர்த்தாய். உயிர் தமிழர்க்கே 

இன்பத் தமிழில் காவியம் நூறு வடித்தாய் 

நெஞ்சுக்கு நீதி அஞ்சாமல் படைத்தாய்

மூச்சும் பேச்சும் தமிழாக
முழங்கினாய் இறுதிவரை

ஏச்சும் இழிவும்  எதிர் வரினும் 

எள் முனை அளவும் நீர் கலங்கிடாயே

மனிதரில் சமத்துவம்  கண்ட  நாயகரே 

வாழ்க வாழ்கவே ...!

கவிஞர் .செ .கிரேஸ் பரிமளா .எம் ஏ பிஎட் ஆசிரியை.லால்குடி.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@

0090. 

கருணைக் களஞ்சியம் கருணாநிதி

நட்பின் நயத்தை நனிவுடன் நல்கிய,

 மாணவ நேசனில் மனிதம் காட்டிய,

மன்றத்தால் தமிழைத் தழைக்கச் செய்த,

பல்லாயிரம் பகுத்தறிவை பராசக்தியில் புகுத்திய,

மன்னனின்  மனோகரனால் மறுமலர்ச்சிக் காட்டிய,

மன்னனை   மந்திரி குமாரியில் மாற்றிய,

 மலைக் கள்ளனில் மாவீரம் காட்டிய,


 இராஜகுமாரியில் இளவரசியின் இன்னல் காட்டிய,

 பொன்னர்சங்கரில் பொறுமையின் பலன் காட்டிய,

'பரப்பிரம்மத்தில்' பலருக்கும் பகுத்தறிவு காட்டிய,

 சமூக நாவல்களில் சமத்துவம் காட்டிய,

 சரித்திர நாவல்களில் சூழலைக் காட்டிய,

 இனியவை இருபதில் சுற்றுலா காட்டிய,

விவசாயிகளின் வேதனையற்ற வாழ்வைக் காட்டிய,

எதிராளியையும்  என் நண்பரென ஏற்ற,

நெஞ்சுக்கு நீதியில் நெக்குருகச் செய்த,

 நினைவாற்றலையே நாட்குறிப்பேடாய் நிலைக்கச் செய்த,

வள்ளுவரின் வாக்கின் வியன்மிகு கலைஞரே! - 

      -வாழுலகில் நிம்புகழ் ஓங்குக!!!!

வே. ஸ்வர்ணா, கடலூர் 

 

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

0091. 

*கவிதைத் தலைப்பு:* *முத்தமிழ் அறிஞர் கலைஞர்* 

கலைகளின் கலைக்களஞ்சியமே காவியத் தலைவரே..!

காலத்தால் கரைந்து சென்ற கலங்கரை விளக்கே....!

சாதிமத பேதங்களைத் தகர்த்தெறிந்த சாதனையாளரே...!

முத்தமிழ் வித்தகனே மூத்த அறிஞரே....!

திராவிடத்தின் செங்கோல் ஆட்சி ஆளரே....!

கதை கவிதை எழுதுவதில் கலைமாமணியே....!    

உலகம் உள்ளவரை உதிக்கும் சூரியனைப்....

போன்று புகழ் உச்சம் தொட்டவரே....!

தமிழைச் செம்மொழியாய் தந்த தமிழ்வித்தகரே....!

முத்தமிழ் அறிஞரே முன்னாள் முதல்வரே....!

தமிழுக்கு அடைக்கலம் தந்த  சங்கத்தமிழே....!

திரைப் படத்தின் திறனாய்வாளனாய் திகழ்ந்தவரே.....!

நலத்திட்டம் பல நாட்டிற்குத் தந்தவரே....!

மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்தவரே....!

மனிதருள் மாணிக்கமாகத் திகழ்ந்த மன்னவரே...!

உலகெலாம் தமிழை உயரச் செய்தவரே.....!

ஓங்குக உன் புகழ் உலகம் உள்ளவரை....! 

வாழிய பல்லாண்டு  உம் புகழ்....! 

ப. லாவண்யா,

முழு நேர முனைவர் பட்ட ஆய்வாளர், ஸ்ரீமத் சிவஞான பாலய சுவாமிகள் தமிழ், கலை, அறிவியல் கல்லூரி, மயிலம். விக்கிரவாண்டி.

@@@@@@@@@@@@@@@@@@@@@@

0092.கலைஞரின் தமிழ்க்கொடை
தமிழ் அன்னை ஈன்றெடுத்த தவப்புதல்வனே//
தமிழ் அன்னையின் செழுமைக்குக் காரணனே//
நின்பிறப்பு, வளர்ப்பு, அரசாட்சியின் ஏற்றத்தாழ்வு//
இவற்றிற்கு நெஞ்சுக்கு நீதி ஆறுபாகம்.//
சிந்தனைத் திறத்தையும்  கருத்து வளத்தையும்,//
உலகிற்குப் பறைசாற்றும் பெட்டகங்கள் பல.//
சங்கஇலக்கிய சாறெடுத்து சங்கத்தமிழ் தந்தவனே,//
இயற்கையின் எழில் ஓவியத்தை ரசித்து//
இனியவைஇருபது பயண இலக்கியம் ஈந்தவனே,//
நாட்டின் சரித்திரத்தைத் தென்பாண்டி சிங்கம்//
ரோமாபுரிபாண்டியன் என்று நிலை நாட்டியவனே,//
புதையல், ஒருமரம் பூத்தது என்னும் நாவல்கள்//
சமூக மறுமலர்ச்சியின்
அடையாளங்கள் ஆகும்//
கடித இலக்கியங்களால்
கலைத் திறத்தையும்,//
கற்பனை வளத்தையும்
பண்பாட்டையும் ஊட்டியவனே,//
தமிழன்னையைப் பலவிதத்திலும் அலங்கரித்த செம்மலே//
தமிழன்னை உன்னை அரியணையில் அழகு பார்த்தாள்.//
நின் புகழ் தரணியில் ஓங்கட்டும்! 


   முனைவர்.சு.ஏஞ்சல் லதா,
வாவு வஜீஹா வனிதையர் கல்லூரி,
காயல்பட்டினம்.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

0093. உதய சூரியன் 

1.திருக்குவளையின் கொடையில் மலர்ந்த சூரியன்!!

2. கட்டுண்டு கடலில் கிடந்தாலும்,

3.கட்டுமரமாகத்தான் மிதப்பேன். அதிலேறி, பயணிக்கலாம்.

4. என்றுரைத்த, தகைசால் தன்னிகராத் தலைவன்!!

5.மணமுடித்ததும், உரிமையற்று மறந்த மண்ணை,

6. மகளிருக்கும் சொத்துரிமை என உரிமைமீட்டு,

7. சமஉரிமையை நிலைநாட்டிய நீதிவழுவா நெறியாளன்!!

8.அடுப்படிக்கும், பிள்ளைபேறுக்கும்
மட்டுமே உறித்தானவர்,

9. இக்கூற்றை பொய்த்து, முப்பது விழுக்காட்டை,

10. பெண்களுக்காய் இடஒதுக்கீட்டை உருவாக்கிய உதயசூரியன்!!

11.விதவை எனும் வார்த்தையிலும், திலகத்தை இழந்ததால்,

12".கைம்பெண்" என்றெழுதி, மங்களிட்ட சூரியன்!!

13. காற்றை மட்டுமே சுவாசிக்காமல், அதினோடே,

14. தமிழ்மொழியை சுவாசித்து,செம் மொழியாய் மூச்சைவிட்டவர்!!

15. போரில் வாள் முனைக்கூர் கண்டு, அஞ்சிடாதவர்க்கூட,

16. தன் பேனாமுனைக் கூர்க்கண்டு அஞ்சிடவைத்த செஞ்சூரியன்!!

17. எழுத்தாளர், கதாசிரியர், ஐந்துமுறை சாதனை முதல்வர்!!

18. நின்புகழ் வான்புகழ் பரவட்டும். நீர் வாழிய, வாழியவே!!

ச. தமிழ்ச்செல்வி,

செவிலியர், இராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை, சென்னை 600003.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

0094. 

முத்தமிழறிஞர் 

திருக்குவளையில் பிறந்தவராம் திருக்குறளுக்கு உரை எழுதியவராம்//1

முத்துவேல் அஞ்சுகத்தின்  அஞ்சாத நல்முத்தாம்//2

பேச்சாற்றலும் எழுத்தாற்றலும் அரசியலும் உயிர்மூச்சாகும்//3

இளம்வயதிலேயே மாணவர் கழகம் அமைத்தவராம்//4

சமூகப்பணி பத்திரிக்கை மாணவர்களை ஈடுபடுத்தியவராம்//5

பதினான்காம் அகவையிலேயே அரசியலில் ஈடுபட்டவராம்//6

தமிழ்மொழியைத்
 தன்னுயிராகவே எண்ணி வாழ்ந்தவராம்// 7

அரசியல் தலைவராகவே வாழ்ந்த  தலைவராம்//8

மக்கள் நலனுக்காக பாடுபட்ட முதலமைச்சராம்//9

அரசுஅலுவலர்களுக்கு  வாரிவழங்கிய வள்ளல்  குணமுடையவராம்//10

யோகப்பயிற்சியும்  நடைப்பயிற்சியும் தவறாமல் கடைபிடித்தவராம்//11

எழுத்துலகில் தன்னிகரற்ற நாயகனாகத் திகழ்ந்தவராம்//12

தமிழ்மொழியைச் செம்மொழியாக்கி  அழகுபடுத்திக்  கொண்டாடியவராம்,//13

 அரசியலிலும்   வாழ்க்கையிலும் விமர்சனத்திற்கு அஞ்சாதவராம்//14

தமிழ்நாட்டின் கலாச்சாரத்தை உலகெங்கும் பரப்பியவராம்//15

திரைப்படத்துறையிலும்  தனித்துவம் வாய்ந்த சாதனையாளராம்//16

அறிஞர் அண்ணாவின் கொள்கைப் பற்றுடையவராம்//17

தமிழர்களுக்கு வளமான பாரம்பரியத்தைத் தந்தவராம்//18


ச.சுதாராணி
கவிஞர்/தலைமை ஆசிரியை பூலப்பாளையம் ஈரோடு மாவட்டம். 

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

0095. 

ஓய்வறியாத சூரியனே..

கழகமேகோவில் என கருதி வாழ்ந்தவரே

கழகப் பணிகளை பம்பரமாய் சுழன்று

ஒளிமயமாய் செயலாற்றிய ஓய்வறியா சூரியனே 

கடமை கண்ணியம் கட்டுப்பாடுஎன வாழ்ந்தவரே

உயிரது தமிழென உரைத்திட்ட தலைமகனே

உணர்வெல்லாம் தமிழென உணர்த்திட்ட பெருமகனே

வாழ்வும் தமிழே வளமும் தமிழேஎன

தமிழுக்கு செம்மொழி கொடுத்த தங்கப்புதல்வனே

தீரமும் வீரமும் தீந்தமிழ்ச் சுவையென

மெலிந்த தமிழால் வீரம் புரிந்தவரே

மக்களின் தேவைகளை பூர்த்திசெய்த முதல்வனே

என்னிடங்காத சாதனைகள்செய்த மக்களின் நாயகனே

எளியவருக்கும்         வறியவருக்கும் ஏற்றங்கள் பலதந்தாய்

எண்ணத்திலும் எழுத்திலும் தமிழர்களை உயர்த்தினாய்

நாடெல்லாம் நீயானாய் நாற்றிசையில் வடிவானாய்

நித்திரையை தொலைத்து மக்களுக்காக உழைத்தாய்

முத்திரை பதித்து பலமுறை முதல்வரானாய்

எத்தனை நலதிட்டங்கள் எத்தனை உதவிகள்செய்து

வருங்கால சந்ததிக்கு வழிகாட்டியாய் இருந்தாய்

இறந்தும் இரவாபுகழோடு வாழ்ந்து கொண்டிருக்கிறாய்

 வி.கணேஷ்பாபுஆரணி

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

0096.

செந்தமிழ் சிகரம்

அஞ்சுகம் அம்மையார் பெற்றெடுத்த அற்புதமே //

ஓய்வுக்கும் ஓய்வு தந்த
ஓய்வில்லாச்சூரியனே //

கடலில் தூக்கிப்போட்டாலும்
கட்டுமரமாவேன்
என்றவரே //

கழகத்தைக் கண்ணெனவே கட்டிக்
காத்தவரே  //


நீங்கள் புலவர் பட்டம் பெறவில்லை எனினும் //

புலமையில் நீங்கள் யாருக்கும் நிகரில்லை  //

பராசக்தி வசனமும் பார்முழுக்கச்
சென்றதையா //

மனோகரா வசனமோ மனம் மகிழச்
செய்ததே  //

குறளோவியத்தால் சொல்லோவியம் புரிந்த வித்தகரே  //


கொங்கு நாட்டிலே செம்மொழி
மாநாடுகண்டாய் //

காதலாய் வீரமாய் சோகமாய் சொர்க்கமாய் //

தமிழை உன் போக்கில் வளையச் செய்தாய் //

சொல்வளம் பொருத்தி செவிகளுக்கும் விருந்தளித்தாய்  //

தமிழனாய்ப் பிறந்த
தவப்புதல்வன் நீ  //

தலைக்கணம் இல்லா தமிழ் மைந்தனே  //

வள்ளுவனுக்குச் சமுத்திரத்தில் சிலை
வைத்தவனே  //

சமூக நீதியில் வாழ்கிறாய் என்றும் //

சமூகம் போற்றிட பாராட்டிட வாழ்கிறாய்  //

அ. இராதா  , திருச்சி

@@@@@@@@@@@@@@@@@@@@@@

0097. 

கவின்மிகு   கலைஞர் 

வண்ண மலரெல்லாம் வாடிவிடும் என்பதனால் 
எண்ண  மலரெடுத்து 
எழுத்தாணி நூல்கொண்டு
உண்மைஉறைப்பதற்கே
ஓராரம் புனைந்துவந்தேன் 
கன்னித்தமிழென்னும் 
கனிமொழிஅதிலேதான்

அஞ்சுகம் பெற்றெடுத்த 
அருமைமிகுகாவியமே 
திருக்குவளைஎமக்களித்த
தேந்தமிழ்பெட்டகமே 
திகட்டாஇன்பமதை 
அளித்திட்ட ஓவியமே 
தீயன அழித்துநல் 
வளம் சேர்த்த ஆதவனே...
அன்பகத்தில் அணையிலதாய் 
அமைதிக்கமைவிடமாய் 
பண்பகத்தில் பயனுடைதாய் 
பகுந்துபலத் துறைஉளதாய் 
நன்பகத்தில் நவிலுருவாய் 
நயமதன் திருவுருவாய் 
மண்பகத்தில் மாண்புருவாய் மாநிலத்தில் அவதரித்தீர்...

நேசகத்தில் நிகரில்லா
நினைவுப்பண் நீரெமக்கு 
ஆசகற்றும் ஆசானாம் 
அறிவின் சுடர்கண்எமக்கு 
பேசுதற்கும் பெரிதுவக்கும் 
பேரறிஞர்பெருந்தகையீர் 
வாசகற்கும் வாய்மணக்கும் வள்ளல்நீர்வாய்திறந்தால்.....
உயிரினும் மேலாய் 
உடன்பிறப்பாய் 
எமைநினைத்தீர் ...
உவகைமிளிர்ந்திட 
உயர்ந்த நல்வாழ்வளித்தீர்....

கி சூடாமணி.சென்னை.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@

0098.

கலைஞர் எனும் காவியம்

*******************
இவர் போல் அவர் போலென்பார்

எவரும் அவருக்கு ஈடு இல்லை.

சிறைக் கூடத்தை இலக்கிய கூடமாக்கியவர்

தலைகுனிந்த பேனாவால் இலக்கியங்கள் தலைநிமிர்ந்தன.

மொழிப்பற்றால் தண்டவாளத்தில் தலை  வைத்தார்

இனப்பற்றால் தமிழினம் வாழ வைத்தார்.

சொல்நயம் கொண்டு சொல்லரங்கம் கண்டார் 

கவிநயம் கொண்டு கவியரங்கம் படைத்தார்

உடன்பிறப்பே என்று உரிமையுடன் அழைத்தவர்

மூன்றெழுத்து கவிதையால் அண்ணாவுக்கு தம்பியானார்

மாநில உரிமைக் காத்த மன்னவர்

கல்விப் பயணத்திற்கு பஸ் பாஸ் 

சாதி மறுப்புக்கு சமத்துவபுரம் கண்டவர் 

இடஒதுக்கீடு தந்து இதயத்தில் நிறைந்தவர்

பட்டினியில்லா தமிழகத்தை கட்டமைத்த பாரி

சிங்காரச் சென்னையை செதுக்கிய சிற்பி

முத்தமிழ் அறிஞரென்று
மூத்தோரும் புகழ்ந்தனர்

காலத்தால் அழியாத காவியம் கலைஞர்.

கவிஞர் அ. ஆன்றனி கிளமண்ட் நாகர்கோவில்.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

0099. 

முத்தமிழ் கலைஞர்.

திருக்குவளையில் முத்துவேலருக்கும் அஞ்சுகத்துக்கும் உதித்தவரே//

நாடகம் கவிதை இலக்கியம் படைத்தவரே //

அனுபவத்தையே உரையாக கற்ற நாயகரே //

இளைஞர்களுக்காக மறுமலர்ச்சி இயக்கத்தினை அமைத்தவரே //

தமிழில் பேச்சாற்றலும் எழுத்தாற்றலும் வளர்த்தவரே //

முரசொலியில் ஆசிரியராக செம்மையாக செயல்பட்டவரே //

ஆதிக்க அரசியலுக்காக போராட்டங்களில் ஈடுபட்டவரே//

தமிழுடன் இந்தியை படிப்பதில் தவறில்லை //

திணிப்பது தவறு என்று அறிவுறுத்தியவரே //

இரத்தத்தின் ஓட்டம் தமிழென முழங்கியவரே//

அன்பு மாணவனென அண்ணாவிடம் பெற்றவரே //

சட்டமன்றத்தில் சிம்மக்குரலென வாதங்களை அடுக்கியவரே //

ஓய்வின்றி அரசுப்பணி எழுத்துப்பணி முடித்தவரே //

தமிழுக்காக செம்மொழி மாநாட்டை உருவாக்கியவரே //

முத்தமிழிலும் முதன்மை பெற்ற கலைஞரே//

எத்தமிழருக்கும் வாதங்களை முன்வைத்து போராடியவரே //

ஐம்பதாண்டுகளில் வரலாற்று நாயகனாக புகழ்பெற்றவரே //

உறங்குகின்றீர் நீர் விழித்திருக்கிறோம் நாங்கள் //

பொ.ச.மகாலட்சுமி
கோவை.

@@@@@@@@@@@@@@@@@@@@

0100.

செங்கோல் தலைவன்
-------------------------------------------

திருக்குவளையில் பிறந்த திருத்தொண்டன் நீ

அஞ்சுகத்திற்கு பிறந்த அஞ்சாநெஞ்சன் நீ

திராவிட முன்னேற்ற கழகத்தினை அமைத்தாயே 

அதை திறம்பட வழி நடத்தினாயே 

தூக்குமேடை என்ற நாடகமாம் எம் ஆர் ராதாவால் 

கலைஞர் என்ற பட்டம் பெற்றாராம் 

மேடையில் உன் பேச்சை கேட்டாலே 

சிங்கம் கர்ஜனை கூடத் தோற்குமே 

பள்ளியில் தேர்ச்சி பெறா விட்டாலும் 

உன் சிந்தனையை நாங்கள் படித்தோமே

முத்தமிழில் சிறந்த முத்தமிழ் கலைஞரே

உனைக்கண்டு முத்தமிழை காதல் செய்தோமே 

நீதிக்கட்சியின் தூணாம் அழகிரிசாமியின் பேச்சால் 

ஈர்க்கப்பட்ட நீ அரசியலில் குறித்தாயே

உடன்பிறப்பே என்றே நீ அழைத்தாயே

அச்சொல்லில் நாங்களும் முத்துக் குளித்தோமே 

ஐம்முறை முதல்வரும் ஆனாயே - நீ 

எங்கள் வாழ்வையும் சிறக்க வைத்தாயே!!!!

கோ. ஜெ. கோகிலாதேவி,
புதுக்கோட்டை.

 

@@@@@@@@@@@@@@@@@@@@@@@

முத்தமிழறிஞர் விருது கவிதைப் போட்டி கவிதைகள்

0101. தொடர்ச்சியை பகுதி  02 ல் காண்க