கவிஞர் சைலஜாவின் படைப்புகள்

கவிஞர் சைலஜாவின் படைப்புகள்

கவிஞர் சைலஜாவின் படைப்புகள்

எண்ணில் வாசம் செய்து கொண்டிருக்கின்ற  செண்பகவல்லி அம்மாவே ....
★★★★★★★★★★★★★★★★★★★★★

"தெய்வத்திற்கெல்லாம் தாயானவள் எனது அம்மா

அருளுக்கே உரித்தவள் எனது அம்மா

அன்பின் வடிவம் எனது அம்மா

குறைகள் தீர்க்கும் வலிமை எனது அம்மா

புகழ் அளிப்பதில் கோபுரம் கலசம் எனது அம்மா

தடைகளை தகர்த்து எரியும் சக்தி எனது அம்மா

உனக்கு மட்டுமே உரிமையான சொல் எனது அம்மா..


 சைலஜா கணேசன்,
கோவில்பட்டி .

**************************************************

கருவறையில் இருக்கும் என் குலதெய்வத்துக்கு....
 

"என் பாசம் என்ற சிறையில் உள்ளிருக்கும் என் உயிரே ....

என் வாழ்க்கைக்கு அடையாளம் தந்த உறவே .......

என் உறவுக்கு உயிர் கொடுத்த உரிமையை .....

**************************************************

எனது குழந்தை செல்வத்திற்கு  தாலாட்டு பாட்டு 

**********************
"அசையாத உறவே ஆராரோ 

ஆசை மகனே ஆராரோ 

இமைகளை மூடி தூங்கு ஆராரோ 

ஈகையுடன் வளர்ந்திடு ஆராரோ

உறங்கும் வயது ஆராரோ

ஊக்கமுடன் இருந்திட ஆராரோ

எதிர்காலம் இருக்குதடா ஆராரோ

ஏணி போல ஏறிடும் ஆராரோ

ஐயமின்றி வாழ்ந்திடுவாய் ஆராரோ

ஒழுக்கத்துடன் திகழ்ந்திடுவாய் ஆராரோ

ஓங்கிய உலகளந்த தமிழனாய் இருந்துடுடா ஆராரோ "

 ஆராரோ ஆராரோ ஆரிராரோ....

************************************************

என்னை 
விதைத்தவருக்கு 
 ★★★★★★★★★★★★★★★★

மண்ணின் விளைவதற்கு  விதை யானவர் 

மழையாய் 
  முளைக்க செய்தவர்

சூரியன்  வெளிச்சம் தருபவர் 

வேரின் ஈரம் தாங்குபவர்

இலைகளை வளர   வைத்தவர் 

பூவின்  வாசம் கொண்டவர்

காயின் சுவையை அளித்தவர்

விளைந்ததை பார்த்து ரசிப்பவர்

கனிந்ததை விற்கச்  செய்பவர்

எனது தந்தைக்கு மகளாய் .. 


- சைலஜா கணேசன்.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

என் உயிரோடு கலந்தவனுக்கு
************************************

என் காதலை நீ உணர்ந்து விடுவாய் என்று நினைத்து ஏனோ பலமுறை தோற்று நின்ற போதிலும்   மீண்டும் என் மனம் தொடங்கிய இடத்திலே நிற்கின்றது உன் காதலைப் பெற்று விடுவேன் என்ற எண்ணத்தில்


நினைத்த நொடியில் என் அருகில் வந்து நின்றாய்  மகிழ்ச்சி அடைந்தேன் ஏனோ பின்பு தான் தெரிந்தது வந்தது கனவில் என்று மீண்டும் கண்களை இறுக்கி மூடி கொண்டேன் கனவு தொடரட்டும் என்ற எண்ணத்தில்


என் விழிகள் உன்னைத் தேடிக் கொண்டிருந்த போதெல்லாம் ஏனோ உன் விழிகள் என்னை பார்க்க மறந்த போதும் மீண்டும் காத்திருப்பேன் உன் விழிகள்  என்னை   தேடும் என்ற
எண்ணத்தில்

நினைக்க மறந்தாலும் நீங்காத நினைவு நீ மறக்க நினைத்தாலும் மறக்க முடியாத சுவடி நீ  மீண்டும் நினைக்கத் தோன்றியது ஏனோ நீ என்னை நினைப்பாய் என்ற எண்ணத்தில்..

************************************************

 உழைப்பே உயர்வு 

உழைப்பால் உயர்ந்தவன் மனிதன்

மனிதனால் உயரப்பட்டது  விஞ்ஞானம்

விஞ்ஞானத்தால் உயர்ந்துள்ளது  தொழில் வளர்ச்சி

தொழில் வளர்ச்சியால் உயரம் நிறுவனங்கள்

நிறுவனங்களால் உருவாக்கப்படும் வாய்ப்பு

வாய்ப்புகளால் உண்டாகும் முன்னேற்றம்

முன்னேற்றங்களால்  உயரப்படும் நாகரிகம்

 நாகரிங்களால்   உயர்ந்து எழுந்துள்ளது  மக்களின் வளர்ச்சி


க. ஷைலஜா கணேசன் கோவில்பட்டி
 தூத்துக்குடி மாவட்டம் .

*********************************************

செவிலியர்களுக்கு   சமர்ப்பணம்

***********************************


அன்னை தருவது போல் அரவணைப்பு

 ஆசான் தருவது போல் கண்டிப்பு 

 இமயத்தை  போல் சகிப்பு 

ஈகை போல் உழைப்பு 

உறவு தருவது போல் அன்பு

ஊக்கம் தருவதில் பிரமிப்பு

எப்போதும் முகம் மலர்ந்த சிரிப்பு

ஏற்றத்தாழ்வு கருதாத பண்பு

ஐயப்படாமல்      பினியாளர்களை கவனிப்பு

ஒன்றே குலம் என்ற அர்ப்பணிப்பு

ஓடும் நதிகள் போல்  பிரதிபலிப்பு 

ஔவை   கூறியது போல சேவைக்கு இவர்களின் பங்களிப்பு

அஃது மருத்துவத்   துறைகளுக்கே இவர்கள் ஒரு படைப்பு 

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@