தமிழின அழிப்பு நாள் மே 18

தமிழின அழிப்பு தினம் மே 18 கவிதை

தமிழின அழிப்பு நாள் மே 18

அற்றைத்திங்கள்  அவ்வெண் நிலவில்

நெஞ்சம் மறக்குமா 
நேச உறவுகள் சிதைந்தநாளை
வஞ்சம் தீர்த்தார்களே
வழி(லி)யற்ற வஞ்சகர்கள்

முள்ளி வாய்க்காலும்
மூச்சற்றுப் போனதே
கள்ளமில்லா மனித உயிர்களைத் துப்பாக்கிக் குண்டுகள்  துளைத்தனவே

இரத்த ஆறு பெறுகி ஓட
சிதைந்த உடல்களும்
சில்லறையாய் சிதறியதே

பிஞ்சுகளும் பூக்களும்
காய்களும் கனிகளுமாய்
மரணித்த தமிழின மலர்கள் எண்ணற்றவையே

கொத்து வெடிகளில் கொத்துக் கொத்தாய்ப் பிடுங்கிப் போட்டனர்
படர்ந்த கொடிகளையும் பார்த்திடச் சரித்தனர்
பற்றி எரியும் நெஞ்சத்தின் நெருப்பு அனையாது ஒரு போதும்

நீங்காத நினைவலைகள்
சுனாமியாய் எழுகிறதே
நித்தமும் மாண்டதை
நினைவு கூறுகிறதே

அகிலமே வேடிக்கையில்
எங்கும் மரண ஓலங்கள்
குண்டுகளோடு பொழிந்திட
கேட்க செவிகளும் போதாதே 

எம்மினம் துடித்திட
குருதியும் குடித்தனரே
 கயவர்களின் வெறித்தன வெறிநாய்
ஆட்டம் 

குற்றுயிராய் பிடித்தவர்கள்
பாதி
கொலை வெறி கொண்டு அடித்தவர் மீதி

நடந்தவை அனைத்தும் 
கண்கள் முன்னே
கடந்தவை மறக்காது
காலமும் பதில் சொல்லும்
 
 வருட
நினை வேந்தல்
எம்மின மக்களின் ஆத்மா சாந்தியடையட்டும் 
இறைவா

கவித்தாரகை 
கிருஷ் அபி இலங்கை